Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!

நடிகர்கள்: கெய்லி ஹாட்டல், மில்லி பாபி
இசை: டாம் ஹால்கன்பார்க்
நேரம்: 1 மணி நேரம் 55 நிமிடங்கள்
இயக்கம்: ஆடம் விங்கார்ட்
ரேட்டிங்:

Rating:
3.5/5
Star Cast: கெய்லி ஹாட்டல், மில்லி பாபி
Director: ஆடம் விங்கார்ட்

லாஸ் ஏஞ்சல்ஸ்: காட்ஸில்லா எனும் மான்ஸ்டர் கிரியேச்சரை வைத்து ஹாலிவுட்டில் 30க்கும் மேற்பட்ட படங்களும், கிங்காங்கை வைத்து 15க்கும் மேற்பட்ட படங்களும் வெளியாகி உள்ளன. ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு காட்ஸில்லாவும் கிங்காங்கும் படம் வெளியானது. அதன் 2ம் பாகமாகவே இந்த 'காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்' படம் மார்ச் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதன் ப்ரீமியர் வெளியான நிலையில், அதன் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

சுமார் 1135 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த காட்ஸில்லா அண்ட் காங் படம் வேறலெவல் ஆக்‌ஷன் ட்ரீட்டாக வெளியாகியிருக்கும் நிலையில், அதன் நிறை, குறைகள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக அலசுவோம் வாங்க..

Godzilla x Kong  The New Empire Review in Tamil

ஆர்ஆர்ஆர் கதை போல: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காட்ஸில்லாவும் கிங்காங்கும் கவர்ந்துள்ளன. 2021ம் ஆண்டு வெளியான படத்தில் இந்த இரண்டையும் ஒன்றாக நடிக்க வைத்திருந்தார் இயக்குநர். இந்நிலையில், அந்த இரண்டும் ஒன்றாக ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்வது போல ஒரு பெரிய மான்ஸ்டரை எதிர்கொள்வது தான் இந்த படத்தின் கதை.

ஆக்‌ஷன் அதகளம்: டைட்டன் எனும் பிரம்மாண்டமான மான்ஸ்டர் வில்லனால் ஹாலோ எர்த்துக்கும், சர்ஃபேஸ் எர்த்துக்கும் பிரச்சனை ஏற்பட உள்ள நிலையில், கிங்காங் மற்றும் காட்ஸில்லா ஒன்றாக இணைந்து எப்படி அந்த டைட்டனை வேட்டையாட போராடுகின்றது என்கிற கதையை ஆக்‌ஷன் அனல் பறக்க பிரம்மாண்டத்தின் உச்சமாக கொடுத்துள்ளனர்.

Godzilla x Kong  The New Empire Review in Tamil

எமோஷனல் கனெக்ட்: காங்குக்கு போட்டியாக ஒரு குட்டிக் காங்கை இந்த படத்தில் அறிமுகப்படுத்தி மான்ஸ்டருக்குள்ளும் ஒரு மனசு இருக்கு பாஸ் என்பதை நெஞ்சை நக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதே போல டெலிபதி மூலம் பேசிக் கொள்ளும் பழங்குடியின மக்களின் போர்ஷனும் அதில் வரும் கதாநாயகியின் எமோஷனல் கனெக்ட்டும் சும்மா மிருகங்கள் சண்டை போடும் படமாக அல்லாமல், ஒரு எமோஷனல் பாண்டிங்குடன் பக்கா பேக்கேஜ் செய்து கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர்.

பிளஸ்: மினிமம் 230 ரூபாய் கொடுத்து படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான சிஜி மிரட்டலையும் சென்டிமென்ட், ஆக்‌ஷன், புது உலக அனுபவங்கள் என அனைத்தையும் கொடுத்து அசத்தி விடுகின்றனர். 3டி தொழில்நுட்பம், ஐமாக்ஸ் என அனைத்து டெக்னாலஜியும் இறக்கி படத்தின் இயக்குநர் பார்வையாளர்களை சுமார் 2 மணி நேரம் கட்டிப் போட்டு விடுகிறார். டைட்டன்ஸ் எனும் அந்த மான்ஸ்டரை காட்டும் போது காங் மற்றும் காட்ஸில்லாவை விட பயங்கரமாக இருக்கே என ஆச்சர்யப்பட வைக்கும் இடங்கள் எல்லாம் படத்தை பார்க்கத் தூண்டிவிடும்.

Godzilla x Kong  The New Empire Review in Tamil

மைனஸ்: முழுக்க முழுக்க சிஜி படம் என்பதால், சில இடங்களில் ஃபினிஷிங் சரியில்லை என்கிற குறை இருக்கத்தான் செய்கிறது. மேலும், படத்தி பின்னணி இசை, காங் மற்றும் காட்ஸில்லா பில்டப் காட்சிகளில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சமீபகாலமாக ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோக்கள் படங்கள் சொதப்பி வரும் நிலையில், சொதப்பாமல் இந்த கிங் காங் மற்றும் காட்ஸில்லா வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவிலும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X