Gladiator 2 Review: கிளேடியேட்டர் 2 விமர்சனம்.. பிரம்மாண்டம்னா இதுதான்.. தாராளமா பார்க்கலாம்!

Rating:
3.5/5

நடிகர்கள்: பால் மெஸல், டென்சல் வாசிங்டன்

இசை: ஹாரி கிரெக்சன் - வில்லியம்ஸ்

இயக்கம்: ரிட்லி ஸ்காட்

சென்னை: ரசல் க்ரோ நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த கிளேடியேட்டர் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது என்றதுமே ஹாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கு தீனிப்போடும் அளவுக்கு கதையும் காட்சியமைப்புகளையும் கொண்டு இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட்டே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்தியன் 2 படத்தை போல இத்தனை ஆண்டுகள் கழித்து படம் வருகிறதே முதல் பாகத்தின் பெயரை கெடுத்து விடுமோ என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

gladiator 2  review  hollywood                                          2

ஆனால், விஜய்க்கு பிடித்த டென்சல் வாசிங்டனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படத்தின் திரைக்கதை மற்றும் பிரம்மாண்ட மேக்கிங்கால் மீண்டும் இந்த வயதிலும் தான் ஒரு கில்லி தான் என்பதை ரிட்லி ஸ்காட் நிரூபித்துள்ளார். கங்குவா படத்தை பார்த்த பின்னர் பிரம்மாண்ட படங்களை பார்க்கவே மாட்டோம் என கடுப்பாகியுள்ள ரசிகர்களை நிச்சயம் இந்த ஹாலிவுட் படம் இந்த வாரம் தியேட்டர்களில் பிரம்மிக்க வைக்கும்.

கிளாடியேட்டர் 2 கதை: கிளேடியேட்டர் முதல் பாகத்தில் மார்கஸ் அடிமைப்படுத்தப்பட்டு கிளேடியேட்டராக மாற்றப்படுவார். அதன் பின்னர் தன்னையும் ரோமானிய மக்களையும் சித்ரவதை செய்யும் சீசரின் மகன் கொமடஸை வீழ்த்தி மக்களை காப்பாற்ற தனது உயிரையும் கொடுக்கும் கதை தான் கிளேடியேட்டர். அந்த பாகத்தில் மாக்ஸிமஸாக நடித்த ரசல் க்ரோவுக்கு உதவி செய்யும் அரச வம்சத்து பெண்ணான லூசில்லாவுக்கும் காதல் ஏற்பட அவர்களுக்கு பிறக்கும் மகன் தான் லூசியஸ் (பால் மெஸல்) அவர் தான் இந்த படத்தின் கதையின் நாயகன். இந்த பாகத்தில் மீண்டும் ரோம் நாட்டு மக்கள் ஆளவே தெரியாத 2 கொடூர குணங்கள் கொண்ட சிறுவர்களின் கையில் சிக்கித் தவிக்க, டென்சல் வாஷிங்டனின் தந்திரமும் கிளேடியேட்டராக உள்ள லூசியஸ்க்கு தான் யார் என்பது தெரிய வர தனது மக்களை காப்பாற்ற போராடும் போராட்டம் தான் இந்த பாகத்தின் கதை.

படம் பட்டாசா இருக்கு: கதை ரீதியாக. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் பெரியளவில் புதுமை இல்லை என்றாலும், லேட்டஸ்ட் வெர்ஷன் டெக்னாலஜியுடன் திரைகளை தீப்பிடிக்க வைக்கிறது கிளாடியேட்டர் 2. டென்சல் வாசிங்டனின் கதாபாத்திர அமைப்பு இந்த பாகத்துக்கு நல்லாவே கை கொடுத்திருக்கிறது. அவரும் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்டுகிறார். ஹீரோவான பால் மெஸல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அரேனாவில் நடைபெறும் கிளேடியேட்டர் சண்டைக் காட்சிகளில் ரத்தமும் சதையுமாக நடித்து மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.

gladiator 2  review  hollywood                                          2

பிளஸ்: படத்தின் மேக்கிங் மற்றும் நடிகர்களின் தேர்வு, புரொடக்‌ஷன் வேல்யூ என ஏகப்பட்ட பிளஸ்கள் உள்ளன. சிஜிக்காட்சிகளும், பிரம்மாண்ட செட்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்கு தேவையான தீனியை கொடுக்கின்றன. 1700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், திரையில் ஒவ்வொரு ஃபிரேமிலும் அதற்கான செலவு வெளிப்படையாக தெரிகிறது. சமீப காலமாக வரும் மார்வெல் மற்றும் டிசி படங்கள், கடைசியாக வெளியான ஜோக்கர் 2 உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், கிளேடியேட்டர் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைனஸ்: முதல் பாகத்தில் ரசல் க்ரோ நடிப்பில் வெளியான கிளேடியேட்டர் படத்தில் இருந்தளவுக்கு இந்த படத்தில் எமோஷனல் கனெக்ட் ரொம்பவே மிஸ் ஆகிறது. மேலும், சில இடங்களில் சில தொய்வான காட்சிகளும் இடம்பெற்று சோதிக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக படமாக பார்க்கும் போது சிறு குறைகள் பெரிதாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X