King of Kotha Review: கத்திக்கு மத்தியில் காதல்.. அஞ்சான் போலவே அடி.. கிங் ஆஃப் கோத்தா விமர்சனம்!

Rating:
2.5/5

நடிகர்கள்: துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி

இசை: ஜேக்கப் பிஜாய்

இயக்கம்: அபிலாஷ் ஜோஷி

சென்னை: முன்னணி ஹீரோக்கள் அதிகபட்சம் போலீஸ் கதாபாத்திரங்கள் அதை விட்டா கேங்ஸ்டர் கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்து வருகின்றனர். அதற்கு மலையாள நடிகர் துல்கர் சல்மானும் விதிவிலக்கு இல்லை என நிரூபித்து இருக்கிறார்.

மாஸ் ஹீரோவாக ஆக வேண்டும் என்றால் கேங்ஸ்டர் படம் ஒன்றே தீர்வு என க்ரூப் படத்தில் முன்னதாக நடித்து அசத்திய துல்கர் சல்மான் மீண்டும் கிங் ஆஃப் கொத்தா படத்தின் மூலம் ராஜு பாய் அவதாரம் எடுத்திருக்கிறார்.

Dulquer Salmans King of Kotha Review in Tamil

ஆனால், சூர்யா நடித்த அஞ்சான் போல காதல், நட்பில் துரோகம் உள்ளிட்ட விஷயங்களே இந்த படத்தில் நிரம்பி வழிந்த நிலையில், ரசிகர்களுக்கு புதிய படத்தை பார்த்த எந்தவொரு ஃபீலிங்கையும் இந்த படம் தரவில்லை என்பது வருத்தமான விஷயமாக மாறியுள்ளது.

கிங் ஆஃப் கொத்தா கதை: இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான், டான்ஸிங் ரோஸ் ஷபீர், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கிங் ஆஃப் கொத்தா படத்தில் கொத்தா எனும் இடத்தை பல கேங்ஸ்டர் ஆட்சி செய்து தற்போது கடைசியாக கண்ணன் பாய் எனும் டான்ஸிங் ரோஸிடம் உள்ளது.

அவன் கன்ட்ரோலில் போதைப் பொருள், சட்டவிரோத கடத்தல் என பல விஷயங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்க அங்கே வரும் போலீஸ் அதிகாரியான பிரசன்னாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கண்ணன் பாய்க்கு முன்னதாக கொத்தாவை ஆண்டது ஹீரோ ராஜு பாய் துல்கர் சல்மான் என்பதை அறிந்துக் கொள்ளும் காவல் அதிகாரி, ராஜு ஏன் கொத்தாவை விட்டுச் சென்றான் என்பதை கண்டுபிடித்து, அவனை மீண்டும் கொத்தாவுக்கு கொண்டு வந்து கண்ணன் பாய் கொட்டத்தை அடக்கினாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

கொத்தா - கெத்தா வெத்தா: துல்கர் சல்மானுக்கான பில்டப் இன்ட்ரோவே அரை மணி நேரம் கழித்துத் தான் வர ரசிகர்கள் ஆரம்பத்திலேயே பொறுமையை இழந்து விடுகின்றனர். பெரிய சம்பவத்தை செய்துவிட்டு அந்த கொத்தாவை விட்டு துல்கர் வெளியேறினார் என்று பார்த்தால், காதலி ஐஸ்வர்யா லட்சுமிக்காக அந்த இடத்தை விட்டுப் பிரிந்தார் என்றும் நண்பன் டான்ஸிங் ரோஸின் துரோகம் உள்ளிட்ட கதைகள் என அப்படியே அஞ்சான் கதையை ஞாபகப்படுத்துவதே இந்த படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

பிளஸ்: துல்கர் சல்மான் வரும் காட்சிகளை மாஸான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார். படத்தின் கேமரா ஒர்க் மற்றும் ஜேக்கப் பிஜோயின் பின்னணி இசை தாறுமாறாக அமைந்துள்ளது. டான்ஸிங் ரோஸ் ஷபீர், பிரசன்னா மற்றும் சிலரது நடிப்பு படத்திற்கு பலம் என்று சொல்லலாம்.

மைனஸ்: ஆனால், இயக்குநர் அபிலாஷ் ஜோஷிக்கு துல்கர் சல்மான் போல ஒரு நடிகர் கிடைத்தும் படத்தை சீதா ராமம் போல சூப்பராக கொடுக்க முடியாமல் சொதப்பல் ஸ்க்ரீன்பிளே காரணமாக பாழாக்கிவிட்டார் என்றே ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X