Extraction 2 Twitter Review: தோர் நடிகரின் ஓடிடி அட்டகாசம்.. எக்ஸ்ட்ராக்ஷன் 2 எப்படி இருக்கு?
லாஸ் ஏஞ்சல்ஸ்: தோர் கடவுளாக நடித்து கலக்கி வரும் ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் வெளியான எக்ஸ்ட்ராக்ஷன் முதல் பாகம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக முதல் பாகம் வெளியானது போலவே இன்று 2வது பாகமும் வெளியாகி உள்ளது.

முதல் பாகத்தில் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார். ஆனால், 2வது பாகத்தில் அவர் இல்லை. மீண்டும் கமாண்டோ அதிகாரி டைலர் ரேக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளார் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.
எக்ஸ்ட்ராக்ஷன் 2 என்ன கதை: மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்கும் கமாண்டோ அதிகாரியான டைகர் ரேக் இந்த முறை ஒரு பெரிய கேங்ஸ்டரிடம் பிணை கைதிகளாக அகப்பட்டு இருக்கும் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் மிஷனை எப்படி செய்து முடிக்கிறார் என்பது தான் கதை.
A little recap from the #Extraction2 press tour in Berlin! Grateful for your support! pic.twitter.com/JGFuLLwPg5
— Chris Hemsworth (@chrishemsworth) June 14, 2023
கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அல்வா சாப்பிடுறதை மாதிரி, தானோஸின் தலையையே வெட்டிய தோர் கடவுளாச்சே 3வது பாகம் சரியாக ஓடவில்லை என்கிற விரக்தியில் ஒட்டுமொத்த நடிப்பையும் உழைப்பையும் மனுஷன் கொட்டி இருக்கிறார்.
ப்ரமோஷனல் டூர்: எக்ஸ்ட்ராக்ஷன் 2 வெளியாவதை முன்னிட்டு நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடத்திய ப்ரமோஷன் டூர் எப்படி இருந்தது என வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஷர்ட் போடாமல் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தனது ஃபிட்டான உடலை காட்டியபடி ஆரம்பிக்கும் அந்த ப்ரமோஷனல் வீடியோவில் ரசிகர்களை அவர் சந்தித்து ஆட்டோகிராஃப் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஜான் விக் 4 மாதிரி இருக்கு: முதல் பாகம் அளவுக்கு கதை இல்லை என்றாலும், இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஜான் விக் 4 படத்தில் பார்த்ததை போல கொல மாஸாக உள்ளது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

மேலும், கேமரா ஒர்க், ஸ்டன்ட் எல்லாம் வேறலெவலில் மிரட்டுகிறது. ஆக்ஷன் பட பிரியர்களுக்கு வொர்த்தான படத்தை கொடுத்திருக்கிறார் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் என பாராட்டி உள்ளார்.
ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சி: முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே ப்ரூட்டலாக உள்ளது. அதிலும், அந்த ப்ரிஸன் பிரேக் காட்சிகள் வேற லெவல் என இந்த ரசிகரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











