Game Changer X Review: ’கேம் டேஞ்சர்’.. சொதப்பிய ஷங்கர்.. கேம் சேஞ்சர் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படம் இந்த சங்கராந்திக்கு சரவெடியாக இருக்குமா? இருக்காதா? என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் உள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், அடுத்த பிரம்மாண்ட இயக்குநர் யார் என தேடிய ராம் சரணுக்கு ஷங்கர் இயக்கத்தில் படம் பண்ணலாமே என்கிற முடிவை எடுத்து கேம் சேஞ்சர் கதையை டிக் செய்துள்ளார். இந்த படத்தின் பட்ஜெட்டும் சுமார் 400 முதல் 500 கோடி வரை இருக்கும் என எஸ்.ஜே. சூர்யாவே பேட்டியளித்திருந்தார்.

game changer  game changer review  ram charan


இந்நிலையில், இந்தியன் 2 படத்தை போல மொக்கையாகி விடக் கூடாது என்கிற பதட்டத்துடனே ரசிகர்கள் படம் பார்க்க சென்ற நிலையில், அமெரிக்க ப்ரீமியரில் ரசிகர்களை படம் திருப்திப்படுத்தியதா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ஹைரானா பாடல் இல்லை: நானா ஹைரானா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகும் போதே நெட்டிசன்கள் சிஜி சரியே இல்லையே ஷங்கர் என திட்ட ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு பாடலுக்கும் பல கோடி ரூபாய் செலவு செய்து ஷங்கர் அதற்காக மட்டுமே பல மாதங்கள் மெனக்கெட்டு செதுக்கி வந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த பாடலில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தில் இணைக்க முடியவில்லை என்றும் கூடிய சீக்கிரமே படத்தில் இணைக்க முயற்சி செய்து வருகிறோம் என கேம் சேஞ்சர் படக்குழுவே அறிவித்துள்ளது. தியேட்டருக்குச் சென்று கியாரா அத்வானியை அந்த பாடலில் காண ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சொதப்பிய ஷங்கர்: ராம் சரண் மட்டுமே தனது நடிப்பால் கேம் சேஞ்சர் படத்தை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். ஷங்கரின் திறமையான இயக்கம் பெரிதாக வெளிப்படாத நிலையில், பல இடங்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் தடுமாறுகிறது. கியாரா அத்வானியுடனான காதல் காட்சிகள், வெண்ணிலா கிஷோர், சுனில் காமெடி காட்சிகள் எல்லாம் மொக்கை ரகம். ஃபிளாஷ்பேக் போர்ஷன் மட்டுமே ஹைலைட். 2.5 ரேட்டிங் தரலாம் என இந்த நெட்டிசன் ஷங்கர் சொதப்பியதை விமர்சித்துள்ளார். எபிக் பிளாக்பஸ்டர்: ராம்சரண் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த சங்கராந்தி சரவெடி தான். ஷங்கர் இஸ் பேக் படம் எபிக் பிளாக்பஸ்டர் என ராம் சரண் ரசிகர்கள் உற்சாகமாக படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் நள்ளிரவு காட்சி 1.30 மணிக்கு வெளியாகாமல் 2 மணிக்கு வெளியானதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி வருகின்றனர்.


கரியர் சேஞ்சர்: மனோபாலா விஜயபாலன் கேம் சேஞ்சர் படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கிறார். மேலும், கேம் சேஞ்சர் திரைப்படம் ஷங்கருக்கு கரியர் சேஞ்சர் படமாக அமைந்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார். ராம்சரணின் அட்டகாசமான நடிப்பு, எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி கொடுத்த வேலையை செய்துள்ளனர். ஷங்கர் டிரேட்மார்க் உடன் ஒரு பக்காவான அரசியல் கலந்த கமர்ஷியல் படம் இது என விமர்சித்துள்ளார்.


கேம் டேஞ்சர்: கிறிஸ்டோபர் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தை கேம் டேஞ்சர் என விமர்சித்து படம் சுமார் ரகம் தான் என்று கூறியுள்ளார். படத்தில் பாசிட்டிவான அம்சங்கள் என்னவென்றால் முதல் பாதியில் ராம் சரண் அறிமுகக் காட்சி, தோப் சாங், இன்டர்வெல் மற்றும் 2ம் பாதியில் ஃபிளாஷ்பேக் காட்சியில் வரும் ராம்சரணின் நடிப்பு தான் எனக்கூறியுள்ளார். ட்விட்டர் விமர்சனத்தை பொறுத்தவரையில் கேம் சேஞ்சர் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படம் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், விரைவில் முழு விமர்சனம் வெளியாகும் அதுவரை காத்திருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X