அஷ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' படம் எப்படி இருக்கு? தூக்கலா ? தூக்கமா? மக்கள் கருத்து..

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம் என்ன சொல்ல போகிறாய். டைரக்டர் ஏ.ஹரிஹரன் எழுதி, இயக்கி உள்ள இந்த படத்தை ஆர்.ரவிச்சந்திரனின் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

Recommended Video

Ashwin Kumar நடித்த Enna Solla Pogirai Movie Audience Opinion | Public Review

பொங்கல் ரிலீசாக வெளிவந்திருக்கும் இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. ரொமான்டிக், காமெடி படமாக உருவாகப்பட்டுள்ள இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் எப்படி இருக்கு

படம் எப்படி இருக்கு

வழக்கமாக எல்லோரின் வாழ்க்கையிலும் வரும் காதல், பிரேக் அப் தான் படத்தின் கதை. படத்தின் ஃபஸ்ட் ஆஃப் ரசிக்கும்படியாக, இளைஞர்களை கவர்வதாக அமைந்துள்ளது. அதே சமயம் செகண்ட் ஆஃப் செம சொதப்பல். ரசித்து சொல்லும் படி ஒரு சீன் கூட வைக்கவில்லை. ஃபஸ்ட் ஆஃப் உடன் ஒப்பிடுகையில் செகண்ட் ஆஃப்பில் திரைக்கதை போராகவே அமைக்கப்பட்டுள்ளது.

எதெல்லாம் பிளஸ்

எதெல்லாம் பிளஸ்

விவேக் - மெர்வினின் இசை படத்திற்கு பெரிய பிளசாக அமைந்துள்ளது. அஸ்வின் பெரிய திரையில் மிக அழகாக தோன்றி இருக்கிறார். அஸ்வின், தேஜுவின் நடிப்பு, இருவர் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. வழக்கம் போல் புகழ் காமெடியில் கலக்கி உள்ளார். அஸ்வின் ரசிகர்களுக்கு பிடித்த படமாக என்ன சொல்ல போகிறாய் இருக்கும்.

மக்கள் கொடுத்த ரேட்டிங்

மக்கள் கொடுத்த ரேட்டிங்

என்ன சொல்ல போகிறாய் படத்திற்கு மக்கள் கொடுத்துள்ள ரேட்டிங் 2.25 மட்டுமே. அனைவரையும் கவரும் படியாக முழு படத்தை அமைக்க தவறி இருக்கிறார்கள். அதே சமயம் ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களின் கடின உழைப்பை தந்திருப்பது நன்றாக தெரிகிறது.

மனதை கவர்ந்த அஸ்வின்

மனதை கவர்ந்த அஸ்வின்

மிகவும் மோசம் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் பார்க்கலாம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. முதல் படத்திலேயே அஸ்வின் இந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது அவர் அடுத்தடுத்த படங்களில் ஜொலிப்பார் என்பதையே காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X