The Hunt For Veerappan விமர்சனம்: Netflix-ல் வீரப்பன் வேட்டை! 15 வயது திருமணம் டூ வஞ்சகம் வரை!

Rating:
3.0/5

The Hunt for Veerappan

இயக்குனர் : செல்வமணி செல்வராஜ்

OTT: நெட்ஃப்ளிக்ஸ்

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் தேடுதல் வேட்டை, வீரப்பனின் வாழ்க்கை மற்றும் இறப்பை மையமாக வைத்து உருவான ஆவணத்தொடர்தான் The Hunt For Veerappan.

செல்வமணி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ஆவணப்படத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் நேற்று வெளியானது.

Filmmaker Selvamani Selvarajs The Hunt for Veerappan review

காட்டு ராஜா வீரப்பன்: The Hunt For Veerappan தொடரின் முதல் எபிசோடில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எந்த விதமான பதற்றமும் இல்லாமல் தனது கணவர் பற்றி பேசி உள்ளார். தோளில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு நடந்து வருவதை பார்க்கவே சிங்கம் போல இருப்பாரு. அவருதான் இந்த காட்டுக்கே ராஜா. யானையை சுட்டாரு, யாருக்கும் பயப்படவே மாட்டாரு என்று கேள்விபட்டு இருந்தேன்.

15 வயதில் திருமணம் : ஆனால், அவரை முதலில் பார்த்ததும் பயத்தில் மரத்துக்குபின் மறைந்து கொண்டேன். அப்போது என் பெயரை சொல்லி அழைத்து, என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாரு, நீ மட்டும் என்னை கல்யாணம் பண்ணவில்லை என்றால், என் மனசு பாறை மாதிரி ஆகிவிடும் என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தையிலேயே நான் விழுந்துவிட்டேன். எனக்கு கல்யாணம் நடக்கும் போது வயசு 15 என்றார்.

துல்லியமான ஆராய்ச்சி: வீரப்பன் வேட்டை, வீரப்பன் கதையை ஆழமாக ஆராயும்போது நாணயத்தின் இரு பக்கங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதை திறன்பட செய்து இருக்கிறார் இயக்குநர். இந்தியா டுடே இதழின் பேட்டிகள், வீரப்பனின் ஆடியோ கிளிப்பிங்குகள், வீரப்பனின் தோற்றம் ஒவ்வொன்றையும் மிகவும் துல்லியாகமாக காட்சிப்படுத்தி உள்ளார்.

Filmmaker Selvamani Selvarajs The Hunt for Veerappan review

ராபின் ஹூட்: வீரப்பன் வாழ்ந்த காலகட்டத்தில் பணிபுரிந்த வன அலுவலர்கள், புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கர்நாடகா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் என அனைவரிடத்திலும் பேட்டி எடுத்துள்ளார். வீரப்பன் கிராமத்தை சேர்ந்த மக்கள் அவர் ராபின் ஹூட் என்றும், ஆயிரம் யானைகளை கொன்ற வீரன் என்று புகழ்ந்து இருந்தனர்.

கொடூர கொலை : வீரப்பனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட IFS அதிகாரியான பி ஸ்ரீனிவாஸ் அதிகாரி இன்றும் கிராம மக்கள் இதயத்தில் வாழ்த்து கொண்டு இருக்கிறார். வீரப்பன் தங்கை மாரி தற்கொலைக்கு பழிவாங்கு வகையில், பி ஸ்ரீனிவாஸ் அதிகாரியை எரிந்து, தலையை அறுத்து கொடூரமாக கொலை செய்து மனித உரு கொண்ட காட்டு விலங்கு போல் மாறினார். பல அதிகாரிகளின் கொலைகளுக்கும், அப்பாவி மக்கள் காவலர்களால் கொடுமைக்கு ஆளானதற்கும் தொடக்கமாக இருந்தது இந்த கொலை தான்.

சொந்தமாக ஹெலிகாப்டர்: கடத்தல்கார மாமாவால் வீரப்பன் இளம் வயதில் இந்த தொழிலுக்குள் நுழைகிறார். 1000 யானைகளைக் கொன்று தந்தத்தை கடத்திய வீரப்பன், பின் சந்தனக் கடத்தல்காரனாக மாறினான், சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் வாங்கக்கூடிய அளவிற்கு அருவருப்பான பணக்காரனாக இருந்தான் என்று அவரது கும்பலில் இருந்த ஒருவர் இந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.

நான்கு எபிசோட்: நான்கு எபிசோடுகள் கொண்ட இந்த ஆவணத் தொடரில் வீரப்பனுக்கான வேட்டையில், எந்த குற்றத்தையும் அல்லது வீரப்பனையும் பெருமைப்படுத்தாமல் இயக்குநர் செல்வமணி The Hunt For Veerappan ஆவணத் தொடரில் உள்ளது உள்ளபடி தெளிவுபடுத்துகிறார். இந்த ஆவணத் தொடரை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X