twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Doctor Strange In The Multiverse Of Madness Review: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படமா? வாண்டா படமா? விமர்சனம்!

    |

    Rating:
    4.0/5

    நடிகர்கள்: பெனடிக்ட் கம்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன், ரேச்சல் ஆடம்ஸ், ஸோசிடில் காமஸ், பெனிடிக்ட் வாங்

    இசை: டேனி எல்ஃப்மேன்

    இயக்கம்: சாம் ராய்மி

    ரேட்டிங்: 4/5.

    லாஸ் ஏஞ்சல்ஸ்: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படம் எடுப்பதாக ஹீரோ பெனடிக்ட் கம்பர்பேட்ச்சை இயக்குநர் சாம் ராய்மி நல்லாவே ஏமாற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

    இந்த படம் அப்படியே முழுக்க முழுக்க வாண்டா (அ) ஸ்கார்லெட் விட்ச்சின் படமாகத்தான் இருக்கிறது.

    ஹீரோவை விட வில்லனை எந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக காட்ட வேண்டும் என்பதை பல இயக்குநர்கள் இந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தை பார்த்து கற்றுக் கொள்ளலாம். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ததா? மல்டிவெர்ஸில் ஸ்டீவன் ஸ்ட்ரேஞ்ச் என்ன மாயாஜாலம் செய்தார் என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

     என்னது ’நான் கடவுள்’ படத்தில் அஜித் நடிக்க இருந்தாரா?...பேரரசு சொல்லும் புது தகவல் என்னது ’நான் கடவுள்’ படத்தில் அஜித் நடிக்க இருந்தாரா?...பேரரசு சொல்லும் புது தகவல்

    என்ன கதை

    என்ன கதை

    மல்டிவெர்ஸ் டிராவல் செய்யக் கூடிய மாய சக்திகளை கொண்ட 'அமெரிக்கா சாவேஸ்' எனும் பெண்ணிடம் உள்ள சக்தியை பறித்துக் கொண்டு வேறு ஒரு யூனிவர்ஸில் இருக்கும் தனது குழந்தைகளுடன் வாழத் துடிக்கும் வாண்டாவிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஏழு கடல், ஏழு மலையெல்லாம் இல்லைங்க.. பல யூனிவர்ஸ்களை தாண்டி பயணம் சென்று எப்படி தடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

    டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் நெற்றிக்கண்

    டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் நெற்றிக்கண்

    தன்னை விட பல மடங்கு சக்திவாய்ந்த வில்லி ஸ்கார்லெட் விட்ச்சாக வாண்டா மாறி தாக்க வரும் நிலையில், அவரிடம் இருந்து அமெரிக்கா சாவேஸை காப்பாற்ற போராடும் காட்சிகளும், அதற்கு அவர் கொடுக்கும் விலைகளும் ரசிகர்களை அட போட வைக்கிறது. வயது முதிர்ந்த தலை முடி, தாடி நரைத்த டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக நடித்து ரசிக்க வைக்கிறார். சில சர்ப்ரைஸ் ஆன கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் இடத்தில் இவர் அடிக்கும் ஜோக் 90ஸ் கிட்ஸ்களை சிரிக்க வைக்கிறது. ஸ்பைடர்மேன் மல்டிவெர்ஸில் பல ஸ்பைடர்மேன்கள் வந்து உதவுது போல இல்லாமல், இங்கே இவருக்கும் இன்னொரு இவருக்குமே வைத்துள்ள சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன. காதல் காட்சிகளில் ஏமாற்றம் அடைந்த காதலனையும் பெனடிக்ட் கம்பர்பேட்ச் அழகாக திரையில் பிரதிபலித்து கைதட்டல்களை அள்ளுகிறார். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதையே இந்து மதத்தை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், சிவனின் நெற்றிக்கண்ணும் திறக்கப்படும் காட்சிகள் சர்ச்சையாகாமல் இருந்தால் சரி.

    எலிசபெத் ஓல்சன் எக்ஸலண்ட்

    எலிசபெத் ஓல்சன் எக்ஸலண்ட்

    மகன்களை இழந்து வாடும் ஒரு அம்மாவின் கனவில் அவரது இரு குழந்தைகள் வரும் காட்சி ஆகட்டும், அதே குழந்தைகள் தாயை பேயாக பார்க்கும் இடமாகட்டும் தனது நடிப்பால் மெர்சல் காட்டி உள்ளார் நடிகை எலிசபெத் ஓல்சன். எத்தனை படைகள் வந்தாலும், எத்தனை சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் அத்தனை பேரையும் துவம்சம் செய்யும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை அப்படி வடிவமைத்துள்ளனர். அதன் காரணமாகவே இந்த படம் அவருடைய படமாக மாறி விடுகிறது.

    மியூசிக்கல் சண்டை

    மியூசிக்கல் சண்டை

    (ஸ்பாய்லர் அலர்ட்) பிரம்மாண்டமான இந்த மல்டிவெர்ஸ் படத்தில் இசையை ஆயுதமாக்கி டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போடும் சண்டைக் காட்சிகள் அட்டகாசம் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநரின் கற்பனைத் திறமையை அந்த இடத்தில் வொர்க்கவுட் ஆகும் என நினைத்து வைத்தது வேறலெவல். சிவாஜி படத்தில் ஷங்கர் மியூசிக்கல் ஷாப்பில் ஒரு சண்டைக் காட்சியை வைத்தது சற்றே நினைவுக்கு வந்து சென்றது. ஆனால், இங்கே சிஜி மேஜிக் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது.

    பிளஸ் என்ன

    பிளஸ் என்ன

    மார்வெல் தயாரிப்பே படத்திற்கு பெரும் பிளஸ் தான். ஸ்கார்லெட் விட்சின் எமோஷனல் டச் ரசிகர்களை நல்லாவே கனெக்ட் செய்கிறது. மேலும், மார்வெல் சூப்பர் ஹீரோ படத்தில் இந்த முறை ஹாரர் ட்ரீட்மெண்டை இயக்குநர் சாம் ராய்மி நல்லாவே புகுந்து விளையாடி ரசிகர்களை தியேட்டரில் பயமுறுத்தி விடுகிறார். அந்த டோரை உடைத்து விட்டு வருவார் என எதிர்பார்க்கும் நேரத்தில் திடீரென கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் நிஜமாவே அல்லு கிளம்பிடுச்சு.. இசையமைப்பாளர் டேனி எல்ஃப்மேன் அந்த இடத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார். ஜான் மத்தாயஸனின் ஒளிப்பதிவு, சிஜி வொர்க் எல்லாமே படத்திற்கு பலம் தான்.

    மைனஸ் இருக்கு

    மைனஸ் இருக்கு

    இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் மைனஸே இல்லையா? என்கிற கேள்விக்கு கண்டிப்பாக இருக்கு என்பது தான் பதிலாக வரும். ஃபெண்டாஸ்டிக் 4, எக்ஸ்மேன், டாம் க்ரூஸ் அயன்மேனாக நடித்துள்ளார் என கிளப்பப்பட்ட பில்டப்புகளை நம்பி இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். மேலும், சர்ப்ரைஸாக இவர்கள் காட்டியவர்களுக்கான ஸ்க்ரிப்ட் வலுவாக இல்லாதது தான் அந்த பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே என சொல்ல வைக்கிறது. அதே போல, மல்டிவர்ஸ் கான்ஸெப்ட்டை இஷ்டத்துக்கு சொல்வது போல சில இடங்களில் எண்ணத் தோன்றுவதும் படத்திற்கு பெரிய பலவீனமாகவே மாறி உள்ளது.

    3டி தான் பெஸ்ட்

    3டி தான் பெஸ்ட்

    ஆரம்ப கால ஸ்பைடர்மேன் படங்களை எடுத்து மிரட்டிய இயக்குநர் சாம் ராய்மி தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். கண்களை கவரும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கும் பிசிறு தட்டாத மாயாஜால காட்சிகளுக்கும் பல ஆயிரம் கோடிகளை கொட்டி இந்த படத்தை மார்வெல் உருவாக்கி உள்ளது. 3டியில் பெரிய தியேட்டர்களை இந்த படம் பார்த்தால் மட்டுமே அதன் முழு அனுபவத்தையும் ரசிகர்களால் உணர முடியும். மொத்தத்தில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அளவுக்கு இல்லை என்றாலும், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கான திரைக்கதையை பக்காவாக படமாக்கிய விதத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளனர்.

    English summary
    Doctor Strange In The Multiverse Of Madness Review in Tamil (டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் விமர்சனம்: Elizabeth Olsen scores more than Benedict Cumberbatch in this Sam Raimi horror treatment venture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X