Double Occupancy Public Review - டபுள் ஆக்குபன்சி படம் எப்படி இருக்கு?.. இதுதான் பப்ளிக் விமர்சனம்

சென்னை: குஷ்புவின் மகள் அனந்திதா க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக வேலை செய்திருக்கும் திரைப்படம் டபுள் ஆக்குபன்ஸி. அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், வினோத் கிஷன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இன்று இந்தத் திரைப்படமானது ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் குஷ்பு. அவருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகள் அவந்திகா மலையாள திரையுலகத்தில் நடிகையாக இருக்கிறார். இரண்டாவது மகள் அனந்திதா டபுள் ஆக்குபன்சி திரைப்படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தாய் போன்றே தாங்களும் பெரிய பெயரை இந்தத் திரைத்துறையில் எடுக்க வேண்டும் என்ற முடிவோடு உழைத்துவருகிறார்கள் அவர்கள்.

Double Occupancy Public Review  Fans Praise the Fantasy Drama Despite Logic Flaws
Photo Credit:

இன்று ரிலீஸ்: டபுள் ஆக்குபன்சி திரைப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் விடிவி கணேஷ், வினோத் கிஷன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இன்று படமானது ரிலீஸாகியிருக்கிறது. படத்துக்கான விளம்பரங்கள் எல்லாம் நன்றாகவே செய்யப்பட்டன. குஷ்புகூட படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் கலந்துகொண்டு படத்துக்கான வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்தார். இன்று படமானது ரிலீஸாகியிருக்கிறது.

Also Read
அஜித் மவுசு குறைந்துவிட்டதா?.. கேட்கும் எதுவும் கிடைக்கலையாம்.. 100 கோடி ரூபாயும் இல்லையாம்
அஜித் மவுசு குறைந்துவிட்டதா?.. கேட்கும் எதுவும் கிடைக்கலையாம்.. 100 கோடி ரூபாயும் இல்லையாம்

டபுள் ஆக்குபன்சி பப்ளிக் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்த ரசிகை ஒருவர், "இந்தப் படத்தின் கதையை இப்படி கொண்டு போகிறார்களே என சிலருக்கு படம் பார்க்கும்போது தோன்றும். ஆனால் படத்தை ரொம்ப சுவாரஸ்யத்தோடு கொண்டு போகிறார்கள். அனைத்தையும் பக்காவாக கொடுத்திருக்கிறார்கள். நடிகர்கள், நடிகைகளும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இது நம்பும்படியாக இல்லைதான். படமாக சூப்பராக இருக்கிறது" என்றார்.

ரசிகரின் விமர்சனம்: ரசிகையை தொடர்ந்து ரசிகர் ஒருவர் பேசுகையில், "நண்பர்களோடு வந்தால் இந்தப் படத்தை பார்க்கலாம். இதில் லாஜிக்கை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. பெரிய அளவில் எதுவும் இல்லை. லாஜிக்கை மறந்துவிட்டு பார்க்கலாம். இது ஃபேண்டஸி திரைப்படம். அதில் லாஜிக் இருக்காதுதானே. டீசன்ட்டாக என்ஜாய் செய்யலாம்.மொத்தமாக டீசன்ட்டான திரைப்படம் விடிவி கணேஷ் சூப்பராக செய்திருந்தார்" என்றார்.

லாஜிக் இல்லைதான்; ஆனாலும்: இன்னொருவர் பேசுகையில், "லாஜிக் படத்தில் சுத்தமாக இல்லைதான். ஆனால் இரண்டு மணி நேரம் சூப்பராக என்ஜாய் செய்துவிட்டு வரலாம். நல்ல லவ் ஸ்டோரி. பார்க்க நன்றாக இருக்கும். விடிவி கணேஷ் பக்காவாக செய்திருக்கிறார். இறுதியில் அவரை நன்றாக யூஸ் செய்திருக்கிறார்கள்" என பாசிட்டிவ்வாக சொன்னார்.

மேலும் இன்னொரு ரசிகர், "ஏற்கனவே 2004ல் நியூ படத்தில் இருந்த கான்செப்ட் மாதிரி இருக்கிறது. அதேமாதிரிதான் இந்தப் படத்தில் கொஞ்சம் வேறு மாதிரி கொடுத்திருக்கிறார்கள். காதலில் இருக்கும் குழப்பங்கள்தான் இதில் பேசியிருக்கிறார்கள். முதல் பாதி சூப்பராக இருந்தது. இரண்டாவது பாதியில் டெக்னிக்கலாக உள்ளே ரொம்ப போய்விட்டார்கள். இதை ஃபேண்டஸியிலேயே விட்டிருக்கலாம். இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார்தான்.

வித்தியாசமான முயற்சி. படத்தை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம். ஆனால் இரண்டாவது பாதி எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. சின்ன பசங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். சில சீன்கள் எல்லாம் ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதற்காகவே இதை பார்க்கலாம். விடிவி கணேஷ் சூப்பராக செய்துவிட்டார்" என்றார். இப்படி பலரும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே சொல்லிவருகிறார்கள். அதன் காரணமாக படம் இனிவரும் நாட்களில் நல்ல ரிசல்ட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X