Garudan Review: சூரியின் சூறாவளி ஆட்டம்.. செம கதை.. கருடன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: பரோட்டா சூரியாக இருந்த காமெடி நடிகர் சூரி தற்போது கருடன் சூரியாக ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை தனுசை வைத்து கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் சூரியை வைத்து பரபரப்பாக இயக்கியுள்ள கருடன் திரைப்படம் இன்று வெளியானது.
கருடன் படத்தின் பிரஸ் ஷோ நேற்று போடப்பட்ட நிலையில் அதைப் பார்த்துவிட்டு ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூரி விடுதலை 2, கொட்டுக்காளி படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அந்த இரண்டு படங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கருடன் திரைப்படம் முந்திக் கொண்டு மே 31-ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. சூரியின் கருடன் படத்திற்கு ட்விட்டரில் குவிந்துள்ள விமர்சனங்களை தற்போது காணலாம்.
சிவகார்த்திகேயன் வாழ்த்து: "உங்கள் எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் கருடன் மிகப்பெரிய வெற்றி அடையட்டும் சூரி அண்ணன்" என நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு, ஈகோ, துரோகம்: பக்காவான கிராமத்து கதையை இயக்குநர் துரை செந்தில்குமார் சூரியை வைத்து இயக்கியுள்ளார். நட்பு, ஈகோ, துரோகம், பழிவாங்கல், கொஞ்சம் காதல் என அனைத்துமே சரியான அளவில் இருக்கும் படமாக கருடன் படம் உள்ளது. விடுதலை படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சூரி நடிகனாக ஜொலிக்கிறார் என ஸ்ரீதேவி ஸ்ரீதர் 3.5 ரேட்டிங் கொடுத்து இந்த படத்துக்கு தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

சூரியின் நடிப்பு சூப்பர்: பக்காவான கமர்ஷியல் ஃபார்முலா படத்திலும் ஹீரோவாக சூரி தூள் கிளப்பியுள்ளார். படத்தில் பெரிதாக எங்கேயும் குறையே இல்லை. சசிகுமார், உன்னி முகுந்தன் என பெரிய நடிகர்களுக்கு மத்தியிலும் சூரி தனது சூறாவளி நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார் என கோபிநாத் ராஜேந்திரன் விமர்சித்துள்ளார்.

கருடனுக்கு பெரிய பலம்: பெரிய படமோ, சிறிய படமோ அதெல்லாம் பார்க்காமல் பக்காவான இசையை யுவன் சங்கர் ராஜா கொடுத்து வருவது ஆச்சர்யத்தை அளிக்கிறது. தேவையான இடங்களில் இசைக்கு பதிலாக நிசப்தத்தை பயன்படுத்தி யுவன் கருடன் படத்தில் செய்துள்ள மேஜிக் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என ராஜசேகர் பதிவிட்டுள்ளார்.

4 ரேட்டிங் கொடுக்கலாம்: 5க்கு 4 ரேட்டிங் கொடுத்து வி2 சினிமாஸ் சூரியின் கருடன் படத்தை கொண்டாடியிருக்கிறது. விடுதலை படத்தை மிஞ்சும் அளவுக்கு சூரி இந்த படத்தில் தூள் கிளப்பி உள்ளார் என்றும் நிச்சயம் படம் பந்தயம் அடிக்கும் என்றும் பதிவிட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் ஷிவதா நடித்துள்ள அந்த காட்சி எல்லாம் வேறலெவலில் உள்ளது. அந்த சீனுக்கு யுவன் அமைத்துள்ள பிஜிஎம் வேறலெவல் என பாராட்டியுள்ளனர்.

சூரி அண்ணா சம்பவம்: கருடன் திரைப்படம் சூப்பரான ரூரல் ஆக்ஷன் டிராமா படமாக வெளியாகி இருக்கிறது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனுக்கு சிறப்பான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இடைவேளை, ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸில் சூரி அண்ணா சம்பவம் செய்துள்ளார் என கார்த்திக் ரவிவர்மா படத்துக்கு பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் ஆன்லைன் டிராக்கர்கள் படத்தை பாராட்டி வரும் நிலையில், பொது மக்கள் எந்தளவுக்கு சூரி படத்தை தியேட்டரில் பார்த்து ஹிட் ஆக்குகின்றனர் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.



Click it and Unblock the Notifications











