Game Changer Blue Sattai Maran Review: கேம் சேஞ்சர் ஒர்க் அவுட் ஆச்சா இல்லையா? ப்ளூ சட்டை மாறன் பளீச்
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி நேற்று அதாவது ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கேம் சேஞ்சர். படத்தினை தில் ராஜ் மற்றும் ஆதித்யாராம் நிறுவனம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பொங்கலை டார்கெட் செய்து வெளியாகியுள்ள படங்களில் கேம் சேஞ்சர் படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருந்தது. படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
படத்தின் தொடக்கத்தில் முதலமைச்சராக உள்ள ஸ்ரீகாந்தைக் காட்டுகின்றார்கள். அவரது மகனாக எஸ்.ஜே. சூர்யா உள்ளார். மரணப்படுக்கையில் உள்ள ஸ்ரீகாந்த் நல்ல ஆட்சியைக் கொடுக்கவேண்டும் என முயற்சிக்கின்றார். ஆனால், அதற்கு அவரது மகன் எஸ்.ஜே. சூர்யா விடமாட்டேன் என்கின்றார். அந்த நேரம்பார்த்து, அங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ராம் சரண் வருகின்றார். தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்கும் ராம் சரணுக்கும், அரசியல்வாதியான எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையில் நடைபெறும் மோதல்தான் கதை.

படத்தில் உள்ள கதாபாத்திரங்கள், கதாநாயகன் செய்யக்கூடிய விஷயங்களைப் பார்த்து, அன்பிரிடிக்டெபிளாக உள்ளானே, யூகிக்கவே முடியலயே என கூறிக்கொண்டே உள்ளார்கள். ஆனால், உண்மையிலேயே கதாநாயகன் என்ன செய்கின்றார் என்பதை ஈசியாக யூகித்துவிட முடிகின்றது. அப்படி இருந்தும் முதல் பாதி ஓரளவுக்கு ஓ.கே.சொல்லும் அளவுக்கு இருந்தது. இரண்டாம் பாதியில் கதாநாயகன் தேர்தல் அதிகாரியாக மாறிவிடுவார். அதன் பின்னர் அரசியல்வாதியுடன் மோதுகின்றார். இதுமட்டும் இல்லாமல், ஒவ்வொரு முறையும், தேர்தல் அதிகாரியிடம் எவ்வளவு பவர் இருக்கு எனத் தெரியுமா? நாங்க நினைத்தால் என்ன செய்ய முடியும் தெரியுமா என காட்சிக்கு காட்சி சொல்லிக் கொண்டே உள்ளார்.
அபத்தம்: தேர்தல் அதிகாரியின் பவரைக் காட்டுகின்றேன் என்பதில் எதாவது ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கின்றதா? தைத்தட்டல் வருவதைப்போல் எதாவது காட்சி இருக்கின்றதா? எதுவுமே கிடையாது. பணத்தை கரியாக்குவதற்காக இதுபோல படம் எடுத்து வைத்துள்ளார்கள். க்ளைமேக்ஸில் ஒரு பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கையை எவ்வளவு அபத்தமாக படமெடுத்து வைத்துள்ளார்கள். ஷங்கர் படம்னு சொல்றாங்க, புதுசா எந்த கிரியேட்டிவிட்டியும் இல்லை. ஏற்கனவே பல படங்களில் உள்ள காட்சிகளைத்தான் படமாக எடுத்து வைத்துள்ளார்கள்.
கிரிஞ்: சாலையை மறித்துக் கொண்டு பாடல் காட்சி, சண்டைக் காட்சி, ஹை பட்ஜெட் படம் என்றாலே 4,5 ஹெலிஹாப்டர்களைக் காட்டுவது, எங்க பாட்டு சத்தம் கேட்டாலும் உடனே மேக்-அப் போட்டுக்கொண்டு வந்த நடனமாடும் கதாநாயகி. எல்லா வீட்டிற்கும் பெயிண்ட் அடித்துவிட்டு பாடல் காட்சிகளை எடுப்பது, கதையை இங்கே புரட்டிப்போடுகின்றேன் என தேவை உள்ளதோ இல்லையோ, ஒரு ப்ளஷ்பேக் என, கிரிஞ்ச்த் தனமாக எடுத்து வைத்துள்ளார்கள்.
கார்த்திக் சுப்பராஜ்: மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கின்றது என்றால், படத்தின் கதை கார்த்திக் சுப்பராஜ் உடையது எனக் கூறுகின்றார்கள். கார்த்திக் சுப்பராஜ், தென்னவன் படத்தைப் பார்த்து, அதன் பின்னர் ஷங்கர் படங்களையும் பார்த்து, அதிலிருந்து காட்சிகளை எடுத்து ஒரு கதையை உருவாக்கி, அதனை மீண்டும் ஷங்கரிடமே விற்றுள்ளார். இது கூடத் தெரியாமல் அந்தக் கதையை வாங்கி ஷங்கர் படமாக்கியுள்ளார். இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











