Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Driver Jamuna Review: கார் டிரைவராக கலக்கினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? டிரைவர் ஜமுனா விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: கின்ஸ்லின்
சென்னை: அண்ணன் பிக் பாஸ் மணிகண்டன் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் டிசம்பர் 30ம் தேதி வெளியாகி உள்ளது. என்ன திடீரென ஆண்டு இறுதியில் த்ரிஷா, சன்னி லியோன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோவை சரளா என இத்தனை நடிகைகளின் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளதே என ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர்.
உமன் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த டிரைவர் ஜமுனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..
Driver Jamuna Twitter Review :டிரைவர் ஜமுனா ஜம்முன்னு இருக்கா? இல்லையா?ட்விட்டர் விமர்சனம் இதோ!

டிரைவர் ஜமுனா கதை
எஸ்.பி. செளத்ரி தயாரிப்பில் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள டிரைவர் ஜமுனா படத்தில் கார் டிரைவரான ஜமுனாவின் அப்பா கொலை செய்யப்பட ஊதாரியாக இருந்து வீட்டை விட்டு ஓடிவிட்ட சகோதரன் உதவாமல் போனதால் உடல் நலம் சரியில்லாமல் தவிக்கும் அம்மாவை காப்பாற்ற கார் டிரைவராக மாறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது காரில் ஏறிக் கொண்டு கூலிப்படை கூட்டம் எக்ஸ் எம்.எல்.ஏவான ஆடுகளம் நரேனை கொல்ல நினைக்கும் நிலையில், அவர்களை துரத்தும் போலீஸ் மற்றும் அந்த கூலிப்படை என இரு முனை கத்திகளிடம் இருந்து டிரைவர் ஜமுனா எப்படி தப்பித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.

கிளைமேக்ஸில் மிரட்டல்
பெண்களை மையப்படுத்தி சமீப காலமாக பல படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா, சாய் பல்லவி, த்ரிஷா என பல முன்னணி நடிகைகள் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், அந்த வரிசையில் ஆண்டு இறுதியில் அசத்தலான நடிப்பை டிரைவர் ஜமுனா படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிக்காட்டி உள்ளார். குடும்ப பாரத்தை சுமக்க கால் டாக்ஸி டிரைவராக மாறும் பெண்ணாக யதார்த்தமாக நடித்துள்ளார். அந்த கடைசி கிளைமேக்ஸில் இவரது நடிப்பு மிரட்டல்.

பலம்
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அடுகளம் நரேன் இருவரும் தான் பெரிதும் தெரிந்த முகங்கள் இருவருமே நன்றாக நடித்துள்ளனர். ரோடு மூவியாக இயக்குநர் இந்த படத்தை உருவாக்கிய நிலையில், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய் பிரில்லியன்ட்டாக தனது கேமரா வித்தையை காட்டி உள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

பலவீனம்
டிரைவர் ஜமுனாவின் காருக்குள் ஏறும் கூலிப்படையினருக்கான கதாபாத்திர தேர்வில் இயக்குநர் ரொம்பவே சொதப்பி விட்டார். காமெடி பண்ணுகிறேன் என்கிற பெயரில் வரும் அபிஷேக்கும் ரசிகர்களை ரொம்பவே இரிடேட் செய்கிறார். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் நிறைந்து கிடப்பது டிரைவர் ஜமுனாவை ஜம்முன்னு ரசிக்க முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே நம்மையும் உம்முன்னு உட்கார வைத்து விடுகிறது.