Fighter Review: கிராஃபிக்ஸில் மிரட்டும் ஃபைட்டர்.. செம்ம ஆக்ஷன் ட்ரீட்.. டிவிட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: இந்தியில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கிராபிக்ஸ், ஆக்ஷனில் மிரட்டியுள்ள ஃபைட்டர் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
ஃபைட்டர் ட்விட்டர் விமர்சனம்
ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்தாண்டு இதே நாளில் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலித்த பதான், ஷாருக்கானுக்கு தரமான கம்பேக் கொடுத்தது. பதான் வெளியாகி சரியாக ஒராண்டு ஆன நிலையில் மீண்டும் ஒரு ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த். அதன்படி ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, கிராபிக்ஸ், ஆக்ஷன் காட்சிகள் சூப்பராக வந்துள்ளதாக ஷாருக்கான் பாராட்டியிருந்தார். ஒவ்வொரு சீனும் ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான ஃபைட்டர் படத்துக்கும் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் ஃபைட்டர் இந்தாண்டின் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் ஃபைட்டர் திரைப்படம் புதிய முயற்சி என நெட்டிசன் ஒருவர் விமர்சித்துள்ளார். பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மூவியான ஃபைட்டரில் கிராபிக்ஸ், ஆக்ஷன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளதாக பாராட்டியுள்ளார். ஹிருத்திக் ரோஷனும் தீபிகா படுகோனும் இணைந்து படத்தை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளனர். அனில் கபூர் உட்பட மற்றவர்களின் நடிப்பும் சூப்பர். கதை, திரைக்கதை, மேக்கிங், ஆக்ஷன் காட்சிகளில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் மிரட்டிவிட்டார் என விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல், ஃபைட்டர் திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள். ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் இருவரது கேரக்டரும் சூப்பர். இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம் என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசனோ ஃபைட்டர் படத்தால் இந்திய சினிமாவே உயர்ந்து நிற்கிறது என ட்வீட் செய்துள்ளார். ஃபைட்டர் படத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்கள் உடனடியாக வெளியே சென்றுவிடாதீர்கள். படம் முடிந்தும் கூட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஃபைட்டர் திரைப்படம் இந்திய சினிமாவின் பொக்கிஷம் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளதும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. அதில், ஃபைட்டர் மூவியை இப்போது தான் பார்த்து முடித்தேன். இந்தப் படம் இந்திய சினிமாவின் பொக்கிஷம், இதுவரை பார்த்திராத தரமான அனுபவம், கண்டிப்பாக இது பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என விமர்சனம் செய்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக ஃபைட்டர் படத்தின் ஆக்ஷன், கிராபிக்ஸ், மேக்கிங் ஆகியவை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்தாண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் படமாகவும் ஃபைட்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஸ்டார் ரேட்டிங்கிலும் பெரும்பாலும் 4 அல்லது 4.5 வரை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ள ஃபைட்டர் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது படக்குழுவினருக்கும் உற்சாகம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











