twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Embiran Review: பேத்தியின் காதலை ஆவியாய் வந்து நிறைவேற்றும் தாத்தா... எம்பிரான்! விமர்சனம்

    பேத்தியின் காதலை ஆவியாய் வந்து நிறைவேற்றும் தாத்தா தான் இந்த எம்பிரான்.

    |

    Recommended Video

    Embiran Movie: நான் ஹீரோயின் ஆவேன்னு நினச்சு கூட பத்ததில்ல- நடிகை ராதிகா ப்ரீத்தி பேட்டி

    Rating:
    2.5/5
    Star Cast: ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி, மௌலி
    Director: கிருஷ்ணா பாண்டி

    சென்னை: தன் பேத்தியின் காதலை, ஆவியாய் வந்து நிறைவேற்றி வைக்கும் தாத்தா தான் இந்த எம்பிரான்.

    கோயில் பூசாரியான மௌலியின் பேத்தி ஜெயாவுக்கு (ராதிகா ப்ரீத்தி), டாக்டர் ப்ரியன் (ரெஜித் மேனன்) மீது ஒரு தலை காதல். ஆனால் ப்ரியனுக்கு, ஜெயாவை யார் என்றே தெரியாது. ப்ரியனை உயிருக்கு உயிராக நேசிக்கும் ஜெயாவுக்கு, அவரிடம் தனது காதலை சொல்வதில் தயக்கம். முதலில் ப்ரியனுடம் எப்படியாவது அறிமுகமாக வேண்டும் என்பதற்காக வராத காய்ச்சலை வரவைக்கிறார்.

    Embiran review: A romantic film with a fresh idea

    ப்ரியனை தான் காதலிக்கும் விஷயத்தை தாத்தாவிடம் சொல்லி, அவருடன் மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, தாத்தா மௌலி இறந்து போகிறார். பேத்தி ஜெயாவுக்கு உடல் முழுவதும் முடக்குவாதம் ஏற்பட்டு நினைவிழந்து செயலற்று போகிறார். இறந்து போகும் மௌலி தனது பேத்தியின் காதலை ப்ரியனுக்கு எப்படி தெரியப்படுத்துகிறார், அவர்கள் காதல் என்ன ஆனது என்பது தான் படம்.

    ஒரு புதிய யோசனையுடன், அழகான ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கிருஷ்ணா பாண்டி. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் அருமை. குறிப்பாக, காதலை ஆபாசம் இல்லாமல், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கண்ணியமான ஒரு படத்தை தந்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

    Embiran review: A romantic film with a fresh idea

    நம் வீட்டு பெரியவர்கள், இறந்த பிறகும் கூட நம்மிடம் எப்படி பாசமாக நடந்து கொள்கிறார்கள், நமக்கு வரப்போகும் ஆபத்தை எப்படி தெரியப்படுத்துகிறார்கள் என்பதை ஒரு புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள். கோரமான உருவங்களை கொண்ட பேய் படமாக இல்லாமல், கனவு என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு, காதல் திரில்லர் படமாக எம்பிரானை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

    Agni Devi Review: சுவாதி கொலை, ராம்குமார் மரணம்.. நடந்தது என்ன.. அக்னி தேவி சொல்லும் புதுக்கதை! Agni Devi Review: சுவாதி கொலை, ராம்குமார் மரணம்.. நடந்தது என்ன.. அக்னி தேவி சொல்லும் புதுக்கதை!

    விக்ரமன் படம் மூலம் அறிமுகமான ரெஜித் மேனனுக்கு இது இரண்டாவது படம். சாக்லெட் பாய் முகபாவத்துடன் இருந்தாலும், முதிர்ச்சியான ஒரு மருத்துவராக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், பேச்சில் தான் மலையாள மனம் வீசுகிறது. அதை தவிர்த்தால், அச்சு அசல் தமிழ் பையனாக தெரிவார்.

    Embiran review: A romantic film with a fresh idea

    தேவதை போல் அழகாக இருக்கிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி. வெகுநாட்களுக்கு பிறகு அழகிய கண்களுடன் தமிழ் சினிமாவுக்கு ஒரு நடிகை இறக்குமதியாகி இருக்கிறார். கோமாவில் இருக்கும் காட்சிகளில், இமைக்காமல் இருக்கும் அவரது கண்கள் ஆயிரம் மொழிகளை பேசுகின்றன. தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என நம்பலாம்.

    பேத்தி மீது அதிக அக்கறை மற்றும் பாசம் கொண்ட தாத்தாவாக, யதார்த்தமாக நடித்திருக்கிறார் மௌலி. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    Embiran review: A romantic film with a fresh idea

    பிரசன்னாவின் இசையில் 'நீ தோன்றும் ஒரு நொடியில்' பாடல் ரசிக்கும்படியாக உள்ளது. மற்றப் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு உதவியாக உள்ளது.

    புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். கனவு காட்சிகளையும், நிஜ காட்சிகளையும் வேறுப்படுத்தி காட்டுவதற்காக றிறைய மெனக்கெட்டிருக்கிறார். ராதிகா ப்ரீத்தியின் கண்களை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். மனோஜின் எடிட்டிங், படத்தை குழப்பாமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

    Embiran review: A romantic film with a fresh idea

    படத்தின் கதைக்கரு ஒரு குறும்படத்துக்கானது. ஆனால் அதனை முழு படமாக எடுக்க, இயக்குனர் நிறைய விஷயங்களை செயற்கையாக திணித்திருக்கிறார். இதனால் தேவையே இல்லாத காட்சிகள் ஏராளமாக படத்தில் உள்ளன. அதேபோல், காட்சிகளின் நீளமும் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக காமெடிக்காக ராதிகா செய்யும் சில வேலைகள் முதலில் ரசிக்க வைத்தாலும், பின்னர் அதுதொடர்ந்து கொண்டே இருப்பதால் போரடிக்க ஆரம்பித்து விடுகிறுது. படத்துடனோ அல்லது தனியாகவோ காமெடி டிராக் வைத்திருந்தால் படத்தின் சுவாரஸ்யம் அதிகமாகி இருக்கும். இரண்டாம் பாதியில் வரும் கனவு சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே திரில்லிங் அனுபவத்தை தருகிறது.

    இருப்பினும், குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய 'எம்பிரான்' கவனம் ஈர்க்கும் படம்.

    English summary
    Embiran is a romantic thriller film directed by Krishna Pandi, starring Rejith Menon, Radhika Preethi and Moulee in the lead roles. The story revolves around two young people from different professions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X