Just In
- 38 min ago
நயன்தாராவின் கோலமாவு கோகிலா ரிமேக்.. திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.. இயக்குனர் உறுதி!
- 59 min ago
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
- 1 hr ago
Bhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'?
- 14 hrs ago
முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்!
Don't Miss!
- News
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
- Sports
இந்திய அணியில் நடராஜன், வாஷி.. ஒரே நாளில் 2 தமிழக வீரர்களுக்கு ரஹானே வாய்ப்பு.. என்ன காரணம்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Eswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு ? தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்
சென்னை: சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.
இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். பாலாஜி கப்பா தயாரித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஈஸ்வரன்.

நல்ல வரவேற்பு
ஷூட்டிங் செல்வதில் தொடர்ந்து தாமதம் செலுத்தி வந்த சிம்பு உடற்பயிற்சி செய்து மீண்டெழுந்து இரண்டு மூன்று வாரங்களில் ஈஸ்வரன் திரைப்படத்தை நடித்து முடித்து கொடுத்தார். டீசர், ட்ரைலரில் இருந்தே குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வெளிவரவுள்ள படம் என தெரிந்தது. எதிர்பார்த்தது போல ஜாலியான குடும்ப கதையாக அமைந்துள்ளது. படத்தில் சிம்புவின் இன்ட்ரோ, கிரிக்கெட் விளையாடும் காட்சி, சண்டை காட்சிகள், பாம்பு பிடிக்கும் காட்சி என மாஸான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எளிமையான தோற்றத்துடன் சிம்புவின் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரனாக நல்ல வரவேற்பு பெற்று கம் பேக்கும் கொடுத்துள்ளார் சிம்பு.

முக்கிய கதாபாத்திரம்
இயக்குனர் பாரதி ராஜா தற்போது படங்கள் இயக்கவில்லை என்றாலும் சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுபோலவே இந்த படத்திலும் பெரியசாமி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய குடும்ப பின்னணியில் இருந்து கதை ஸ்வாரசியமாக நகர்கிறது.சிம்பு பாரதி ராஜா குறித்து இண்டெர்வெளில் முக்கியமான ஹின்ட் கொடுக்க இரண்டாம் பாதியில் அதன் முழு விவரங்களை பிளாஷ் பேக்காக தெரிவித்துள்ளனர். பெரிய சாமியாக நடித்த பாரதிராஜா கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

ஏற்ற இரண்டு ஜோடிகள்
ஈஸ்வரன், பூமி என பொங்கலுக்கு வெளியாகும் இரண்டு படங்களில் நடித்துள்ளார் நிதி அகர்வால். ஈஸ்வரன் படத்தில் நந்திதா & நிதி அக்கா தங்கையாக நடித்துள்ளனர்.படம் தொடங்கி சில நிமிடங்களில் நந்திதா சிம்புவின் முன்னால் காதலியாக மாறிவிடுகிறார். இருந்தாலும் நந்திதா ஸ்வேதா தன்னுடைய காட்சிகளை அழகாக நடித்துள்ளார். நிதி அகர்வால் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். அதை தவிர்த்து சிம்புவை துரத்தி துரத்தி காதலிப்பது & பாடல்களில் வரும் காதல் காட்சிகள் என க்யூட்டாக உள்ளார் நிதி அகர்வால்.நந்திதா கதாபாத்திரம் மிக குறைவாக அமைந்தது சிலருக்கு வருத்தமே .

கலக்கிய முனிஷ்காந்த்
ஜோசியராக காளி வெங்கட் கதாபாத்திரம் திருத்தமாக அமைந்துள்ளது. நகைச்சுவை நடிகர்களாக பால சரவணன், முனிஷ்காந் ஆகியோர் கலக்கியுள்ளனர். பால சரவணனுக்கு இந்த படத்தில் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. சின்னத்திரை பிரபலம் ஆதவன் , தனது நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்கள் கொரோனா விழிப்புணர்வின்றி நடிக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு மூட்டுகிறது. முனிஷ்காந்த் காமெடியில் அசத்தியது மட்டுமன்றி இரண்டாம் பாதியில் கதைக்கு ட்விஸ்ட்டாகவும் அமைந்துள்ளார். இளம் வயது பாரதி ராஜாவாக மனோஜ் நடித்துள்ளது எதார்த்தமாக அழகாக அமைந்துள்ளது.

குடும்ப ரசிகர்களுக்காக
குடும்ப ரசிகர்களை திருப்தி படுத்துவதில் இயக்குனர் சுசீந்திரன் தவறியதில்லை. சில வருடங்களாக விளையாட்டு சார்ந்த படங்களை எடுத்து ஹிட் கொடுத்து பின்னர் சமீபத்திய படங்களில் கலவையான விமர்சனங்களையும் பெற்றார். அதனை காட்டிலும் ஈஸ்வரன் படத்தை நன்றாக எழுதி , சிறப்பாக கதாபாத்திரங்களை வடிவமைத்து இயக்கியுள்ளது பாராட்டுக்குரியது. பாரதி ராஜா மீது தனிப்பட்ட முறையில் இருக்கும் அதிக பாசத்தால் கொஞ்சம் நிறைய கிளோஸ் ஆப்ஸ் வைத்தது மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் .

தொழில்நுட்ப அணி
படத்தின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என தொழில்நுட்ப அணி தனது பங்கை சிறப்பாக அளித்துள்ளது. தமன் நிறைய இடங்களில் தன் இசையின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறார். சண்டை காட்சிகள் இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம். கொரோனா தொற்று காலத்திலும் கடின உழைப்புடன் கிராமப்புற மனம் மாறாமால் படம் பிடித்துள்ளனர். இந்த கொரானா சூழ்நிலையிலும் படக்குழுவும் இறங்கி வேலைப்பார்த்தது வெற்றிக்கான பெரிய பங்களிப்பு.

சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் வழக்கமான கதையை கொண்டிருந்தாலும் மகிழ்விக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. ஈஸ்வரனின் கழுத்தில் பாம்பு போல உறவுகள் சூழ்ந்திருக்கும் குடும்ப கதையாக கொடுத்துள்ளார் சுசீந்திரன். எது எப்படி இருந்தாலும் சிம்புவை நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் பார்த்து ரசித்தது சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
பாம்பை வைத்து போஸ்டர் ரீலீஸ் ஆனவுடன் பல சர்ச்சைகள் வந்தாலும் படத்தில் பாம்பு செண்டிமெண்ட் நேர்த்தியாக ஒர்க் அவுட் ஆகிறது . சிம்பு பேசும் பன்ச் டைலாக்ஸ் " நீ அசூரண்ணா நான் ஈஸ்வரன் " சிம்பு
ஃபான்ஸ் செம்ம ஜாலி .

நம்பிக்கை
கிராமம் ஆனாலும் சிட்டி ஆனாலும் ஜோசியம் பார்ப்பது , பரிகாரம் செய்வது ஜோசியர் சொல்லும் வார்த்தைகளுக்கு குடும்பங்கள் கொடுக்கும் மரியாதையை பின்னணியாக வைத்து படம் நகர்ந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் மிக நிறைவாக பலருக்கு தோன்றி ஒரு ஹாப்பி எண்டிங் படமாக ஈஸவரன் அமைந்து உள்ளது . சிம்புவின் ஜாதகம் இனி சுப்பர் என ரசிகர்கள் தியேட்டர் விட்டு வெளியே வரும் போது கிசுகிசுக்கிறார்கள் . ஜோசியத்தில் மிகவும் நம்பிக்கை உள்ள சிலர் -படத்தில் சில காட்சிகளால் சர்ச்சைகள் கிளம்பும் என்றும் சொல்லி வருகின்றனர் . கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று ஒரு ஜாலியான பேமிலி டிராமா பார்த்த சந்தோஷம் அனைவருக்கும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . ஒரு பக்கம் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் இன்னொரு பக்கம் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் என்று இந்த பொங்கல் சந்தோஷமாக வெற்றி படங்களை கொடுத்த பொங்கலாக தான் பார்க்கப்படுகிறது.