Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்!

சைக்கோ கொலைகாரனிடம் இருந்து பேயின் உதவியுடன் டாப்ஸி ஆடும் ஆட்டம் தான் கேம் ஓவர்.

Recommended Video

Game Over Audience Review: கேம் ஓவர் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் டாப்ஸியை புகழ்ந்துள்ளார்.

Rating:
2.5/5
Star Cast: டாப்சீ பன்னு, வினோதினி வைத்தியநாதன், சஞ்சனா நடராஜன், அனிஷ் குருவில்லா, ரம்யா சுப்பிரமணியம்
Director: அஷ்வின் சரவணன்

சென்னை: ஒரு சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க, ஒரு பேயின் உதவியுடன் நாயகி ஆடும் ஆட்டம் தான் கேம் ஓவர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் மற்றும் சைக்கோ படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதுவும் சமீபத்தில் பேய் படங்களும் சைக்கோ திரில்லர் படங்களும் மாபெரும் ஹிட்டானதால், இதுபோன்ற பல படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. அதில் ஒரு படம் தான் கேம் ஓவர்.

Game over review: A Taapsee pannu show stealer movie

ஆனால் இதில் என்ன ஒரு வித்தியாசம் என்றால், இது ஒரு பேய் - சைக்கோ படம். பேய்க்கு இருக்கும் மார்க்கெட்டையும், சைக்கோ படங்களுக்கு உள்ள மவுசையும் தெரிந்துகொண்டு, இரண்டையும் காக்டெயில் போல் மிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.

படத்தின் துவக்கத்தில் ஒரு இளம் பெண், சைக்கோ கொலைகாரனால் மிக்கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அடுத்த ஓராண்டுக்குள் ஏராளமான பெண்கள் அந்த சைக்கோவால் கொல்லப்படுகிறார்கள்.

Game over review: A Taapsee pannu show stealer movie

முதல் கொலை நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து எனும் அறிவிப்புடன் டாப்சி நமக்கு அறிமுகமாகிறார். வீடியோ கேம் டிசைனரான டாப்சியின் பின்னணி என்னவென்றால், அவர் ஒரு ரேப் விக்டிம். இதனால் இரட்டு என்றாலே கடும் பயம் அவருக்கு. அந்த பாதிப்பின் காரணமாக தாய், தந்தையை பிரிந்து, சென்னையில் தனியாக வசிக்கிறார். அவருடன் ஒரு வேலைக்காரப் பெண்ணும், வாட்ச்மேனும் துணைக்கு இருக்கிறார்கள்.

டாப்சி கையில் ஒரு டாட்டூ குத்தியிருக்கிறார். ஓராண்டு கழித்து அவருக்கு அந்த இடத்தில் கடுமையான வலி ஏற்படுகிறது. அந்த டாட்டூ குத்தப்பட்ட மையில் ஒரு பெண்ணின் சாம்பல் இருப்பது டாப்சிக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அவர், அந்த டாட்டூவை அழிக்க நினைக்கிறார். ஆனால் அது முடியவில்லை. அதேபோல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உண்டான பயமும் அவரை பாடாய் படுத்துகிறது.

Game over review: A Taapsee pannu show stealer movie

இதனால் மனமுடையும் டாப்சி ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார். காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் வீல் சேரில் அமரவைக்கப்படுகிறார். அப்போது அந்த சைக்கோ கொலைகாரன் டாப்சி வீட்டிற்குள் நுழைகிறான். அவனிடம் இருந்து தப்பிக்க டாப்சி ஆடும் கேம் தான் படம்.

மேலே சொன்ன கதையை படிப்பதற்கு எத்தனை சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு படமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் முதல் பாதியில் 20 நிமிடங்களுக்கு பிறகான காட்சிகளில் இருந்து இடைவேளை வரை செம ஸ்லோவாக நகர்வதால், நமது பொறுமைக்கு சோதனை ஏற்படுகிறது. இரண்டாம் பாதி படம் செம த்ரில்லிங்காகவும், விறுவிறுப்பாக இருப்பது தான் படத்தின் பலம்.

வழக்கமான பார்முலாக்களில் இருந்து விடுபட்டு, வித்தியாசமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். இதில் பேய் இருக்கிறதா இல்லையா என்பதை பார்வையாளர்கள் தான் யூகித்துகொள்ள வேண்டும். ஏனெனில், இதில் பேய் வரும் மீடியம் மிகப் புதிது. ஆனால் இந்த பேயும் தன்னை கொன்றவனை பழிவாங்கத்தான் வருகிறது.

Game over review: A Taapsee pannu show stealer movie

'என்னை நம்பி எவ்வளவு பாரத்தை வேண்டுமானாலும் வைக்கலாம்' என இயக்குனர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் டாப்சி. முதல் காட்சியில் இருந்தே ஸ்வப்னாவின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்து சென்றுவிடுகிறார். திரையில் நாம் பார்ப்பது டாப்சியை அல்ல, ஸ்வப்னாவைத் தான் எனும் நம்பகதன்மையை கொடுக்கும் அளவுக்கு சிறப்பானதொரு நடிப்பை கொடுத்து, படத்தை முழுமையாக தாங்கியிருக்கிறார். தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடிங்க டாப்சி.

டாப்சி வீட்டு வேலைக்காரப் பெண்ணாக வரும் வினோதினி, அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக நியாயம் செய்திருக்கிறார். அச்சு அசலாக அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர, சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா மற்றும் மலையாள நடிகை மாலா பார்வதிக்கு தான் இந்த படத்தில் அதிக காட்சிகள் இருக்கின்றன. நிறைவாக செய்திருக்கிறார்கள்.

Game over review: A Taapsee pannu show stealer movie

சைக்கோ கொலைகாரன் யார் என்பதும் தெரியவில்லை, அவன் ஏன் எல்லோரையும் கொலை செய்கிறான் என்பதும் சொல்லப்படவில்லை. 'அதை எல்லாம் எதுக்கு வெளியில சொல்லிகிட்டு. மக்களே அதை ஒரு மாதிரி புரிஞ்சிப்பாங்க' என இயக்குனர் நினைத்துவிட்டார் போலும். இல்லை, 'ஏதாவது காரணத்தைச் சொன்னால் தானே, அது சரி, சரியில்லை என விமர்சிப்பார்கள். சொல்லாமலேயே விட்டு விட்டால்..' இப்படியும் கூட அவர் யோசித்திருக்கலாம். 'அதுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான்னு சொன்னீங்க. எதுக்குன்னு சொல்லையே' எனும் வடிவேலு மைண்ட் வாய்சோடு தான் பலரும் தியேட்டரில் இருந்து வெளியே வருகிறார்கள்.

வஸந்தின் ஒளிப்பதிவும், ரான் ஈத்தன் ரோகனின் பின்னணி இசையும் தான் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களில் கூட அத்தனை ஆங்கிள்களில் கேமராவை வைத்து, அற்புதமாக படத்தை எடுத்திருக்கிறார் வஸந்த். அதேபோல், ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய இசையால் சுவாரஸ்யப்படுத்துகிறார் இசையமைப்பாளர். முதல் பாதி நீளத்தை குறைத்திருந்தால், ரிச்சர்ட் கேவினுக்கு இன்னும் கொஞ்சம் லைக்ஸ் போட்டிருக்கலாம்.

Game over review: A Taapsee pannu show stealer movie

பல கேள்விகள் இருந்தாலும், ஒரு நல்ல த்ரில்லர் பார்த்த உணர்வையே தருகிறது படம். கேம் ஓவரில் இருந்து மீண்டும் ஒரு புதிய கேமை தொடங்கியிருக்கிறார் டாப்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X