GOAT X Review: வேறலெவல் வெறித்தனம்.. பக்கா பேக்கேஜ்.. ’கோட்’ ஃபர்ஸ்ட் ஹாஃப் ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா, ஆந்திரா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு முன்பே கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
இங்கே உள்ள ரசிகர்களும் ஆந்திரா, கேரளா என பக்கத்து மாநிலங்களுக்கே சென்று கோட் படத்தின் 4 மணி சிறப்பு காட்சியை பார்த்து விட்டு அதற்குள் படத்தின் முதல் பாதி விமர்சனத்தையே சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், சர்ப்ரைஸ் கேமியோக்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் படத்துக்கு சோஷியல் மீடியாவில் குவிந்து வரும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
விஜய் தான் கோட்: படத்தின் ஓபனிங் காட்சியிலேயே பட்டாசு கிளப்பி விட்டார் வெங்கட் பிரபு என்றும் ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸ், விசில் போடு பாடலில் தளபதியின் நடனம், தளபதி விஜய்யின் காமெடி காட்சிகள், ஃபேமிலி பாண்டிங், அனலை கிளப்பும் இடைவேளை காட்சி என முதல் பாதி வெறித்தனமாக உள்ளதாக இந்த நெட்டிசன் பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

தளபதி vs இளைய தளபதி: முதல் பாதி படம் போனதே தெரியல 3 மணி நேரம் படமாக இருந்தாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது. தளபதி மற்றும் இளைய தளபதி இடையேயான மோதல் காட்சிகள் தான் படத்தில் பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. 2ம் பாதியில் என்ன ஆகப் போகிறது என்பதை காண ஆர்வத்துடன் காத்திருப்பதாக இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

வெறித்தனமான இன்ட்ரோ: கோட் படத்தின் வெறித்தனமான இன்ட்ரோ காட்சிக்காகவே படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம். தளபதி விஜய்யின் ஸ்குவாட் கெமிஸ்ட்ரி மற்றும் அவரோட ஃபன் சைடு முதல் பாதியை ரசிக்கும்படி நகர்த்தி சென்றுள்ளது என்று இந்த ரசிகர் தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

யோவ் விபி என்னையா பண்ணி வச்சிருக்க: கோட் படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் யோவ் விபி என்னையா பண்ணி வச்சிருக்க, ஃபர்ஸ்ட் ஹாஃப் போனதே தெரியல என தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். முதல் பாதியை போல 2வது பாதியும் அமைந்து விட்டால் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் எனக் கூறுகின்றனர்.

க்ரிஞ்சு காமெடிகள்: "#TheGreatestOfAllTime 1st Half. காமெடியென க்ரிஞ்சுகளை அள்ளி தள்ளி ஆரம்பித்த படத்தில் விஜய் இளையதளபதியாக வந்த பின் கதை வேகமெடுக்கும் என பார்த்தாலும் தளபதி vs இளைய தளபதி என மங்காத்தா ஸ்டைலில் கண்ணாடி உடைய இடைவேளை. யுவன் இசை ஆங்காங்கே நல்ல சூப்பர். என கலவையான விமர்சனத்தை இந்த நெட்டிசன் கொடுத்துள்ளார்.



Click it and Unblock the Notifications











