For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  FIR MOVIE REVIEW : விஷ்ணுவிஷால் இஸ்லாமியராக நடிக்கும் எஃப் ஐ ஆர் எப்படி இருக்கு ?

  |

  Rating:
  3.5/5
  Star Cast: நடிகர்கள் : விஷ்ணு விஷால் ரைசா வில்சன் ரெபா மஞ்சிமா இயக்கம் : மனு ஆனந்த் இசை : அஸ்வத்
  Director: இயக்கம் : மனு ஆனந்த்

  சென்னை: ராட்சசன் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் திரைப்படங்கள் மற்ற மொழி ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது

  ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் தயாரிப்பாளராகவும் தான் நடிக்கும் திரைப் படங்களை தயாரித்தும் வருகிறார்

   3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்! 3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்!

  இப்போது விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள எஃப்ஐஆர் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் முதல்முறையாக முஸ்லிமாக நடித்துள்ளார்.

  சர்வதேச விருதுகளை

  சர்வதேச விருதுகளை


  முண்டாசுப்பட்டி கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற சர்வதேச விருதுகளை வென்றது .மேலும் அந்த ஆண்டு வெளியான படங்களில் மிகச்சிறந்த படமாக ராட்சசன் கொண்டாடப்பட்டது. ராட்சசன் தெலுங்கில் ராட்சசடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

   இயக்குனர்  மனு ஆனந்துடன்

  இயக்குனர் மனு ஆனந்துடன்

  ராட்சசன் கொடுத்து வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் திரைப்படங்கள் மற்ற மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து புது புது இயக்குனர் உடன் இணைந்து பணியாற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால் இப்பொழுது மனு ஆனந்துடன் இணைந்துள்ளார்

   மதம் கவலைக்குரியது

  மதம் கவலைக்குரியது

  விஷ்ணு விஷால் தனது தாயுடன் (மாலா பார்வதி) மிகவும் அன்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . ஒரு சாதாரண பதவியில் இருக்கும் காவலரான அம்மாவின் கஷ்டங்களை புரிந்து கொண்டு செயல் படுகிறார். இந்த பாசத்திற்கு நடுவில் படத்தில் பயங்கரவாத பின்னணியில் அன்பான விஷ்ணு விஷால் குடும்பத்தின் அமைதி கெடுவதை அழகாக அமைக்கப்பட்ட ஒரு திரில்லர் கதை மூலம் சுவாரஸ்யமாக சொல்லுகிறார்கள். குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒரு சிலர் செய்யும் கொடூரமான செயல்களுக்கு ஒரு நாட்டில் இருக்கும் அத்தனை மக்களையும் குற்றம் சாட்டுவது எவ்வளவு தவறு என்பதைக் சுட்டி காட்ட முயற்சி செய்து உள்ளது படக் குழு. நாயகன் இர்ஃபான் அகமது (விஷ்ணு விஷால்) , தனது கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். IIT-Madras-ல் படித்த கெமிக்கல் இன்ஜினியர் மற்றும் கோல்ட் மெடலிஸ்ட் , தனது வேலைக்காக பல இன்டெர்வியூக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஒவ்வொரு இன்டர்வ்யூவிலும் இவரது இஸ்லாமிய மதத்தை குறித்த கேள்விகளை எதிர்கொள்ளும் பொழுது ஒரு விதமான மன அழுத்தத்திற்கு ஆளாவதை சரியாக சித்தரித்துள்ளார்கள். இவரை சுற்றி நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் தான் கதையின் ட்விஸ்ட்

   மூன்று ஹீரோயின்கள்

  மூன்று ஹீரோயின்கள்

  தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கும் விஷ்ணுவிஷால் எஃப் ஐ ஆர் படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் மற்றும் ரெபா என மூன்று ஹீரோயின்கள் மூன்று விதமான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தில் மிக முக்கிய அதிகாரியாக நடித்துள்ளார்.ரெபா முன் பாதியில் நிலினமாகவும் பின் பாதியில் அதிரடியாகவும் அசதி உள்ளார் . கௌதம் மேனன் பாடி லாங்வேஜ் எப்போதும் போல் ஸ்டைல் + நேர்த்தி .

  ஹிஜாப் உடையில்

  ஹிஜாப் உடையில்

  ரைசா வில்சன் இந்த படத்தில் செய்யும் இன்வெஸ்டிகேஷன்ஸ் மிக அருமை . பல காட்சிகளில் ஒரு தேர்ந்த அதிகாரியாக வளம் வருகிறார்.குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் கம்பீரமாக பேசுவதிலும் அனைவரையும் கவனம் ஈர்த்து உள்ளார் . இப்போதைய சோசியல் மீடியா ட்ரெண்டிங் விஷயங்களில் இந்த ஹிஜாப் உடையும் ஒன்று. சரி ஆன நேரத்தில் இந்த படம் வெளி ஆகி உள்ளது என்று பலரும் சொல்லி வருகின்றனர் .

  விஷ்ணு விஷால் முஸ்லிமாக

  விஷ்ணு விஷால் முஸ்லிமாக

  இரக்கம் இல்லாமல் ஒரு சில தீவிரவாதிகள் செய்யும் கொடூர செயலுக்கு இந்தியாவில் அப்பாவி மக்களும் பலிக்கு ஆளாகின்றனர் என்ற முக்கிய கருத்தை இந்த படம் கூறி உள்ளது. மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் முஸ்லிமாக பல விஷங்களை நுணுக்கமாக சிந்தித்து அந்த கதாபாத்திரத்திற்கு வலு கூட்டி உள்ளார். திரில்லர் கதை களத்தில் கொஞ்சம் அரசியலையும் பேசும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

   மிகப்பெரிய பலம்

  மிகப்பெரிய பலம்

  (Its Prashanth) யூட்டுபர் பிரசாந்த் கவனிக்கத்தக்க முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இந்த படத்தில் தோன்றியுள்ளார். தனது நடிப்பு திறமையை முடிந்தவரை நிரூபித்துள்ளார். சீரியசாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில் லேசாக நம்மை சிரிக்க வைக்கும் ஒரே மனிதர் பிரஷாந்த் மட்டுமே. பின்னணி இசையில் அசத்தியுள்ளார் அஸ்வத். இந்த படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை தான் என்பதில் ஒட்டு மொத்த குழுவும் பெரிதும் நம்புகிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் காட்சிகளை எடிட் செய்த விதத்தையும் பரபரப்பாக செல்லக்கூடிய ஸ்டண்ட் காட்சிகளிலும் எமோஷனல் விஷயங்களையும் ஒருங்கிணைத்து மிக அற்புதமாக பின்னணி இசை கொடுத்தத அஸ்வதிற்கு சிறப்பு பாராட்டுக்கள். அருள் கேமரா ஜாலங்கள் ஒவ்வொன்றும் கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக அமைத்து உள்ளது.

  சமூகத்திற்கு தேவையான படம்

  விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்க இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது . படம் வெளியாவதற்கு முன்பாகவே மிகப்பெரிய பிசினஸ் ஆகி உள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிறு சிறு லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் இருப்பதை கூர்ந்து கவினிதால் நன்கு தெரியும். அவைகளை சரி செய்து இருந்தால் இந்த படம் இன்னும் தரமாக இருந்திருக்கும் . தீவிரவாதம், இஸ்லாமியர்கள் மீது தவறான பார்வை, இறையாண்மை என சமூகத்திற்கு தேவையான மிக முக்கிய படமாக எஃப்ஐஆர் உருவாகி உள்ளது.குடும்பத்துடன் கண்டிப்பாக தியேட்டர் சென்று இந்த படத்தை பார்க்கலாம் .

  English summary
  Vishnu vishal acted "FIR" got released in theaters and Vishnu Vishal has definitely made a brave choice with the film as the leading man and as the producer. The exceptional pre-release business figure of FIR has become huge and also director Manu Anand has made his best in the screenplay. FIR is an effective, fast-paced thriller and sure audience can enjoy with feel good bgm and social message potrayed in a different manner.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X