கில்லிக்குத்தான் கூட்டம்.. மெயின் ஸ்க்ரீன்ல துணிவு போடல.. அஜித் ரசிகர்கள் புலம்பித்தள்ளிட்டாங்களே!
சென்னை: இந்த வாரம் புதிய படங்கள் மற்றும் ரீ ரிலீஸ் என மொத்தம் 10 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன. அவற்றுள் பெரிய போட்டி என்று பார்த்தால் அஜித் குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் கில்லி ரீ ரிலீஸுக்குத்தான் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
அஜித் குமாரின் துணிவு திரைப்படம் வெளியாகி சில ஆண்டுகளே ஆன நிலையில், அந்த படத்தையும் ரீ ரிலீஸ் செய்து கல்லா கட்டிவிடலாம் என நினைத்தனர். ஆனால், பெரிதாக படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.

சமீபத்தில் தான் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் வசூல் கில்லி ரீ ரிலீஸை முந்த வேண்டும் என ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று அந்த படத்தை பார்த்து கையில் இருந்த காசை எல்லாம் காலி செய்தனர். இந்நிலையில், தொடர்ந்து தியேட்டர் ஓனர்கள் ரசிகர்களின் பாக்கெட்டில் இருந்து இப்படி மீண்டும் மீண்டும் ரீ ரிலீஸ் படங்களை போட்டு உருவிக் கொண்டிருக்கின்றனர் என்கிற கண்டனங்களும் விமர்சகர்களிடம் இருந்து கிளம்ப ஆரம்பித்துள்ளன.
கில்லிக்குத்தான் கூட்டமே: விஜய்யின் கில்லி திரைப்படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உலகளவில் அதிக வசூலை ஈட்டியது. இந்நிலையில், இந்த வாரம் மீண்டும் அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். மேலும், ரோகிணி தியேட்டரில் விஜய்யின் கில்லி படத்துக்குத் தான் மெயின் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டது என்றும் அதற்குத்தான் கூட்டம் வந்தது என்றும் அஜித் ரசிகர் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பப்ளிக் ரிவ்யூவில் புலம்பியுள்ளார்.
துணிவுக்கு மெயின் ஸ்க்ரீன் தரல: அஜித் குமாரின் துணிவு திரைப்படத்துக்கு மெயின் ஸ்க்ரீன் தரவில்லை என்றும் கில்லி பெரிய படம் அதன் உடன் போட்டி போடும் அளவுக்கு துணிவு படம் கிடையாது. அதனை ரிலீஸ் செய்திருக்கக் கூடாது. வேதாளம் போன்ற படங்களை ரிலீஸ் செய்திருக்க வேண்டும் என இன்னொரு அஜித் ரசிகர் கூறியுள்ளார்.
பெருசா செலிபிரேஷன் இல்லை: கில்லி படத்துக்கு முன்பிருந்த அளவுக்கு இப்போ வைப் பண்ண முடியல. பாடல்களை ரிப்பீட் போடல. மீண்டும் விஜய் ரசிகர்களுடன் ஜாலியாக தியேட்டரில் படம் பார்த்த அனுபம் மட்டுமே கிடைத்தது என விஜய் ரசிகர் ஒருவரும் கூறியுள்ளார். புதிய படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வரையில் இந்த ரீ ரிலீஸ் கலாச்சாரம் அடுத்த சில மாதங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











