Fun Roast Review: நாட்டாமை படத்திலேயே இதுதான் பெஸ்ட்.. அதுக்கு காரணமும் இதுதான்.. பர்னீச்சர் டேமேஜ்

சென்னை: அஜித்தின் என்னை அறிந்தால் படத்தைத்தான் நம்ம ஜென் ஆல்ஃபா மரண கலாய் கலாய்த்து விட்டார், நாமே கலாய்த்த நாட்டாமை படத்திற்கு என்னதான் விமர்சனம் செய்வார் என்று ஆவலுடன், இன்னைக்கு நாட்டாமை படம் பார்க்கலாம் என்று கேட்டதற்கு, நான் Obsession படம் பார்க்க போறேன் என்று சொன்னவரை, அதுக்கு 18 வயசுக்கு மேல ஆகனும் ஆல்ஃபா சார் என்று கூறி, கை கால்களைத்தான் கட்டிப் போடவில்லை. மற்றபடி எப்படியோ ஓரியாடி உட்கார வைத்துவிட்டேன். படத்தை ப்ளே செய்யும் போதே இயக்குநர் K.S. ரவிக்குமாரிடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை எப்படியும் சுமார் 30 முறை என் முகத்தை பார்த்ததை, என்னால் விவரிக்க முடியாத ரியாக்‌ஷனைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதே நேரத்தில், சரத்குமாருக்கும் குஷ்புவுக்குமான பாடலான கொட்டாப் பாக்கும் கொளுந்து வெத்தலையும் பாடலுக்கு விரல்களால் தாளம் போட்டதை நானே கவனித்தேன். மேலும் சில காமெடி காட்சிகள் வரும்போது, இந்த காமெடி எல்லாம் இந்த படத்தில் தானா என்று கேட்டுவிட்டு, படத்துக்கும் இந்த காமெடி சீனுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கு என்று கொட்டும் வைத்துவிட்டார்.

Fun Roast Review  Gen Alpha Watches Nattamai and Questions Everything
Photo Credit:

படத்தின் காட்சிகள் சில அரசியல் நிலைப்பாட்டிற்கே மிகவும் முரண்பாடாக இருக்கிறது எனது கருத்துக்கள் இருந்தாலும், நமது ஜென் ஆல்ஃபா என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் இருந்தது. முதலில் இந்த கான்செப்ட்டே தப்பு என்று ஒரே போடாக போட்டு உடைத்துவிட்டார். அது எப்படி எந்தவிதமான புலனாய்வுகளே இல்லாமல் ஒருவர் தனது கண் முன் இருக்கும் சிலவற்றை வைத்து குற்றவாளி இவர் தான் என்று முடிவெடுக்கிறார்?. இதுல, தண்டையும் வேற கொடுக்கிறாரு? போலீஸ், கோர்ட் எல்லாம் எதுக்கு இருக்கு? இந்த படம் ரிலீஸ் ஆன போது காவல் துறையினரும் நீதித் துறையினரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்களா? இல்லையா? பெரியவர்கள் சொல்லும் சாட்சியை ஏற்காமல் 18 வயதுக்கும் குறைவான குழந்தை சொல்வதை சாட்சியாக ஏற்று தீர்ப்பு சொல்வது மட்டும் இல்லாமல், அதற்கு ஒரு காரணமும் வேறு கூறுகிறார். இது எல்லாம் டூ மச்.

எப்போது நடந்தாலும் தவறுதான்: அவங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்களா இல்லையானு தெரியல, ஆனால் காவல் நிலையமும் நீதிமன்றங்களும் வருவதற்கு முன்னர் மக்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்று சொன்னேன். ஆனால் படத்தின் காலகட்டத்தைப் பார்த்தால் மக்கள் பேண்ட் - சர்ட் போட்டுள்ளார்கள், கார்கள் எல்லாம் கூட சில காட்சிகளில் வருகிறது. கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு டீச்சர் வருகிறார், ஏன் அந்த ஊருக்கு பள்ளிக்கூடமே வந்துவிட்டது அப்படி என்றால், நாகரீகமடையாத மக்களின் கதையை எடுத்து, சொசைட்டிக்கு தவறான டைரக்‌ஷனை இந்த படம் கொடுத்திருக்கு என்று பளார் விட்டுவிட்டார் நம்ம ஜென் ஆல்ஃபா. இதுக்கே இப்படி சொல்றியே, ஏ.ஐ டெக்னாலஜியே வந்துடுச்சு ஆனாலும் சில கிராமங்கள் இன்னும் இப்படி இருக்கு, நகரங்களில் ஆலமரத்துக்கும் கோவில் திண்ணைகளுக்கும் பதிலாக கட்டிடங்களுக்குள் கட்டப்பாஞ்சாயத்துக்கள் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னேன். எப்போது நடந்தாலும் தவறுதான் என்று கூறினார்

Fun Roast Review  Gen Alpha Watches Nattamai and Questions Everything
Photo Credit:

பூமர் கிளாஸ்: நாட்டாமை பாதம் பட்டால் என்ற பாட்டு வரியே ஏற்புடையதாக இல்லை. முதலில் இந்த நாட்டாமை ஏன் ஸ்கூல் பிரின்ஸ்பல் மாதிரியும் P.E.T மாஸ்டர் மாதிரியும் இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் நாட்டாமை இருக்கும் வீடு, ஒரு காட்சியில் அவருக்கு இருக்கும் சொத்துமதிப்பை விளக்குவதை எல்லாம் பார்த்தால் பணம் இருந்தால் ஈஸியாக நாட்டாமை ஆகிவிடலாம் போலத் தெரிகிறது. படிப்பது எல்லாம் வேஸ்ட்டா? மீனா கதாபாத்திரம் படித்த, தனது முடிவுகளை தானே எடுக்கும் கதாபாத்திரமாக இருக்கிறார். ஆனால் அவரையும் கடைசியில் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பூமர் கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார் குஷ்பு.

நான் தான் இப்படி மாட்டிட்டு முழிக்கிறேன், நீயாவது உனக்கு புடிச்ச மாதிரி இருன்னு சொல்லி இருந்தால் எப்படி இருந்திருக்கும். மீனா கதாபாத்திரம் குறித்து யோசித்து இருந்தாலும், பணம் படைத்தவன் நாட்டாமை ஆகிவிடலாம் என்ற விமர்சனம் ஷாக் கொடுத்தாலும், கதாபாத்திர வடிவமைப்பு அப்படித்தான் இருந்ததையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். டயலாக்குகள் சிலது எல்லாம் சகிக்க முடியவில்லை. இந்த டயலாக்குகளுக்கு யாருமே எதிர்வினை ஆற்ற வில்லையா என்று கேள்வியையும் முன் வைத்தார், நானும் தேடிப் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறிவிட்டேன்.

Fun Roast Review  Gen Alpha Watches Nattamai and Questions Everything
Photo Credit:

இதுதான் பெஸ்ட்: படத்தில் உருப்படியான விஷயம் என்றால் கவுண்டமணி செந்திலின் காமெடிகள் தான். ஆனால் அதுவும் படத்தின் கதையோட்டத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் உள்ளது. படத்திற்கே சம்பந்தம் இல்லாமல் இருப்பதால் தான் அது நல்லா இருக்குதோ என்னவோ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X