Dominic and the ladies purse X Review: மம்முட்டியின் ’டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படம் எப்படி?
சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, கோகுல் சுரேஷ், லேனா, வினீத், சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்திற்கு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் முதல் பாதி முழுவதும் காமெடியாகவும் ஜாலியாகவும் செல்ல, இரண்டாம் பாதியில் கெளதம் மேனன் தன்னுடைய ஸ்டைலில் இறங்கி சம்பவம் செய்துள்ளார் என ட்விட்டர் ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
இயக்குநராக கெளதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக சொதப்பி வந்த நிலையில், ஷங்கரை போல அவரும் அவுட்டேட்டட் ஆகிவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். ஆனால், அதிரடியாக நடிகராக மாறி ரசிகர்களை கவர ஆரம்பித்த கெளதம் மேனன் தற்போது மீண்டும் இயக்குநராக கம்பேக் கொடுக்க மம்முட்டியை வைத்து படம் இயக்கியுள்ளார்.

சிபிஐ அதிகாரியாக பல படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த மம்முட்டி இந்த படத்திலும் துப்பறிவாளராக நடித்து தனது டிரேட் மார்க் முத்திரையை பதிய வைத்துள்ளதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

படம் தெறிக்குது: மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் வெளியாகும் படங்கள் வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் விதத்திலும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படமும் தாறுமாறாக உள்ளதாக இந்த ரசிகர் விமர்சித்துள்ளார். முதல் பாதி முழுவதும் லைட் ஹார்ட்டட்டாக செல்ல இரண்டாம் பாதியில் இன்டென்ஸ் காட்சிகளை வைத்து தனது முத்திரையை கெளதம் மேனன் சிறப்பாக பதிவு செய்துள்ளார் என்றும் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக இது மாறும் என்றும் கூறியுள்ளார்.

அபவ் ஆவரேஜ்தான்: சமீபத்தில் வந்த தரமான மலையாள படங்களை போல நினைத்துவிட வேண்டாம். கெளதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள இந்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் அபவ் ஆவரேஜ் படம் தான். முதல் பாதி எல்லாம் ரொம்பவே ஸ்லோவாக செல்கிறது. இரண்டாம் பாதி தான் கொஞ்சம் ரசிக்கும்படி உள்ளது என இந்த நெட்டிசன் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

கெளதம் மேனன் கம்பேக்: 2ம் பாதியில் சூடுபிடிக்கும் படத்தில் வரும் கடைசி 30 நிமிடங்கள் தான் செம ஹைலைட். யாருமே கெஸ் பண்ணாத அளவுக்கு ஒரு சூப்பரான த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையை இயக்கி மலையாள திரையுலகத்துக்கு சூப்பரான படத்தை கெளதம் மேனன் கொடுத்துள்ளார். நிச்சயம் மம்முட்டிக்கு இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் தான் என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.

டீசன்ட் வாட்ச்: மம்முட்டியை வைத்து கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் சூப்பரான படம் என்று சொல்ல முடியாது. அதே போல மொக்கை என்றும் ஒதுக்கிவிட முடியாது. இதுவொரு வித்தியாசமான ஜாலியான முயற்சி. படம் பார்க்க செல்லும் ரசிகர்களை போராடிக்காமல் கடைசி 30 நிமிடங்கள் கொடுத்த காசுக்கு வொர்த்தான படமாக கொடுத்து ஒரு டீசன்ட் வாட்ச் படமாகவே கொடுத்துள்ளனர்.

பல இடங்களில் காமெடி காட்சிகள் சரியாக வொர்க்கவுட் ஆகாமல் போனது தான் படத்தின் முக்கிய பிரச்சனையே என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மோகன்லாலின் பரோஸ் படத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்றும் ரசிகர்கள் சண்டையும் ஆரம்பித்துவிட்டன.


Click it and Unblock the Notifications











