Gandhi Talks X Review: விஜய் சேதுபதி, அரவிந்த் சாமியின் மெளனப் படம்.. ஏ.ஆர். ரஹ்மான் இசை எப்படி?

சென்னை: ஆரம்ப காலத்தில் சினிமாவில் டப்பிங் வசதிகள் எல்லாம் இல்லாத காலக்கட்டத்தில் பேசும் படங்கள் என சொல்லப்படும் மெளனப் படங்கள் தான் அதிகம் வெளியாகின. அந்த படங்களுக்கு பின்னணி இசை அமைத்து அதனை ரசிக்கும்படி மாற்றினர்.

சார்ளி சாப்ளின் படங்கள் எல்லாம் காலத்துக்கும் அழியாத வகையில் இன்னமும் ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் வெளியான முதல் மெளனப் படம் என்றால் அது 1918ம் ஆண்டு வெளியான 'கீசவதம்' படம் தான் தமிழ் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் நடராஜ முதலியார் அந்த படத்தை இயக்கினார்.

Gandhi Talks X Review in Tamil  VIjay Sethupathi  Aravind Swamy and AR Rahman Magic is just brilliant

திரெளபதி மானசம்ரக்‌ஷனம், மைலாவணன், லவ குசா, காளிங்க மர்த்தனம் உள்ளிட்ட மெளனப் படங்கள் வெளியாகின. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'பேசும் படம்' திரைப்படம் மீண்டும் ரசிகர்களை அந்த காலத்துக்கே அழைத்துச் சென்றது. இந்நிலையில், அதே போன்ற முயற்சியை விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரியை வைத்து 2026ல் மராத்தி பட இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலேக்கர் இயக்கியுள்ளார். அந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

காந்தி டாக்ஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி இந்த படத்தில் வேலை தேடும் இளைஞராக நடித்துள்ளார். அரவிந்த் சாமி பண சிக்கலில் தவிக்கும் பணக்காரராக நடித்துள்ளார். அதிதி ராவ் விஜய் சேதுபதியின் காதலியாக வருகிறார். விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இருவரது வாழ்க்கை எங்கே சந்திக்கிறது, இருவருக்கும் இடையே என்ன சிக்கல் உண்டாகிறது என்பது தான் இந்த படத்தின் கதை. படம் ரொம்பவே சிறப்பாக உள்ளது. மேலும், முக்கிய மெசேஜையும் சொல்கிறது என ரமேஷ் பாலா இந்த படத்துக்கு 5க்கு 3.5 ரேட்டிங் கொடுத்து பாராட்டியுள்ளார்.

கோட் ஏ.ஆர். ரஹ்மான்: ஏகப்பட்ட சர்ச்சைகளில் ஏ.ஆர். ரஹ்மான் சிக்கியுள்ள நிலையில், அவரது இசையில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மொத்த மெளனப் படத்தையும் தனது இசையால் தூக்கி நிறுத்தியிருக்கிறார் கோட் ஏ.ஆர். ரஹ்மான் என இந்த டோலிவுட் ரசிகர் சாலா பாகுந்தி என்று படத்தை விமர்சித்துள்ளார். விஜய் சேதுபதி, அதிதி ஆன்ஸ்க்ரீன் ஜோடி ப்யூர் மேஜிக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா ரசிகர்களுக்கான படம்: மெளனப் படத்தில் நடிகர்களின் நடிப்பும், காட்சி அமைப்பும் ரொம்பவே முக்கியம். இயக்குநர் கிஷோர் ஒவ்வொரு சீனையும் செதுக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் ரீ ரெக்கார்டிங் மூலம் கடைசி வரை ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். மக்கள் செல்வன் தனது நடிப்பால் மாஸ் காட்டி விட்டார். மெய்யழகன் அரவிந்த் சாமி இன்னொரு பக்கம் சிக்ஸர் அடிக்கிறார். இந்த படம் ப்யூர் சினிமா ரசிகர்களுக்கான படம் கண்டிப்பாக தியேட்டரில் மிஸ் பண்ணிடாதீங்க என ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X