twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'Fingertip Season 2' Review: டார்க்நெட் பற்றி பேசும் 'ஃபிங்கர்டிப் சீசன் 2 ' வெப் சீரிஸ் விமர்சனம்

    |

    {rating}

    நடிகர்கள்: பிரசன்னா, அபர்ணா பாலமுரளி, ரெஜினா கசண்ட்ரே, வினோத் கிஷன், கண்ணாரவி, ஷரத் ரவி
    இயக்குநர் : ஷிவாகர் ஸ்ரீனிவாசன்
    கேமரா: பிரசன்னா எஸ்.குமார்
    இசை: தீனதயாளன்
    தயாரிப்பு: விஷ்ணுவர்தன்

    சென்னை: டார்க் நெட் நவீன வலைதள உலகில் நடக்கும் குற்றங்களை, பாதிப்புகளை விரிவாக பேசுகிறது ஃபிங்கர் டிப் வெப் சீரீஸ் ஓடிடி தளத்தில் ஜீ-5-ல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    ZEE5 Original | Finger Tip - Season 2 Cast & Crew Press Meet | Aparna Balamurali | *Kollywood |

    சென்னை: டார்க் நெட், சமூக வலைதள குற்றங்கள், ஆன்லைன் குற்றங்கள் குற்றச்செயல்கள் பெருகி வரும் காலத்தில் நவீன சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி பேசுகிறது ஃபிங்கர் டிப்-2 (FINGER TIP season 2) வெப்சீரிஸ்.

    'Fingertip Season 2' இரண்டாம் பாகம் OTT தளத்தில் சமீபத்தில் ஜீ-5-ல் வெளியாகியுள்ளது. 8 எபிசோடுகளாக இது வெளியாகியுள்ளது.

    அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை..தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை !அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை..தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை !

    பிரசன்னா, அபர்ணா முரளி உள்ளிட்டோர் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

    அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

    சமீபகாலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் பொதுமக்களுக்கு, போலீஸாருக்கு தலைவலியை ஏற்பொஅடுத்தியுள்ள நிலையில் சைபர் குற்றங்களை பற்றி அழகாக காட்சிப்படுத்தியுள்ளது இந்த வெப்சீரிஸ். டார்க் நெட் எனப்படும் கிரிப்டோ முதலீடுகள் மற்றும் டார்க் நெட்டில் நடக்கும் குற்றச் செயல்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை மிக அழகாக இந்த சீரிஸில் காட்சி படுத்தி உள்ளனர்.

    பிளாக் நெட் குற்றங்கள்

    பிளாக் நெட் குற்றங்கள்

    சைபர் குற்றங்களின் உச்சபட்சமாக் பிளாக் நெட் எனப்படும் கருப்பு உலகம் இந்த உலகத்தில் நடக்கும் குற்றங்களை தன்மையை லேசாக தொட்டுள்ளது இந்த வெப் சீரீஸ். குழந்தைகளை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்வது, குற்றவாளிகளை ஏவி கொடூரமாக கூலிப்படை கொலை செய்வது, கொடூரமான கொலைகள் இவைகளை லைவ் ஆக காட்சிப்படுத்துவதையும் அதைக்காண பிளாக் நெட் உலகத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதைக்காண லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை வாரி இறைக்க ஒரு கூட்டமே தயாராக உள்ளது. இதுகுறித்த ஒரு மைக்ரோ லெவல் குற்றச்சம்பவத்தை இதில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

    சைபர் குற்றங்களை அழகாக பேசும் ஃபிங்கர் டிப் சீசன் 2

    சைபர் குற்றங்களை அழகாக பேசும் ஃபிங்கர் டிப் சீசன் 2

    சைபர் குற்றங்களை தடுக்க காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதற்கென தனியாக டிஜிபி மாவட்டந்தோறும் எஸ்பி காவல்துறையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. ஆனாலும் குற்றவாளிகள் தரப்பில் அவர்களுடைய டெக்னாலஜி அறிவு அறிவும், பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களின் அறியாமையும் தான் குற்றவாளிகளுக்கு மிகப் பெரிய சாதகம். இதை அழகாக எடுத்து வைத்துள்ளது ஃபிங்கர் டிப் படம்.

    கதை இதுதான்

    கதை இதுதான்

    முதல் பாகம் ஏற்கனவே வெளிவந்துள்ளது அதில் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், சமூகவலைதளங்களில் அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் இளம் தலைமுறையினர் பற்றி அழகாக விளக்கி இருப்பார்கள். இரண்டாம் பாகம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் ஜீ-5-ல் வெளியாகி உள்ளது இதில் பிரசன்னா கதாநாயகனாக நடித்துள்ளார். சூரரைப்போற்று நாயகி அபர்ணா பாலமுரளி, ரெஜினா கேசாண்ட்ரே, ஷரத் ரவி, ஷாலி நிகேஷ், வினோத், ஜீவா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    தனித்தனிக்கதைகள் சிக்கலான திரைக்கதை இறுதியில் சரியாக அமையும் முடிவு

    தனித்தனிக்கதைகள் சிக்கலான திரைக்கதை இறுதியில் சரியாக அமையும் முடிவு

    ஃபிங்கர் டிப்-2 ல் ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு தனித்தனி கதைகளை சொல்கிறார்கள். செல்போன் கடையில் செல்போனை கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அல்லது அவர்கள் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அவர்களுக்கு அனுப்பி அதன் மூலம் அவர்களிடம் தனது ஆசையை தீர்த்துக்கொள்கிறான் ஒருவன். சமூக வலைதளங்கள் ட்ரோல் செய்து சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை உருவாக்குவதும் ஒருவரைப் பற்றி அவதூறு கிளப்பி அவரை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதும், ஒருவரைன் புகழ்ந்து அவரை உயர்த்துவது போன்று நவீன விஷயங்களை செய்யும் இளைஞர் அமைச்சர் ஒருவருக்கு உதவுவதன் மூலம் அவர் கட்சியிலேயே இன்னொரு நபரை ஒன்றுமில்லாமல் செய்வது இன்னொரு கதை.

    கொடூர டார்க் நெட் கொலை

    கொடூர டார்க் நெட் கொலை

    சைபர் கிரைம் பிரிவு உதவி கமிஷனராக வரும் பிரசன்னாவின் பக்கத்து வீட்டு நண்பரும் அவரது மனைவியும் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்படுகின்றனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரசன்னா அது பற்றி துப்பு துலக்க தொடங்குகிறார். முகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய தழும்பு காரணமாக மன உளைச்சலுடன் வாழும் இளைஞர் தன் காதலை ஏற்காத பெண்ணின் மீது உள்ள கோபத்தில் கோபமாக பேச அதை வீடியோவாக எடுக்கும் சிலர் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுகின்றனர். அதை பார்த்த இளைஞர்கள் பெண்களை இளம் பெண்களை திட்டி வருகின்றனர். வீடியோவை பார்த்துவிட்டு தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணை அவர் வேலை செய்யும் இடத்தில் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன்.

    பிளாஸ்டிக் சர்ஜரி ஹீரோயின்

    பிளாஸ்டிக் சர்ஜரி ஹீரோயின்

    வீடியோ வெளியிட்ட சம்பந்தப்பட்ட இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர் இது ஒரு கதை. அபர்ணா பாலமுரளியின் சகோதரியை வீடியோ எடுத்து மிரட்டும் நபரால் சகோதரி தற்கொலை செய்துக்கொள்ள குற்றவாளியை தேடும் முயற்சியில் இறங்கும் கதாநாயகி மிகப்பெரிய ஹேக்கராக உருவாகுகிறார். தன் முகத்தில் உள்ள மூக்கு அவலட்சணமாக இருக்கு என ஃபேஸ் ஆப் பார்த்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் ஹீரோயின் சந்திக்கும் பிரச்சினை.

    மகள் அந்தரங்க வீடியோவால் மிரட்டப்படும் இன்ஸ்பெக்டர்

    மகள் அந்தரங்க வீடியோவால் மிரட்டப்படும் இன்ஸ்பெக்டர்

    காவல்துறையில் கடுமையான கண்டிப்புக்கு பேர்போன இன்ஸ்பெக்டரின் மகளின் அந்தரங்க வீடியோவை எடுத்து அதன் மூலம் அவரை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாகி அவரிடம் இருந்து பணம் பறிக்க முயல்கிறான் அதே நபர். இத்தனை கதைகளையும் தனித்தனியாக சொல்லி பின் ஒன்றாக இணைத்து அழகாக இறுதியில் முடிச்சுகளை அவிழ்த்து காட்சிகளை அழகாக அமைத்து உள்ளார் இயக்குனர் ஷிவாகர்.

    ஃபிங்கர் டிப் -2 கதையின் பிளஸ்

    ஃபிங்கர் டிப் -2 கதையின் பிளஸ்

    இந்த கதையின் பிளஸ் என்று பார்த்தால், டார்க் நெட் குற்றங்கள் பற்றியும் சமூக வலைதளங்கள் அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் சமூக வலைதள குற்றங்கள் பற்றி அழகாக எடுத்துச் சொல்கிறது. சமூக வலை தளங்களில் நடக்கும் நவீன சைபர் குற்றங்கள் குறித்த ஆர்வமும் ஈடுபாடும் இல்லாத காவல்துறை அதிகாரிகளைப் பற்றி மெல்ல சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இது காலத்திற்கு ஏற்ற சிந்திக்கக் கூடிய விஷயம்.

    பயம் கொள்ளாதீர்கள் விழிப்புணர்வு மெசேஜ்

    பயம் கொள்ளாதீர்கள் விழிப்புணர்வு மெசேஜ்

    ஆபாச காணொளியை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டும் நபரை கண்டு எதற்கு அஞ்ச வேண்டும். அதை ஃபேக் என்று சொல்லிவிட்டுப் போகலாம், தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நம்முடைய பயம்தான் அவர்களுடைய பலம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா மூலம் சொல்லும் மெசேஜ் மிகச்சிறப்பு. இவை அனைத்தும் அல்லாமல் சிக்கலான ஒரு கதையை தனித்தனியாக கொண்டு வந்து இறுதியில் அனைத்தையும் ஒன்று சேர்த்து அழகாக முடிப்பது வலுவான திரைக்கதை இல்லாவிட்டால் சாத்தியம் இல்லை.

    வலுவான திரைக்கதை

    வலுவான திரைக்கதை

    வலுவான திரைக்கதையும், பிரசன்னா உள்ளிட்ட அத்தனை கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் ஷிவாகர் காட்சிகளை கோர்வைப்படுத்தி இறுதியில் முடிச்சை அவிழ்ப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மற்றவர்களை வேலை வாங்குவதிலும், கேமரா, திரைக்கதையின் ஆழம் இவை அனைத்தும் படத்தின் பிளஸ் எனலாம்.

    ஃபிங்கர் டிப் -2 கதையின் மைனஸ்

    ஃபிங்கர் டிப் -2 கதையின் மைனஸ்

    இந்த வெப் சீரிஸின் மைனஸ் என்று எடுத்துக்கொண்டால் படத்தின் ஆரம்ப எபிசோடுகள் 3 வரை மெதுவாக நகர்கிறது. கேரக்டர்களை விலக்குகிறேன் என்று காட்சிகளின் ஸ்பீடு குறைக்கப்பட்டு மெதுவாக நகர்வதால் எபிசோடை பார்க்கும் பார்வையாளர்கள் சலித்துப் போய் மூடிவிட்டு செல்லவும் வாய்ப்புண்டு. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பவர்கள் மட்டுமே அடுத்தடுத்த எபிசோடுகளில் வரும் சுவாரசியத்தை அனுபவித்து பார்க்க முடியும். மற்றபடி எப்படி வெப்சைட்டுகளுக்கு உள்ள இழுவை இதிலும் உள்ளது.

    கோட்டைவிடும் காட்சிகள்

    கோட்டைவிடும் காட்சிகள்

    ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்வது சில காட்சிகள் ஏன் நடக்கிறது என்று புரியாமல் இருப்பது போன்றவை படத்தின் மைனஸ் என்று சொல்லலாம். அதேபோல் குற்றச்செயலில் பாதிக்கப்படும் மக்கள் போலீஸுக்கு செல்லாமல் கூப்பிட்ட இடத்திற்கு செல்வது, மகளின் வீடியோவை வைத்து மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசட்டையாக இருப்பதும், அவன் மிரட்டும் போது மட்டும் ரியாக்ட் செய்வதும் காமெடியாக இருக்கிறது.

    காட்சி அமைப்பில் உள்ள ஓட்டைகள்

    காட்சி அமைப்பில் உள்ள ஓட்டைகள்

    பாலியல் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டும் நபர் சாதாரணமாக தன்னுடைய இடத்திற்கு பாதிக்கப்பட்டவரை வரச்சொல்வதும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு செல்வதும், பணம் பறிப்பதும் காமெடியாக உள்ளது. மிக சிறப்பாக திட்டமிட்டு இயங்கும் ஒருவர் இதுபோன்ற எளிதாக சிக்கும் வகையில் சொல்வாரா என்பதை இயக்குனரின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம்.

    சிறப்பம்சம்

    சிறப்பம்சம்

    சிறப்பம்சம் என்னவென்றால் இன்றைய நவீன டார்க் நெட் பற்றி கதை பேசுகிறது. ஹேக்கர்கள் பற்றி பேசுகிறது. ஹேக்கர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் நவீன விஷயங்கள் என்ன? எவைகள் குற்றமாகிறது? செல்போன்கள் எவ்வாறு நமக்கு பிரச்சனை ஆகிறது என்பதை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ளலாம். இந்த படம் 8 எபிசோடுகளாக ஜீ-5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. பொறுமையுடன் முதல் மூன்று எபிசோடுகளை கடந்து விட்டால் அடுத்து வரும் எபிசோடுகள் விறுவிறுவென்று நகர்கிறது.

    அடடா பிரசன்னா

    பிரசன்னாவின் நடிப்பை மிகவும் பாராட்டலாம். போலீஸ் அதிகாரியாக மிடுக்காக செய்துள்ளார். வில்லனாக வரும் நடிகர் கன்னா ரவிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர் முக பாவனைகளில் உணர்வை எளிதாக வெளிப்படுத்துகிறார். மற்றவர்களும் அவர்களுக்கு ஏற்ற கேரக்டரை அழகாக செய்துள்ளனர். பில்லா இயக்குநர் இயக்குநர் விஷ்ணுவர்தன் தான் இந்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர். மொத்தத்தில் இந்த வெப்சீரிஸ் ஒரு நல்ல பொழுதுபோக்கு சீரிசாக உருவாகியுள்ளது.

    English summary
    ‘Fingertip Season 2’ Web Series Review ( 'ஃபிங்கர்டிப் சீசன் 2 ' வெப் சீரிஸ் விமர்சனம்): OTT Platform Zee5 Releasing ‘Fingertip Season 2’ Web Series, Showcasing Darknet, CryptoCurrency and Cyber Crimes Existing in Today’s Modern World.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X