twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Gatta Kusthi Review: ஸ்போர்ட்ஸ் வீராங்கனைகளின் நிஜ வலி.. கட்டா குஸ்தி விமர்சனம் இதோ!

    |

    நடிகர்கள்: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

    இசை: ஜஸ்டின் பிரபாகரன்

    இயக்கம்: செல்லா அய்யாவு

    Rating:
    3.5/5

    சென்னை: ஸ்போர்ட்ஸ் விளையாடும் பெண்கள் எதிராளியை ஜெயிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தையும் புருஷனையும் ஜெயிக்க வேண்டி இருக்கு என்கிற வலிமையான கருத்தை காமெடி கலந்து இயக்குநர் செல்லா அய்யாவு கமர்ஷியல் மசாலா தூவி கொடுத்துள்ள படம் தான் கட்டா குஸ்தி.

    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி என இருவருமே நடிப்பில் மாற்றி மாற்றி ஸ்கோர் செய்கின்றனர்.

    அதிலும் கணவனும் மனைவியும் மைதானத்தில் சண்டை போடுவது போல அமைக்கப்பட்ட காட்சி வேறலெவல் க்ரியேட்டிவிட்டி என்றே சொல்லலாம். வாங்க.. கட்டா குஸ்தி விமர்சனத்துக்குள் செல்வோம்..

    நெட்பிளிக்ஸில் வெளியான லவ் டுடே… நள்ளிரவு முதல் கொண்டாடித் தீர்க்கும் ஓடிடி ரசிகர்கள்!நெட்பிளிக்ஸில் வெளியான லவ் டுடே… நள்ளிரவு முதல் கொண்டாடித் தீர்க்கும் ஓடிடி ரசிகர்கள்!

    கட்டா குஸ்தி கதை

    கட்டா குஸ்தி கதை

    தமிழ்நாட்டை சேர்ந்த கபடி வீரர் விஷ்ணு விஷாலுக்கும் கேரளாவின் கட்டா குஸ்தி வீராங்கனை ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கும் இரு வீட்டாரும் சில பொய்களை சொல்லி திருமணம் செய்து வைக்கின்றனர். ஸ்போர்ட்ஸில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி குடும்பத்தையும் கணவனையும் தாண்டி தனது லட்சியத்தை அடைந்தாரா? மனைவியின் மனதை விஷ்ணு விஷால் புரிந்து கொண்டாரா? என்பது தான் கட்டா குஸ்தி படத்தின் கதை.

    கூந்தல் நீளமா இருக்கணும்

    கூந்தல் நீளமா இருக்கணும்

    இடுப்புக்கு கீழ் வரை கூந்தல் நீளமாக இருக்குற பொண்ணு வேண்டும் என்கிற பெரிய லட்சியத்துடன் இருக்கும் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். 8வது வகுப்பை தாண்டாத நிலையில், தன்னுடைய பொண்டாட்டி படிச்சி இருக்கக் கூடாது என்றும் 6வது வரை படித்து இருந்தாலும் ஓகே என்று நினைக்கும் அளவுக்கு ஆணாதிக்க மனோபாவம் கொண்டவராகவே விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்துக்கு நேர்மை சேர்த்துள்ளார்.

    ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

    ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

    பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக கவர்ச்சி பொங்க கடலில் இருந்து படகில் ஏறி வரும் ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் ஆரம்பத்தில் கிராப் கட் செய்து விட்டு கட்டா குஸ்தி பிளேயராக ஆளே மாறி நடித்திருக்கிறார். சவுரி முடி வைத்துக் கொண்டு தான் ஒரு படிக்காத பெண் என குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டை ஏமாற்றி திருமணம் செய்து வைக்க ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலுக்கு உண்மை தெரிந்து விடுகிறது.

    கணவனுக்காக சண்டை

    கணவனுக்காக சண்டை

    அப்பாவிப் பெண்ணாக விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொள்ளும் ஐஸ்வர்யா லட்சுமி ஒரு கட்டத்தில் வில்லன் ஆட்கள் சிலர் விஷ்ணு விஷாலை கொல்ல வர, மார்க்கெட் ஏரியாவில் கணவருக்காக சண்டை போடும் காட்சிகள் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. காமெடி காட்சிகளும் படம் நெடுகிலும் கச்சிதமாக பொருந்த கருத்து பிளஸ் காமெடி படமாக உருவாகி இருக்கிறது கட்டா குஸ்தி. விவேக் காமெடியில் காஜல் பசுபதி சொர்ணா அக்காவாக மாறும் காட்சி கண் முன்னே வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

    குடும்பத்தை ஜெயிக்கணும்

    குடும்பத்தை ஜெயிக்கணும்

    ஃபாரின்ல ஒரு பொண்ணு ஸ்போர்ட்ஸ்ல ஜெயிக்கணும்னா எதிரணி வீரரை ஜெயித்தால் போதும். ஆனால், நம்ம நாட்டில் குடும்பத்தையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனையும் ஜெயித்து அவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பற்றி புரிய வைத்து பெண்கள் சாதித்து வருவது எல்லாமே பெரிய சவால் என ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஒரு கட்டத்தில் பேசும் காட்சி பாராட்டுக்களை அள்ளுகிறது.

    பொண்டாட்டியோட குஸ்தி

    பொண்டாட்டியோட குஸ்தி

    விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸ் இந்த படத்தில் மனைவியை அடக்கி ஆளும் ஆணாதிக்கவாதியாகவே நடித்துள்ளார். அவர் கொடுக்கும் குருட்டுத் தனமான யோசனைகளை கேட்டு, கபடி பிளேயரான விஷ்ணு விஷால் மனைவியை ஜெயிக்க வேண்டும் என நினைத்து கட்டா குஸ்தி கற்றுக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளை. கடைசியில் மனைவியை புரிந்து கொண்டு கணவன் மாறுகிறானா? இல்லையா? என்பது தான் கதை.

    பலம்

    பலம்

    இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்டாகவும் கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு சிக்கல்களையும் அழகாக கையாண்டுள்ளது படத்திற்கு பெரிய பலமாக மாறி உள்ளது. ரெட்டின் கிங்ஸ்லி டாக்டர் படத்திற்கு பிறகு ரசிகர்களை இந்த படத்தில் சிரிக்க வைக்கிறார். கருணாஸ் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.

    பலவீனம்

    பலவீனம்

    இந்த மாதிரி கதை இதுக்கு முன்னாடி வந்திருக்கு.. ஆனால், இது தான் ஃபர்ஸ்ட் டைம் என்று சொல்கிற அளவுக்கு கதை தொடங்கும் போதே எப்படி முடியும் என்பதை புரிய வைத்து விடுவது மிகப்பெரிய மைனஸாக மாறி உள்ளது. மேலும், சில இடங்களில் ஓவராக கமர்ஷியல் நெடியை தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு தூவி விட்டார்களோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. பாடல்கள் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகி உள்ள கட்டா குஸ்தி படத்தை குடும்பத்துடன் ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

    English summary
    Gatta Kusthi Movie Review in Tamil (கட்டா குஸ்தி விமர்சனம்): Vishnu Vishal and Aishwarya Lekshmi power house performance makes fans a laugh ride to the end. Definitely a Family watchable entertainer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X