For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Gargi Movie Review: ஜெய்பீம், ஜன கண மன வரிசையில் சேருமா சாய் பல்லவியின் கார்கி? விமர்சனம் இதோ!

  |

  Rating:
  4.0/5

  நடிகர்கள்: சாய் பல்லவி, காளி வெங்கட்
  இசை: கோவிந்த் வசந்தா
  இயக்கம்: கெளதம் ராமசந்திரன்

  சென்னை: ஜெய்பீம், ஜன கண மன படங்களுக்கு பிறகு இன்னொரு கோர்ட் ரூம் டிராமா சினிமா உலகத்தை உலுக்கப் போகிறது என்றால் அது சாய் பல்லவி நடிப்பில் ஜூலை 15ம் தேதி வெளியாக உள்ள கார்கி தான்.

  இயக்குநர் கெளதம் ராமசந்திரன் எப்படி இப்படியொரு கதையை படமாக்க முன் வந்தார் என்பதே பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

  கிளைமேக்ஸில் இயக்குநர் வைத்துள்ள அந்த ட்விஸ்ட் நிச்சயம் ரசிகர்களின் நெஞ்சை அடைக்கும் என்பது உறுதி. கார்கி விரிவான விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

  கார்கி கதை என்ன

  கார்கி கதை என்ன

  டீச்சராக உள்ள கார்கி (சாய் பல்லவி) தனது அப்பாவை (சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க புகழ் ஆர்.எஸ். சிவாஜி) காணவில்லை என தேட, ஒரு இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 4 பேருடன் சேர்த்து 5வது நபராக கைது செய்யப்பட்டு இருப்பது தெரிய அதிர்ச்சி அடைகிறார். அப்பாவை காப்பாற்ற போராடும் அவருக்கு வழக்கறிஞர்கள் கூட கிடைக்கவில்லை. திக்குவாய் வழக்கறிஞரான இந்திரன்ஸ் (அப்படித்தான் காளி வெங்கட்டை படம் முழுக்க அழைக்கின்றனர்) அந்த வழக்கை எடுத்து நடத்த கிளைமேக்ஸில் என்ன நடக்கிறது. யார் உண்மையான குற்றவாளி என்பதை பதைபதைப்பான கடைசி நொடி வரை சீட்டின் நுனியில் உட்கார வைத்து ரிவீல் செய்வது தான் படத்தின் கதை.

  சாய் பல்லவி அபாரம்

  சாய் பல்லவி அபாரம்

  பள்ளி ஆசிரியை கார்கி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி. ஒட்டுமொத்த உலகமே கை விட்ட நிலையிலும், தனி ஒருத்தியாக தனது அப்பாவுக்காக கடைசி வரை போராடும் காட்சிகள் அபாரம். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவிக்கு இந்த படம் ஏகப்பட்ட விருதுகளை பெற்றுத் தரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. கடைசி கிளைமேக்ஸில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அமர்ந்து பேசும் காட்சியில் எல்லாம் சாய் பல்லவியைத் தவிர வேறு யாரும் அப்படி நடிக்க முடியாது என சொல்கிற அளவுக்கு நடித்துத் தள்ளி இருக்கிறார்.

  காளி வெங்கட் கலக்கல்

  காளி வெங்கட் கலக்கல்

  ஜெய்பீம் படத்தில் சூர்யாவை போல ஒரு பெரிய நடிகர் நடித்தாலே எப்படியும் அந்த கேஸை ஜெயித்து விடுவார் என நம்பிக்கை இருக்கும். அதே போல, ஜன கண மண படத்தில் பிருத்விராஜ் எதிர் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான நிலையிலேயே அந்த போலீஸ் சுராஜ் வெஞ்சரமூடு மீது சந்தேகம் வந்து விடுகிறது. ஆனால், இந்த படத்தில் இந்திரன்ஸ் என்கிற பெயரில் திக்கு வாய் வழக்கறிஞராக நடித்து ஒட்டுமொத்த கோர்ட் ரூமை மட்டுமல்ல தியேட்டரையே தெறிக்க விடுகிறார் தனது நடிப்பால் காளி வெங்கட்.

  யார் குற்றவாளி

  யார் குற்றவாளி

  செக்யூரிட்டியாக வேலை செய்யும் ஆர்.எஸ். சிவாஜியை சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யும் நிலையில், யார் குற்றவாளி என்பதை தேடி கண்டுபிடிக்க மகள் சாய் பல்லவி பெரும் போராட்டமே நிகழ்த்துவார். இன்னொரு செக்யூரிட்டியாக நடித்துள்ள லிவிங்ஸ்டன் குற்றவாளியா? மனைவியை இழந்து மகளை வளர்த்து வரும் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பா குற்றவாளியா? என விசாரணை, வழக்கு, சாட்சியங்கள், ஆதாரங்கள் என கடைசி வரை யார் அந்த 5வது நபர் என பார்ப்பவர்களை தலையை பிய்க்க வைத்து ஸ்கோர் செய்கிறார் இயக்குநர்.

  பலம்

  பலம்

  சாய் பல்லவி, காளி வெங்கட் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றாலும், 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை தான் படத்திற்கு நாயகன் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் திகிலூட்டி நகர்த்தும் அவரது பின்னணி இசை மண்டைக்குள் குடைந்து கொண்டே இருக்கிறது. கிளைமேக்ஸில் ஹார்ட் பீட் நின்றால் ஒலிக்கும் சத்தத்தை கோவிந்த் வசந்தா பயன்படுத்தி இருந்த விதம் எல்லாம் இசையின் உச்சம். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது இன்னொரு பெரிய பலமாக மாறி உள்ளது. திருநங்கை சுதா மம்மியை நீதிபதியாக அமர்த்தி அவர் பேசும் சில நறுக்கான வசனங்கள் படத்தின் அந்த எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் என பல பிளஸ்கள் இந்த கார்கி படத்தில் உள்ளது.

  பலவீனம்

  பலவீனம்

  சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்துக்கு படமாக மைனஸ் என்று பெரிதாக எதையுமே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கதையின் ஆழம் மற்றும் அழுத்தம், சமூக சீர்கேடு, ஆண்களின் சபல புத்தி என பல விஷயங்களை முகத்தில் அறைந்தது போல சொல்லி உள்ளார் இயக்குநர். கமர்ஷியல் ரீதியாக இந்த படம் தியேட்டரில் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும்? என்பது மட்டும் தான் மிகப்பெரிய கேள்வியாகவும் பலவீனமாகவும் உள்ளது. மேலும், பார்த்திபனின் இரவின் நிழல் படம் ஆண் பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை கூறியுள்ள நிலையில், இந்த படம் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை கூறியுள்ளது. சமீபத்தில் வந்த ஒரு வெப்சீரிஸ் கதையும் கார்கி போலவே உள்ளதும் மைனஸ் ஆக மாற வாய்ப்புள்ளதுஓடிடியில் வந்திருந்தால் ஓஹோன்னு கொண்டாடி இருப்பார்கள். கார்கி - சூழ்நிலை கைதி!

  English summary
  Gargi Movie Review in Tamil (கார்கி விமர்சனம்): Director Gautham delivered a heart wrenching court room drama in title of Gargi. Sai Pallavi, Kaali Venkat, RS Shivaji done a beautiful performance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X