தியேட்டரில் ஜெயித்ததா கட்டா குஸ்தி 2.. லாஜிக் இல்லைனாலும் மேஜிக் இருக்கு.. செய்யாறு பாலு விமர்சனம்!
சென்னை: 2022 ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'கட்டா குஸ்தி 2' படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது. செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து செய்யாறு பாலுவின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கோயம்புத்தூரை அடுத்த ஒரு சிறிய கிராமத்தில் படிக்காத விஷ்ணு விஷால், கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமியை திருமணம் செய்து கொள்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி தான் ஒரு குஸ்தி வீராங்கணை என்பதை மறைத்து கணவரின் பேச்சை பேட்டு வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலுக்கு மனைவி குஸ்தி வீராங்கணை என்பது தெரிந்து விடுகிறது. இந்த விஷயம் தெரிய ஆரம்பித்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கட்டா குஸ்தி முதல் பாகத்தின் கதை.

படத்தின் கதை: கட்டா குஸ்தி இரண்டாவது பாகத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தி வீராங்கணையாக பல போட்டிகளில் கலந்து கொள்கிறார். அவரை அடிக்க ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல போட்டிகளில் அவர் வெற்றி பெறுகிறார். தன்னுடைய மனைவிக்காக தன்னை மாற்றிக்கொண்டு மனைவிக்கு என்ன பிடிக்கும் என்பதையும், குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து ஹவுஸ் ஹஸ்பண்டாக வீட்டில் இருந்து கவனித்துக்கொள்கிறார் விஷ்ணு விஷால்.
காமெடி கதை: உள்ளூர் போட்டிகளிலே விளையாடி பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஐஸ்வர்யா லட்சுமிக்கு நேஷனல் லெவல் போட்டியில் கலந்து கொள்ளு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நேரத்தில் தான் கோச் ஒருவருடன் ஈகோ கிளாஸ் வர, அந்த கோச் விஷ்ணு விஷாலை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காலி செய்ய நினைக்கிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா லட்சுமி போட்டியில் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பது தான் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் கதை.
குடும்பத்தோடு பார்க்கலாம்: படம் ஆரம்பிக்கும் போது ஒரு மாதிரி மெதுவாக செல்கிறது லாஜிக் இல்லையே என்று பல இடங்களில் யோசித்தாலும் இரண்டாவது பகுதியில் பிரமாதமாக எடுத்துச் சென்று விட்டார் இயக்குநர். குறிப்பாக விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்பட்டு விடுகிறது. பின் அவர்கள் இருவம் எப்படி சேர்ந்தார்கள் என்பதை இயல்பாக எதார்த்தமாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர். குட்டி பெண்ணாக நடித்திருக்கும் சாரா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதே போல, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு இருவரும் கொஞ்ச நேரம் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படத்தினுடைய மைனஸ் என்னவென்றால் முதல் பகுதியில் பல இடங்களில் லாஜிக் என்பதே இல்லை, பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கிறது. ஆனால், படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் படத்தை குடும்பத்தோடு சென்று தியேட்டரில் பார்க்கலாம் என்ன செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications