En Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி!

ஒரு கொலையை மையமாக வைத்து ஜாலியான படமாக வந்துள்ளது என் காதலி சீன் போடுறா திரைப்படம்.

Rating:
2.0/5

நடிகர்கள்: 'அங்காடி தெரு' மகேஷ், ஷாலு, மனோபாலா, ஆடுகளம் நரேன்.

இயக்கம் - ராம் சேவா,

இசை - அம்பரீஷ்

சென்னை: சீன் போடும் காதலியை ஹீரோ கஷ்டப்பட்டு கரெக்ட் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் என் காதலி சீன் போடுறா திரைப்படம்.

அப்பா, அம்மா இல்லாத மகேஷுக்கு அண்ணன், அண்ணி தான் ஒரே ஆறுதல். தன்னுடன் பணியாற்றும் ஷாலுவை காதலிக்கிறார் மகேஷ். ஆனால் வீட்டின் செல்லப்பிள்ளையான ஷாலு மிகவும் கோபக்காரர். மகேஷை கண்டுக்கொள்ளாமல் 'சீன்' போடுகிறார். தனது அண்ணியின் உதவியுடன் ஷாலுவை கரெக்ட் செய்கிறார்.

En kadhali scene podura review: A funny commercial film with little emotions

அந்த நேரம் பார்த்து மகேஷ் அண்ணன் மீது முன்விரோதம் கொண்டிருக்கும் சக போலீஸ் அதிகாரி கோகுல் எண்ட்ரியாகிறார். மகேஷின் அண்ணனை பழி தீர்க்க வேண்டும் என துடிக்கிறார். இந்த நிலையில் மகேஷ் - ஷாலு நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நடக்கிறது. அந்த சமயத்தில் மகேஷின் அண்ணி மர்மமாக கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? கோகுலுக்கும், மகேஷ் அண்ணனுக்கு இடையே உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ் - ஷாலு திருமணம் நடந்ததா என்பதே மீதிக்கதை.

ஒரு சின்ன கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை கமர்சியலாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்சேவா. முதல் பாதி படம் ஜாலியாக நகர்கிறது. இரண்டாம் பாதி படம் சீரியஸ் டோனுக்கு மாறிவிடுகிறது. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் அருமை.

En kadhali scene podura review: A funny commercial film with little emotions

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது எல்லாக் காட்சியிலும் தெரிகிறது. சில சமயம் டிவி சீரியல் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. கதையில் செலுத்திய கவனத்தை, திரைக்கதையிலும், எடிட்டிங்கிலும் செலுத்தி இருந்தால் இயக்குனர் பேசப்பட்டிருப்பார்.

En kadhali scene podura review: A funny commercial film with little emotions

'அங்காடி தெரு' மகேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தையும், பட்ஜெட்டையும் உணர்ந்து அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். ஹீரோயின் ஷாலு அழகு பதுமை போல் வந்து போகிறார். வழக்கம் போல் டபுள் மீனிங் டயலாக்குகளால் சிரிக்க வைக்கிறார் மனோபாலா. போலீஸ் அதிகாரி ரோலுக்கு பிட்டாக இருக்கிறார் கோகுல். ஆடுகளம் நரேன் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

En kadhali scene podura review: A funny commercial film with little emotions

'சின்ன மச்சான்' அம்ரீஷின் இசை தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதால், அளவான லைட்களை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமரா மேன். எடிட்டிங்கில் இன்னும் நிறைய வேலை செய்திருக்கலாம்.

En kadhali scene podura review: A funny commercial film with little emotions

பிரமாண்ட விருந்துகளுக்கு மத்தியில் டீக்கடை பன் போல் இடைவேளை ஸ்நாக்சாக வந்துள்ளது இந்த 'என் காதலி சீன் போடுறா'.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X