Gameover நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் டாப்ஸி: கேம் ஓவர் ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: டாப்ஸி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கேம் ஓவர் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடித்த கேம் ஓவர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
டாப்ஸி
கேம் ஓவர் படம் பார்த்தேன். அருமையான படம். டாப்ஸி சிறப்பாக நடித்துள்ளார். பிஜிஎம் சிறப்பு. ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் பவர்ஃபுல் என்று ஷஷாங்க் தெரிவித்துள்ளார்.
த்ரில்லர்
கேம் ஓவர் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்கிறார் ஹோஹித். படம் முழுக்க அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பாமல் திரையையே பார்க்க வைத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அருமையான த்ரில்லர், தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை. இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுக்கள் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
ஹீரோயின்
கேம் ஓவர் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் டாப்ஸியின் அசத்தலான நடிப்பை பார்த்து அசந்து போகிறார்கள். உங்களால் மட்டும் எப்படி இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்ய முடிகிறது என்று கேட்டுள்ளனர். இப்படி ஒரு வித்தியாசமான த்ரில்லரை அளித்த இயக்குநருக்கும் பாராட்டுக்கள் வந்து குவிகின்றது. டாப்ஸி படத்தை தன் தோளில் தாங்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
விமர்சகர்கள்
கேம் ஓவர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு படம் பிடித்துவிட்டது. படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். கேம் ஓவர் படம் ஹிட்டாவதை யாராலும் தடுக்க முடியாது. நல்ல கதை இருந்தால் அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு கேம் ஓவர் ஒரு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நயன்தாரா நடிப்பில் கொலையுதிர்காலம் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தலைப்பு பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் கேம் ஓவர் படத்தை பார்ப்பவர்கள் டாப்ஸி இன்னும் ஒரு நயன்தாரா என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











