Fighter Review: ஃபைட்டர் முதல் விமர்சனம்.. ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி எப்படி?
சென்னை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட்டர் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய நிலையில், அதே போல ஒரு படத்தை இயக்க சித்தார்த் ஆனந்த் முயற்சி செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கானுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. ஒரே வருடத்தில் ஹாட்ரிக் ஹிட் அடித்தார் பாலிவுட் கிங் கான். அதற்கு அச்சாணியே இந்த படத்தின் வெற்றி தான்.

ஹ்ரித்திக் ரோஷனின் ஃபைட்டர்: ஏற்கனவே சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த வார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து ஷாருக்கானை வைத்து பதான் படத்தை இயக்கி இன்னொரு ஹிட் கொடுத்த சித்தார்த் ஆனந்த் இந்த முறையும் தேசப்பற்றுடன் குடியரசு தினத்துக்கு ஃபைட்டர் படத்துடன் வர காத்திருக்கிறார்.
தீபிகா படுகோனுடன் கெமிஸ்ட்ரி: பதான் படத்தில் ஆரஞ்சு பிகினி அணிந்து தீபிகா படுகோன் ஆட்டம் போட காவி பிகினி அணிந்தார் என பெரிய சர்ச்சையே வெடித்தது. அதை தொடர்ந்து மீண்டும் ஷாருக்கான் உடன் இணைந்து அட்லீ இயக்கிய ஜவான் படத்திலும் நடித்திருந்தார். கடந்த ஆண்டு பேக் டு பேக் பெரிய ஹிட் படங்களை கொடுத்த தீபிகா படுகோன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபைட்டர் படமும் அடுத்து பிரபாஸின் கல்கி படம் என மாஸ் காட்ட காத்திருக்கிறார். இந்த படத்திலும் பீச்சில் சிங்கிள் பீஸ் உடையில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் அவர் ஒட்டி உரசி நடித்து செம கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்துள்ளார்.
முதல் விமர்சனம்: பாலிவுட்டில் ஃபைட்டர் படத்தின் முதல் விமர்சனத்தை ஆல்வேஸ் பாலிவுட் எனும் ட்விட்டர் ஐடி வெளியிட்டுள்ளது. விமானப்படையை மையப்படுத்திய கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தேச பக்தி, வான்வெளியில் விமானங்கள் நடத்தும் சாகசம், பக்காவான சிஜி, கண்ணுக்கு குளிர்ச்சியான கிளாமர், ஆக்ஷன் காட்சிகள் என படம் அதிரடியாகவும் பெரிய திரையில் பார்க்கக் கூடிய படமாகவும் உருவாகி உள்ளதாகவும் 5க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் என விமர்சனம் வந்துள்ளது.
ஷாருக்கான் விமர்சனம்: முன்னதாக படத்தின் டிரெய்லரை பார்த்த ஷாருக்கான் ஃபைட்டர் படத்தை பார்த்து பிரம்மித்துப் போய் விட்டார். பதான் படத்தை விட பல மடங்கு பிரம்மிப்பாக உள்ளது என்றும் சித்தார்த் ஆனந்த் அடுத்த சிக்ஸர் அடிக்கப் போகிறார் என்றும் விமர்சித்து இருந்தார். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பு தூள் என்றும் பாராட்டி இருந்தார். நாளை பான் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ள ஃபைட்டர் திரைப்படத்திற்கு தென்னிந்தியாவில் பெரிய புரமோஷன்கள் இல்லாத நிலையில், இங்கே வசூல் எப்படி இருக்கும் என்றும் பதான் அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வருமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











