Joshua Imai Pol Kaakha: ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்.. எங்களை யாரு காப்பாத்துவாருன்னு தெரியலையே?

Rating:
2.0/5

நடிகர்கள்: வருண், ராஹேய், கிருஷ்ணா

இசை: கார்த்திக்

இயக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன்

நேரம்: 2 மணி நேரம் 10 நிமிடங்கள்

சென்னை: நீங்க மறுபடியும் பாம்பேக்கே போயிடுங்க என கெளதம் மேனனை நடிக்கவே போயிடுங்க என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர். கெளதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் மனைவி ராஹேய் நடிப்பில் உருவாகி உள்ள ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படம் இன்று வெளியானது.

இந்த படத்தில் வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலி கான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்ஸ் மற்றும் ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் எதெல்லாம் நல்லா இருக்கு எதெல்லாம் மிஸ்ஸிங் என்கிற விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Gautham Menons Joshua Imai Pol Kaakha Review in Tamil

ஜோஷ்வா கதை: ஜோஷ்வா இமை போல் காக்க படம் ரிலீஸ் ஆனதே பெரிய கதை தான். பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் ஒரு வழியாக இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்திருக்கிறது. இன்னமும் கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்துக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை. ஒரு காலத்தில் மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை இயக்கிய கெளதம் மேனன் அதன் பின்னர் இயக்கிய படங்கள் எல்லாம் சுமார் மூஞ்சி குமாராக மாறி விட்ட நிலையில், ஜோஷ்வா ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வந்திருக்கிறது. ஜோஷ்வாவின் காதலை ஏற்க மறுக்கும் குந்தவையை ஒரு சூழலில் கூலிப்படைகளிடம் இருந்து காப்பாற்றும் பாடிகார்டு பொறுப்பு ஜோஷ்வாவுக்கு வருகிறது. தனது முன்னாள் காதலியை இமை போல காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

பர்ஃபார்மன்ஸ் எப்படி?: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருண் வருவதற்கு முன்பாக பப்பி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் டெக்கியாக வந்து செல்வார். வெந்து தணிந்தது காடு படத்தை சிம்பு வைத்து தயாரிக்க முன் வந்த ஐசரி கணேஷ் கோரிக்கையை ஏற்று அவரது உறவினரான வருணை வைத்து கெளதம் மேனன் இந்த படத்தை இயக்கினார். கெளதம் மேனன் இயக்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் போல உடைகளை அணிந்துக் கொண்டு வருண் கொடுத்த போஸ்களே மிரட்டலாக இருந்தன. படத்திலும், முடிந்த வரை தன்னுடைய நடிப்பை அவர் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இன்னும் முன்னேற்றம் தேவை என்று தான் தெரிகிறது. ராஹேய் கொஞ்சம் திரிஷா ஜாடையில் இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்ததா தெரியவில்லை. படத்திலும் அவருக்கு குந்தவை என பெயர் வைத்திருக்கிறார் கெளதம் மேனன். ஆனால், இருவரது பர்ஃபார்மன்ஸும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

Gautham Menons Joshua Imai Pol Kaakha Review in Tamil

பிளஸ்: வருண் தானே என சொதப்பலாக இசையமைக்காமல் ஒரு மாஸ் ஹீரோவுக்கான பிஜிஎம் எல்லாம் போட்டு தனது இசை திறமையை பாடகர் கார்த்தி இந்த படத்தில் நல்லாவே வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு பெரிய பலம் என்றால் இசை மற்றும் பாடல்கள் தான். மேலும், ஆக்‌ஷன் பிரியர்களை திருப்திப்படுத்தும் விதமாக 12 சண்டைக் காட்சிகளும் உள்ளன.

மைனஸ்: ஆனால், அதே நேரம் கெளதம் மேனன் படங்கள் என்றாலே ரசிகர்கள் எதிர்பார்த்து செல்லும் லவ் போர்ஷனுக்கு இங்கே ஸ்பேஸ் இருந்தும் அது சரியாக கனெக்ட் ஆகவில்லை. மேலும், சண்டை, சண்டை மேல் சண்டை என வருண் போட்டுக் கொண்டே இருக்க அவரை ஒரு நடிகராக வெளிக்காட்ட முடியாமல் போனது படத்திற்கு பெரிய பலவீனமாக மாறியுள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு படங்கள் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், தனது ஸ்ட்ராங் ஜோனை சமீப காலமாக மிஸ் செய்து வருகிறார் கெளதம் மேனன். சீக்கிரமே தரமான யங்ஸ்டர்களை தனது ஸ்டைலில் கவரக்கூடிய படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஜோஷ்வா இமை போல் காக்க வருணுக்கு ஒரு நல்ல படம் தான். ஆனால், கெளதம் மேனனுக்கு பெரிய படமாக அமையவில்லை என்பது தான் உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X