Aavesham Review: ஆவேசம் விமர்சனம்.. லோக்கல் ரோலக்ஸாக மிரட்டிய பகத் ஃபாசில்.. அடுத்த 100 கோடி ரெடி?
நடிகர்கள்: பகத் ஃபாசில், ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ்
இசை: சுஷின் ஷியாம்
நேரம்:
இயக்கம்: ஜித்து மாதவன்
திருவனந்தபுரம்: இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்து வரும் நிலையில், அடுத்த படமும் அந்த கிளப்பில் இணைந்து விடும் என தெரிகிறது. தமிழ் சினிமாவிலேயே பகத் ஃபாசில் விக்ரம், மாமன்னன் என மிரட்டிய நிலையில், டோலிவுட் ரசிகர்களை புஷ்பா படத்தின் மூலம் மிரட்டினார். இந்த ஆண்டு வேட்டையன், புஷ்பா 2 என இரண்டு பெரிய சம்பவங்களை செய்வதற்கு முன் ஹோம் கிரவுண்டில் ஆவேசம் படத்தை கொடுத்து அசத்தி உள்ளார்.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் என்றே சொல்லலாம். அப்படியொரு சின்ன கதையில் பகத் ஃபாசில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அதிரடி ஆட்டத்தை காண்பித்துள்ளார்.

மொத்த படத்தையும் பகத் ஃபாசில் தாங்கி பிடிக்க அறிமுக நடிகர்களாக நடித்திருக்கும் ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ் தங்கள் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகின்றனர். பகத் ஃபாசில் நடிப்பில் இந்த வாரம் வெளியான ஆவேசம் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ஆவேசம் கதை: ஜி.வி. பிரகாஷின் ரெபல் படத்தில் வருவது போலவே கேரளாவில் இருந்து பெங்களூருக்கு படிக்கச் செல்லும் மாணவர்களை அங்குள்ள சீனியர்கள் ரேகிங் செய்கின்றனர். ரேகிங் செய்யும் சீனியர்களை இந்த 3 இளம் மாணவர்கள் எதிர்க்க, சீனியர்களிடம் சரியான அடி வாங்குகின்றனர். நாங்களும் லோக்கல் டானை கூட்டிட்டு வந்து உங்களை பழிக்குப் பழி வாங்குகிறோம் என சவால் விடும் இளைஞர்கள் ரங்கா (பகத் ஃபாசில்) எனும் லோக்கல் கன்னடிகா மற்றும் மலையாளி டானிடம் நட்பு பாராட்டுகின்றனர். இந்த மூவரையும் சொந்த தம்பியாகவே பார்க்கத் தொடங்கும் ரங்கா தனது ஆட்களை வைத்து காலேஜ் சீனியர்களை கல்ச்சுரல்ஸ் விழாவில் அனைவரும் பார்க்கும் படி அடி வெளுத்து விடுகிறார். ஆனால், அதன் பின்னர் ரங்காவால் இந்த மூவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் கடைசியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ரங்காவாக லோக்கல் ரோலக்ஸ் போலவே மிரட்டுகிறார் பகத் ஃபாசில். ஆனால், அம்மாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற நேரடியாக அவர் சண்டை போடமால் அவரது ஆட்களை வைத்து சண்டை போடுவது எல்லாம் சுவாரஸ்யமாக உள்ளது. ரங்காவின் பாஸ் ரெட்டியாக மன்சூர் அலி கான் வரும் இடமெல்லாம் சிரிப்பு சரவெடி தான். கேங்ஸ்டர் படத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் ஜித்து மாதவன்.

பிளஸ்: பகத் ஃபாசில் முதல் ஷாட்டில் ஆரம்பித்து படத்தின் கிளைமேக்ஸ் வரை தனது பட்டாசான நடிப்பால் பட்டையை கிளப்புகிறார். அவருக்குள் இப்படியொரு வைப் இருக்கா என ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து வியக்கும் அளவுக்கு மனுஷன் ரவுண்டு கட்டி நடித்துள்ளார். எப்போதுமே சைலன்ட்டாக நடித்தே ஸ்கோர் செய்யும் அவர் இந்த முறை இறங்கி ஆடியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சுஷின் ஷியாமின் பின்னணி இசை. அந்த மூன்று மாணவர்களின் நடிப்பு உள்ளிட்டவை படத்துக்கு பலமாக உள்ளன.
மைனஸ்: முதல் பாதி சூடு பறக்க சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் சில இடங்கள் தொய்வாகி விடுகின்றன. நானும் ரவுடி தான் படத்தில் மாணவர்களுக்காக லோக்கல் ரவுடியாக விஜய் சேதுபதி சில்றத்தனமான வேலைகளை பார்ப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதை வைத்தே முழு கதையையும் உருவாக்கியது ஒட்டுமொத்தமாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஆவேசம் திரைப்படத்தையும் மலையாள சினிமா ரசிகர்கள் கொண்டாடினால் இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணையும்.


Click it and Unblock the Notifications











