Fire Review: ஃபயர் விமர்சனம்.. ரச்சிதா, பாலாவின் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனதா?.. படம் எப்படி இருக்கு?

நடிகர்கள்: பாலாஜி முருகதாஸ், ரச்சிதா, சாந்தினி, சாக்‌ஷி, காயத்ரி
இசை: டிகே
இயக்கம்: ஜே. சதீஷ் குமார்

Rating:
2.5/5
Star Cast: பாலாஜி முருகதாஸ், ரச்சிதா, சாந்தினி,
Director: ஜே. சதீஷ் குமார்

சென்னை: ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி ஒருவன் செய்யும் அட்டகாசம் தான் அந்த படம். நிஜ வாழ்க்கையிலும் அது போல பல பேர் உலாவி வருவதை செய்திகளில் பார்த்து வருகிறோம். நாகர்கோயிலில் இளம் பெண்களை ஏமாற்றிய நபரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஃபயர் படம் உருவாகி இருக்கிறது.

Fire  Fire Review  Rachitha Mahalakshmi

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ரன்னர் அப்பாகவும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டிலையும் வென்ற பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் 2வது படம் தான் இது. இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே ரச்சிதா மகாலட்சுமியுடன் இணைந்து அவர் நடனமாடிய "மெது மெதுவாய்” கவர்ச்சி பாடல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி டிரெண்டான நிலையில், ஃபயர் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஃபயர் படத்தின் கதை: பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை திருமணம் செய்து வைப்பதற்கு முன்னதாக அவர்களை பாதுகாக்க பெற்றோர்கள் எந்தளவுக்கு கஷ்டப்பட வேண்டும் என்றும் சினிமாவில் காதல் காட்சிகளை பார்த்துவிட்டு சரியான நபர்களை தேர்ந்தெடுக்காமல் பொறுக்கி, ரவுடி போல இருக்கும் பசங்க தான் கெத்து என நினைத்து சில இளம் பெண்கள் ஏமாறுவதை வெளிச்சம் போட்டு காட்டவே இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே. சதீஷ் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலாஜி முருகதாஸ் இளம் பெண்களை ஏமாற்றும் காசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான் மற்றும் சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. சதீஷ் குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். இளம் பெண்களை ஏமாற்றி இன்ப வாழ்க்கை வாழும் நபரை போட்டுத் தள்ள அந்த பெண்கள் முடிவு செய்வதும் ஆனால், எதிர்பாராத விதமாக வேறு ஒருவரால் அந்த நபர் இறக்க அதன் பின்னர் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

பிளஸ்: தயாரிப்பாளரான ஜேஎஸ்கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்திய கதையை தேர்வு செய்த விதமே படத்திற்கு பாசிட்டிவ் தான். பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நெகட்டிவ் ஷேடில் இந்த படத்தில் நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். ஹீரோவாக நினைப்பவர் இப்படியொரு மோசமான கதாபாத்திரத்தை எடுத்து செய்வதற்கு தனி தில் வேண்டும். ஹீரோயின்களான ரச்சிதா, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் மற்றும் காயத்ரி ஷான் என 4 பேரும் நடிப்பையும் கவர்ச்சியையும் தாராளமாக கொட்டி நடித்துள்ளனர்.

மைனஸ்: சில இடங்களில் காட்சிகள் ஓவர்டோஸ் ஆகிப் போவதும் படம் சொல்ல வந்த கருத்தை சில இடங்களில் படத்தின் காட்சிகளே மீறுவதுமான விஷயங்கள் தான் நெகட்டிவாக உள்ளது. சில இடங்களில் நாடகத்தன்மையான காட்சிகள் மற்றும் தொய்வு ஏற்படுவதை தவிர்த்திருந்தால் இன்னமும் இந்த படம் ஃபயராக இருந்திருக்கும். விழிப்புணர்வு காட்சிகள் அடங்கிய நிஜ சம்பவத்தை பின்னணி கொண்ட படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X