For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : ஆர்யா மற்றும் விஷால் ,இதில் யாருக்கு யார் எனிமி ( ENEMY திரை விமரிசனம்)

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள் :

  விஷால்
  ஆர்யா
  மிர்னாலினி ரவி
  பிரகாஷ் ராஜ்,
  மம்தா மோகன்தாஸ் ,
  தம்பி ராமையா

  இயக்கம் : ஆனந்த் சங்கர்

  சென்னை : விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கி உள்ளார் .

  ENEMY Review - Vishal, Arya | Enemy Review Tamil By Poster Pakiri | Filmibeat Tamil

  மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரித்து உள்ளார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடித்துளார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

  பாடல்களை தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு ,.சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைத்து உள்ளார் .

  புடவையில் ஏக்கத்துடன் நிற்கும் பிச்சைக்காரன் 2 பட நடிகை..இதுவும் நல்லா தான் இருக்கு!புடவையில் ஏக்கத்துடன் நிற்கும் பிச்சைக்காரன் 2 பட நடிகை..இதுவும் நல்லா தான் இருக்கு!

  ஒவ்வொரு முடிச்சும்

  இரண்டு குடும்பங்கள் ,இரண்டு குடும்பங்களின் குழந்தைகள் வளரும் விதம் என கதை துவங்குகிறது. சீட்டு ஆட்டத்துக்கு அடிமையான மாமா,போலீஸ் பயிற்சியை இறுதிவரை கைவிடாத இளைஞன், பாஸ்போர்ட்டுகளை மீட்டுக் கொடுக்கும் ஸ்டைல் , அந்நிய நாட்டு சதிதிட்டங்கள் என ஏகப்பட்ட விஷயங்களுடன் எனிமி படத்தின் ஒவ்வொரு முடிச்சும் ஸ்வாரஸ்யங்களாக உள்ளது . படத்தின் மிக அற்புதமான விஷயம் ஸ்க்ரீன்ப்லே தான் . ஆனந்த் ஷங்கர், ஷான் கருப்புசாமி, எஸ்.ராமகிருஷ்ணன் எனும் எழுத்தாளர்களை பயன்படுத்தியது அட்டகாசம் .இந்த மூவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.

  மீண்டும் மீண்டும்

  மீண்டும் மீண்டும்

  விஷாலுக்கு நேர் எதிராக அதிக பலத்துடன் ஆர்யா பட்டய கிளப்புகிறார் . ஆக்‌ஷன் காட்சிகளில் சரிக்கு சமமாகப் போட்டி போட்டு இருவரும் நடித்துள்ளனர். எதிர் நாயகன் என்று சொன்னாலும் ஓவர் பில்ட்அப் இல்லாமல் எதார்த்தமாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் ஆர்யா. தம்பி ராமையா மிகச் சிறந்த நடிப்பை மீண்டும் மீண்டும் வழங்கியுள்ளார். சமீபத்தில் வந்த வினோதய சித்தம் எனும் படம் மிக சிறந்த உதாரணம் .

  சில பல டைலாக்ஸ்

  சில பல டைலாக்ஸ்

  மாளவிகா அவினாஷ், ஜார்ஜ் மரியான், மாரிமுத்து, மம்தா மோகன்தாஸ், ஜான் விஜய் ஆகியோர் கதாபாத்திரத்திரங்களின் ஆழத்தை நன்கு புரிந்து நிறைவேற்றுகிறார்கள்.மிர்ணாளினி ரவிக்குப் படத்தில் பெரிய வேலை இல்லை. விஷாலுக்குப் பொருத்தமான ஜோடியாகவும் சரியான காட்சிகள் அமையவில்லை . ஒரு பாடல்,சில பல டைலாக்ஸ் என்று வந்துபோகிறார். மம்தா மோகன்தாஸ் கொஞ்ச நேரம் தான் என்றாலும் அழுத்தம் திருத்தமாக இருக்கிறது. இன்னும் நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் மம்தா மோகன்தாஸ் வளம் வருவார் என்று நம்புகிறோம் .

  எக்ஸ்ட்ரா காட்சிகள்

  எக்ஸ்ட்ரா காட்சிகள்

  கருணாகரன் இந்த கதைக்கு பக்கபலமாக பங்களித்துள்ளார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம். விஷால் மற்றும் ஆர்யாவுக்கு சிறு வயதில் கொடுக்கப்படும் ட்ரைனிங் காட்சிகள் சூப்பர் . ஆர்யாவின் மனைவி குறித்த பின்னணி என திட்டம் போட்டு திரைக்கதை எழுதி அனைவரையும் ரசிக்கவைக்கிறார்கள். படத்துக்குத் தேவையில்லாத எக்ஸ்ட்ரா காட்சிகள் எதுவும் இல்லாததே நமக்கு பெருமூச்சு .

  ஒரு மணி நேரமாக

  ஒரு மணி நேரமாக

  ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். விஷுவல் ட்ரீட் என்றே சொல்லலாம். ஒட்டுமொத்த படமாக இப்படத்தை பார்த்தால்- படம் ஆரம்பித்த முதல் 30 நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியுடன் கூடிய கடைசி 30 நிமிடம் இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மணி நேரமாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். நடுவில் வரும் பல காட்சிகளில் பலவிதமான தொய்வுகள் ஆங்காங்கே தென்பட்டாலும் கதை சொல்லிய விதம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்திருக்கலாம் என்று தான் சொல்ல தோணுகிறது.

  ஆடியின்ஸ் பல்ஸ்

  ஆடியின்ஸ் பல்ஸ்

  பவர் பேக்டு சண்டை காட்சிகள் நிறைய சின்ன சின்ன ட்விஸ்டுகள் என்று கதை நகர்கிறது. தொய்வுகள் பெரிதாக பாதிக்காத அளவுக்கு ஆடியின்ஸ் பல்ஸ் பார்த்து செயல் பட்டு உள்ளார் இயக்குனர் ஆனந்த் சங்கர். இந்த வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முக்கியமான இரண்டு படங்களில் எனிமி படமும் ஒன்று. கண்டிப்பாக குடும்பங்களாக தியேட்டர் சென்று எனிமி படத்தை ரசித்து மகிழலாம்.

  English summary
  enemy is yet another important movie for this 2021 Diwali release . Arya and vishal has done the combo of this script and many expectations have arisen for its stunt sequence . The script revolves around Singapore geographically and issues which happen at "little India " which is important place for Indians living in Singapore.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X