நல்லா சிரிச்சேன்.. நல்லா அழுதேன்.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ படத்துக்கு டியூட் இயக்குநர் விமர்சனம்!

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் விஜய்யின் ஜனநாயகன் ஆகிய பெரிய படங்கள் வருமா என்பது சந்தேகம் தான். இந்நிலையில், இந்த வாரம் வெளியாகவுள்ள 'வித் லவ்' படத்தின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்கும் என்பதால் படக்குழு பக்காவாக படத்தை புரொமோட் செய்து வருகின்றனர்.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான போது இந்த அளவுக்கு அந்த படத்திற்கு புரமோஷன் இல்லை. ஆனால், படத்தை பார்த்து விட்டு ரசிகர்களே படத்தை பாராட்ட ஆரம்பிக்க, பலரும் குடும்பம் குடும்பமாக டிராகன் படத்துக்குப் பிறகு அந்த படத்தை சென்று பார்த்தனர்.

Dude Director appreciates Abishan Jeevinth s With Love movie with a blockbuster review
Photo Credit:

சுமார் 90 கோடி வரை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வசூல் ஈட்டியது. இந்நிலையில், அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வித் லவ்' படத்தை ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட பிரபலங்கள் பார்த்து பாராட்டி வரும் நிலையில், டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தனது பாராட்டுக்களை தற்போது பதிவிட்டுள்ளார்.

பாராட்டும் பிரபலங்கள்

முதல் படத்திலேயே வெற்றியை சில இயக்குநர்கள் தான் அடைகின்றனர். பிரதீப் ரங்கநாதன், கீர்த்தீஸ்வரன் வரிசையில் அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக முதல் பந்திலேயே சிக்சர் அடித்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் போல ஹீரோவாகவும் சிக்ஸர் அடிப்பார் என பல பிரபலங்களும் தங்கள் விமர்சனத்தை 'வித் லவ்' படத்துக்கு கொடுத்து வருகின்றனர். வரும் பிப்ரவரி 6ம் தேதி படத்தின் ஓபனிங்கே மிகப்பெரிய கலெக்‌ஷன் அள்ளும் என்றும் டிக்கெட் புக்கிங் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டியூட் இயக்குநர் விமர்சனம்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கீர்த்தீஸ்வரனின் டியூட் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டி வெற்றிப் பெற்ற நிலையில், அபிஷன் ஜீவிந்த் நடித்த 'வித் லவ்' படத்தை பார்த்து விட்டு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமேஸிங்.. சில இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் நல்லா அழவும் படம் வைத்தது. மதன் ஒரு நல்ல அறிமுக இயக்குநராக பட்டையை கிளப்புகிறார். அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அசத்தி விட்டார். அனஸ்வரா ராஜன் மாஸே.. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் மகேஷுக்கு கை மேல் வெற்றி இருக்கு என 'வித் லவ்' படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தை பார்த்து விட்டு மக்களும் இதே போல கொண்டாடினால் இந்த பிப்ரவரி மாதம் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமாக இந்த படம் மாறும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X