Gandhi Talks Public Review: மருந்துக்கு கூட ஒரு வசனம் இல்லை.. காந்தி டாக்ஸ் எப்படி இருக்கு?
சென்னை: அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கிஷோர் பாண்டுரங் கதை அமைத்து இயக்கி உள்ள படம் காந்தி டாக்ஸ். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை, பிங்க் மூன் மெட்டா ஸ்டுடியோஸ் மற்றும் மூவி மில் எண்டர்டைன்மெண்ட் இணைந்து படத்தை தயாரிக்க, ஜீ ஸ்டூடியோஸ் படத்தை ரிலீஸ் செய்துள்ளது. படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படத்தில் ஒரு டயலாக் கூட இல்லை என்பதுதான்.
மொத்தம் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் ஒரு டயலாக் கூட இல்லாமல் எல்லாமே சைகைகளாலும் முக பாவனைகளாலுமே படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று அதாவது ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அருமையான படம்: ரசிகர் ஒருவர் கூறுகையில், " எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. பல காட்சிகள் நன்றாக இருந்தது. பொருமையாக பார்த்தால் இது அனைவருக்கும் பிடிக்கும். வசனத்திற்கு தேவையே இல்லாதபடி படத்தை அமைத்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருமே நல்ல நடிகர்கள் என்பதால் அவர்கள் நடிப்பிலேயே பிரமாதப்படுத்தி விட்டார்கள். இசை, ஒளிப்பதிவு என மொத்த படமுமே சூப்பர். ஆனால் எத்தனை பேர் வந்து பார்ப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
அனைவரும் பார்க்கலாம்: மற்றொருவர் கூறுகையில், " படம் நன்றாகவே புரிகிறது. விஜய் சேதுபதியும் அரவிந்த் சாமியும் படத்தை சிறப்பாகவே நடித்து கொண்டு செல்கிறார்கள். ஏ,ஆர், ரகுமானின் இசை படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. காட்சிக்கு காட்சி நிதானமாக கவனித்தாலே படம் புரிகிறது. போர் அடிக்கவே இல்ல, நல்ல படம் பார்க்க வேண்டும் என்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். நமது நாடு சுதந்திரத்திற்காக பாடுபட்டது போல இப்போது இல்லையே என்பதை படமாக காட்டியுள்ளார்கள், சிறப்பு " என்று தெரிவித்துள்ளார்.

சேதுபதி ரசிகை: ரசிகை ஒருவர் கூறுகையில், " படத்தில் ரொம்பவும் கருத்து சொல்கிறேன் என்ற்உ டிராமாவாக கொண்டு செல்லாமல் நிதானமாக படத்தை கையாண்டுள்ளார்கள். சுவாரஸ்யமாக படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர். வசனங்கள் இல்லையே என்ற எண்ணமே வரவில்லை. காட்சிக்கு காட்சி அவர்கள் சொல்ல நினைப்பதை அழகாக கடத்துகிறார்கள். விஜய் சேதுபதிக்காகத்தான் நான் படம் பார்க்க வந்தேன். வழக்கமான படங்களில் இருந்து இந்த படம் முற்றிலுமாக நல்ல கருத்தைச் சொல்லும் படமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் தரப்பில் இருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











