twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கம்னா வேட்டையாடணும், மான்னா ஓடி ஓளியணும்...விரட்டல் மிரட்டல் கதைதான் காட்ஃபாதர்

    By
    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: நட்டி, அனன்யா, லால்,
    இயக்கம்: ஜெகன் ராஜசேகர்

    சென்னை: கொடூர தாதாவிடம் இருந்து, தனது பத்து வயது மகனை, அமைதியான நட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்கிற சிங்கம்- மான் கதைதான், காட்ஃபாதர்.

    தான் உண்டு, தன் வேலையுண்டு என்று மனைவி அனன்யா, மகன் அஸ்வத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் நட்டி. சின்ன பிரச்னை என்றாலும் கூட ஒதுங்கி செல்பவர். பிரபல தாதாவான லால், கொடூர பார்ட்டி. தனது ஒரே மகனுக்கு இதயத்தில் பிரச்னை

    எப்படி காப்பாற்றுகிறார்

    எப்படி காப்பாற்றுகிறார்

    அவனைக் காப்பாற்ற அவரின் பிளட் குரூப் உள்ள சிறுவனின் இதயம் வேண்டும். தேடி அலைகிறார் லால். நட்டியின் மகன் அஸ்வத்தை கண்டுபிடிக்கிறார். தனது வில்லத் தனத்தோடு நட்டி வீட்டுக்குள் நுழைகிறார் லால். அவரிடம் இருந்து தனது மகனை நட்டி, எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் காட்ஃபாதர்.

     நீ சிங்கம், நான் மான்

    நீ சிங்கம், நான் மான்

    கொடூரமான வில்லன் என்றால் லாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதில் மருதுசிங்கம் என்ற கேரக்டரில் கச்சிதமாக மிரட்டி இருக்கிறார். தொடக்கத்திலேயே ஆட்களைப் போட்டுத்தள்ளி டெர்ரர் என்ட்ரி கொடுக்கிறார். சிங்கம்னா வேட்டையாடணும், மான்னா ஓடி ஓளியணும். நீ சிங்கம், நான் மான்... யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம்' என்று நட்டியிடம் விடும் சவாலில் தெறிக்கிறது, வில்லத்தனம்.

    ஸ்கோர் பண்ணுகிறார்

    ஸ்கோர் பண்ணுகிறார்

    நடிப்பில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றிருக்கிறார் ஹீரோ நட்டி. ஹீரோயிசம் காட்ட அதிக வாய்ப்பிருந்தும் அமைதியாகவே செல்லும் கேரக்டர் அவருக்கு. பிரச்னைகளை கண்டு ஒதுங்குவது, மனைவி, மகன் மீதான பாசம், அவனைக் காப்பற்றத் துடிக்கும் தவிப்பு என ஸ்கோர் பண்ணுகிறார், நடிப்பில்.

    விறுவிறுப்பு

    விறுவிறுப்பு

    தங்களை துரத்தும் ஆபத்தை முகத்தில் வெளிப்படுத்தும் அனன்யா, பயத்தில் கதறியபடி இருக்கும் அஸ்வத், கெட்டப் போலீசாக வரும் மாரிமுத்து என அவரவர் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். வழக்கமான ஹீரோ, வில்லன் துரத்தல் கதைதான் என்றாலும் திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெகன் ராஜசேகர். அதற்கு சண்முகச் சுந்தரத்தின் ஒளிப்பதிவும் நவீன் ரவீந்திரன் இசையும் அதிகமாக உதவி இருக்கிறது.

    சினிமா இலக்கணம்

    சினிமா இலக்கணம்

    வில்லத்தனத்தை காட்ட வேண்டும் என்றால் என்ட்ரியில் ஒரு கொலையையோ, ஃபைட்டையோ காட்ட வேண்டும் என்கிற சினிமா இலக்கணத்தை யார் வந்து மாற்றப் போகிறார்களோ? ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் பிரபல தாதா லால், தனது ஆட்களுடன் அடிக்கடி வருவதும் மிரட்டுவதும் அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். போலீஸ்லாம் சும்மாவா இருப்பாங்க? என்ற வழக்கமான கேள்விகளை இதிலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் இந்த காட்ஃபாதர் ரசிக்கலாம்.

    English summary
    A hapless father tries to save his son from a gangster who is after the boy to save his own child.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X