Fight Club Review: லோகேஷ் வெளியீடு.. உறியடி விஜய் குமார் நடிப்பு.. எப்படி இருக்கு ஃபைட் கிளப்?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உறியடி பட ஹீரோ விஜய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட் கிளப் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கி உள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
உறியடி விஜய் குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்தே உருவாகி உள்ளது. ஃபைட் கிளப் படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்ட நிலையில், இந்த படம் குறித்து விமர்சகர்களும், ரசிகர்களும் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம்.
சாந்தனு விமர்சனம்: மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சாந்தனு வாழ்த்துக்கள் மச்சி என லோகேஷை வாழ்த்தி விட்டு கோபக்கார இளைஞன் செல்வா கதாபாத்திரத்தில் விஜய் குமாரின் வெறித்தனமான நடிப்பு மிரட்டல். முதல் ஃபிரேமில் இருந்து பட உலகுக்கு அழைத்துச்சென்ற ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா என அனைவருமே சிறப்பாக பணியாற்றி உள்ளனர் என பாராட்டி உள்ளார்.

பிரபலங்கள் பாராட்டு: இயக்குநர் நெல்சன், எஸ்ஜே சூர்யா, பிரதீப் ரங்கநாதன், ரத்னகுமார், சாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் ஃபைட் கிளப் படத்தை பார்த்து விட்டு பாராட்டி உள்ளனர்.
அபிஷேக் ராஜா விமர்சனம்: எடிட்டிங் தாண்டா படம் என்றும் நான் லீனியர் ஃபுல் சர்க்கிள்ல வந்து சும்மா மிரட்டுது என ஃபைட் கிளப் படத்திற்கு தனது விமர்சனத்தை அபிஷேக் ராஜா கொடுத்துள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்: ப்ரீமியர் ஷோ பார்த்த பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். உறியடி படத்தின் இடைவேளை காட்சியை விட பக்காவான இன்டர்வெல் பிளாக்கை இந்த படத்தில் வைத்துள்ளனர். படத்தின் லொகேஷன் இன்னொரு ஹீரோவாக உள்ளது என ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











