Freedom Review: ப்ரீடம் விமர்சனம்.. சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பு சூப்பர்.. படம் எப்படி இருக்கு?

Rating:
3.0/5
Star Cast: சசிகுமார், லிஜோமோல் ஜோஸ்
Director: சத்யசிவா

சென்னை: இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் எடுக்கப்பட்டுள்ளன. ராஷி கண்ணா இந்தியில் அறிமுகமான மெட்ராஸ் கஃபே உள்ளிட்ட பல படங்கள் அவரது கொலை வழக்கை சுற்றி படமாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர், அகதிகள் முகாமில் இருந்த ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகி 90 கோடிக்கும் அதிகமான வசூலை வேட்டையாடி உள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் ஈழத் தமிழராகவே சசிகுமார் நடித்துள்ளார். ஈழத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனையை ஏகப்பட்ட காமெடி காட்சிகளை வைத்து ஜாலியான பொழுதுபோக்கு படமாக கொடுத்து அபிஷன் ஜீவிந்த் ஹிட் அடித்த நிலையில், கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா ரத்தமும் சதையுமாக அவர்களது வலியையும் வேதனையும் காட்டியிருக்கும் படமாகவே ப்ரீடம் படம் உருவாகி இருக்கிறது.

Freedom Movie Review in Tamil  Sasikumar and Lijomol Jose acting holds the movie very well
Photo Credit:

ஜூலை 10ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஃப்ரீடம் திரைப்படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க...

ப்ரீடம் கதை: ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை வேலூர் சிறைக்கு அழைத்து வந்து காவல் துறை அடித்து துன்புறுத்தி விசாரணை என்கிற பெயரில் கொடுத்த சித்ரவதைகளையும் அந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த 43 பேரின் நிலை என்ன ஆனது என்கிற உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சினிமாவுக்கு சில புனைவுகளை உட்புகுத்தி எடுக்கப்பட்டுள்ள படமாகவே ஃப்ரீடம் படம் உருவாகியிருக்கிறது.

சசிகுமார் மிரட்டியிருக்கிறார்: அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையையும் ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தி வரும் சசிகுமார் இந்த படத்தில் இலங்கை அகதியாக நடித்துள்ள விதம் ரசிகர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைத்துவிடும். காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் அடித்து சித்ரவதை செய்யும் காட்சிகளில் எல்லாம் சசிகுமார் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். 4 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கே இருந்தால் இப்படியே செத்து மடிய வேண்டியது தான் என பிரிசன் பிரேக் செய்து தப்பிக்க நினைக்கும் இடங்களிலும் எப்படியாவது ப்ரீடம் பெற வேண்டும் என அவர் போராடும் காட்சிகளும் அட்டகாசம்.

Freedom Movie Review in Tamil  Sasikumar and Lijomol Jose acting holds the movie very well
Photo Credit:

லிஜோமோல் ஜோஸ் நடிப்பு எப்படி?: ஜெய்பீம் செங்கேணியாக ரசிகர்களை கவர்ந்த லிஜோமோல் ஜோஸ் இந்த ஆண்டு ஜென்டில்வுமன் படத்தில் கொலை செய்வாள் பத்தினி என்பது போல பகீர் கிளப்பும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை திகில் அடைய செய்திருந்தார். ஃப்ரீடம் படத்தில் லிஜோமோல் ஜோஸுக்கான கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக எழுதப்படாத நிலையிலும், அவர் வரும் காட்சிகளில் அவரது ஸ்ட்ராங்கான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார்.

பிளஸ்: ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாக வைத்து இந்த ஆண்டு அக்‌ஷய் குமார், மாதவன் நடித்த கேசரி சாப்டர் 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஜீவ் காந்தி கொலையை சுற்றி அகதிகள் முகாமில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த சித்ரவதைகளை கண்முன்னே காட்டும் வரலாற்று படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்ததே இயக்குநர் சத்யசிவாவுக்கு வெற்றி தான். சசிகுமார், லிஜோமோல் ஜோஸை தாண்டி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் சுதேவ் நாயர் கலக்கியிருக்கிறார். மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். சிறை காட்சிகளில் உதயகுமாரின் ஒளிப்பதிவு கிளாப்ஸ் வாங்குகிறது. 2 மணி நேரம் 9 நிமிடங்கள் என படத்தை கச்சிதமாக கட் செய்திருக்கிறார் என்.பி. ஸ்ரீகாந்த்.

மைனஸ்: டூரிஸ்ட் ஃபேமிலி படம் போலவே இருக்கும் என்கிற மைண்ட் செட்டில் இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அது வேறு கதை, இது வேறு கதை. இரண்டாம் பாதியில் தான் முக்கியமான அந்த பிரிசன் பிரேக் காட்சிகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. முதல் பாதியில் காவல்துறையின் விசாரணை காட்சிகள் மட்டுமே அதிகம் நீள்வதால் சில தொய்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. மொத்தத்தில் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாகும் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X