For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அக்கா தங்கை பாசத்தில் நம்மை பிரமிப்பூட்டும் ஃப்ரோசன் 2

  |

  Recommended Video

  Sruthi Hassan press conference |Frozen 2 | Dubbing | Official Trailer 2|DD

  Rating:
  3.0/5

  சென்னை : ஃப்ரோசன் 2 படம் 2013 ல் வெளியான ஃப்ரோசன் படத்தின் நீட்டிப்பே ஆகும்.இந்த படம் வால்ட் டிஸ்னி தயாரித்து இருக்கும் 58வது அனிமேஷன் படமாகும் .

  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்படும் இவ்வகையான படங்களுக்கு பொருட்செலவு கிடையாது ,ஆனால் மிக பெரிய தொழில்நுட்பங்களும் ,தொழில் நுட்ப கலைஞர்களும் தேவைப்படுகிறார்கள் . இவ்வைகயான படங்கள் முதலில் 3டி ஸ்டூடியோக்களில் மனிதர்களை வைத்து எடுத்து விடுவார்கள் அதற்கு பிறகு அதை அனிமேஷன் படமாக மாற்றுவார்கள் .,சத்யனும் அவர்களுடன் சேர்ந்து நகைச்சுவை கதா பாத்திரமாக மாறி செம லூட்டி அடிக்கிறார் .

  இம்முறையில் தமிழில் ரஜினியை வைத்து கோச்சடையான் படம் எடுக்கபட்டது ,ஆனால் தொழில்நுட்பங்கள் சரியான அளவில் பயன் படுத்தவில்லை எனும் காரணத்தால் படம் தோல்வியை தழுவியது .

  frozen 2 is a animation movie released in many languages of india

  ஃப்ரோசன் 2 படத்தை இயக்கி இருக்கிறார்கள் க்ரிஸ் பக் மற்றும் ஜெனிபர் லீ .படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருக்கின்றனர் இடினா மென்ஷல்,கிரிஸ்டேன் பெல்,ஜானதன் கிரோப்,ஜோஸ் காட் ,ஸ்டர்லிங் கே பிரவுன் மற்றும் ஆல்பிரட் மொலினா .

  frozen 2 is a animation movie released in many languages of india

  இந்த அனிமேஷன் படக்கதையை இனைந்து உருவாக்கி உள்ளார்கள்
  க்ரிஸ் பக் ,ஜெனிபர் லீ ,மார்ஸ் இ ஸ்மித் ,கிர்ஸ்டன் ஆன்டர்சன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் .
  இந்த படத்தின் ப்ரீமியர் நவம்பர் 7 ஹாலிவுட்டில் திரையிடப்பட்டது,அங்கு பலரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறப்பட்டது. இதையடுத்து இன்று உலகம் முழுவதும் படம் வெளியிடபட்டிருக்கிறது .

  குழந்தைகளை கவரும் வண்ணம் கதை அமைந்ததால் தியேட்டர்களில் கண்டிப்பாக சனி மற்றும் ஞாயிறு கூட்டம் அலைமோதும் .

  frozen 2 is a animation movie released in many languages of india

  இரு சகோதரிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கடந்த கால வாழ்க்கைக்கு சென்று நிகழ் கால வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களையும் தங்களுடைய சாம்ராஜ்யத்தையும் காப்பற்றுவதே கதை. இதற்காக அவர்களுக்குள் இருக்கும் அற்புதமான சக்தியையும் ஆற்றலையும் எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பதே ஸ்வாரஸ்யங்கள் கூடிய மீதி கதை.

  frozen 2 is a animation movie released in many languages of india

  பல மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தில் பல பிரபலங்கள் குரல் கொடுத்து இருக்கின்றனர் . தமிழில் ஸ்ருதிஹாசன் மற்றும் விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி தங்களது குரல் கொடுத்து அந்த அந்த கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டமாக வாழ்ந்து இருக்கின்றனர்.ஸ்ருதிஹாசன் குறிப்பாக பேசுவது மட்டும் அல்லாமல் பாடியும் இருப்பது கூடுதல் சிறப்பு .

  அக்கா தங்கை பாசம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உணர்வுபூர்வமான காட்சிகள் பல இந்த படத்தில் உள்ளது. சில இடங்களில் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களும் , பிரமிப்பூட்டும் கிராபிக்ஸ் காட்சிகளும் நம்மை சந்தோஷ படுத்தும் . 2டி மற்றும் 3டி என பல திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது .

  பாடல் ஆசிரியர் விவேக் இந்த படத்தில் பல பாடல்கள் எழுதி உள்ளது மேலும் சிறப்பு .ஆங்கில படத்தின் இசைக்கு ஏற்ப ,வரிகளுக்கு ஏற்ப தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் படி புதுமையான பல வார்த்தைகளை பயன் படுத்தியது சவாலான விஷயம் தான் .இருந்தாலும் அந்த சவாலை சிறப்பாக சமாளித்து பல நல்ல பாடல் வரிகளை கொடுத்துள்ளார் .

  frozen 2 is a animation movie released in many languages of india

  சமீக காலங்களில் பல அனிமேஷன் திரைப்படங்களுக்கு பல சினிமா பிரபலங்கள் டப்பிங் செய்வதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் .அந்த வகையில் சமீபத்தில் வெளி வந்த "லயன் கிங் " படத்தில் அரவிந்த் சாமி ,ரோபோ ஷங்கர் ,சிங்கம் புலி,மனோ பாலா,போன்ற முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்து அசத்தினார்கள் .

  ஆங்கில அனிமேஷன் படங்களுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குரல் கொடுப்பது ட்ரெண்டிங் ஆன விஷயம் .இப்பொழுது ஃப்ரோசன் 2 படத்திலும் காமெடி நடிகர் சத்யன் குரல் கொடுத்து அசத்தி உள்ளார்.
  பல பல கவுண்டர் டயலாக் சொல்லி குழந்தைகளையும் ,பெரியவர்களையும் ஒட்டு மொத்த மாக சிரிக்க வைத்துள்ளார் .

  frozen 2 is a animation movie released in many languages of india

  டிடி யும் ,ஸ்ருதி யும் அக்கா தங்கையாக டப்பிங்கில் அசத்தி கொண்டிருக்க ,சத்யனும் அவர்களுடன் சேர்ந்து நகைச்சுவை கதா பாத்திரமாக மாறி செம லூட்டி அடிக்கிறார் .

  ஃப்ரோசன் 2போன்ற படங்கள் தரமாக டிஸ்னி தயாரிப்பில் வந்தது பல சுட்டி குழந்தைகளுக்கு மிக பெரிய சந்தோசம். அனிமேஷன் படங்களை தத்ரூபமாகவும் , உணர்ச்சிபூர்வமாகவும் எடுப்பதில் டிஸ்னி போன்ற நிறுவனங்கள் மிக பெரிய சாமர்த்தியசாலிகள்.

  ஃப்ரோசன் 2 கண்டிப்பாக குடும்பத்துடன் திரையரங்கம் சென்று என்ஜாய் செய்ய வேண்டிய நல்ல படம்.

  English summary
  shruthihaasan, dd, sathyan, frozen2, christopher beck, elsa, henna, ஸ்ருதிஹாசன், டிடி , சத்யன், ஃப்ரோசன் 2, கிறிஸ்டோபர் பெக் , எல்சா , ஹேனா
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X