Good Bad Ugly Review: குட் பேட் அக்லி விமர்சனம்.. படத்தை பார்க்கலாமா வேண்டாமா? செய்யாறு பாலு பளீச்!

சென்னை: மொத்த தமிழ் சினிமாவும் தற்போது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் குறித்துதான் பேச்சுகள் தான். ஆதிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, சுனில், பிரபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கு தொடர்ந்து பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், செய்யாறு பாலு படம் எப்படி இருக்கு என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " குட் பேட் அக்லி படத்தின் கதை என்பது பெரிய கதை எல்லாம் இல்லை. மிகவும் சாதாரணமான கதைதான். படம் முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக படத்தை எடுத்துள்ளார்கள். அஜித் ஒரு கேங்ஸ்டர், அது தெரிந்துதான் த்ரிஷா அஜித்தை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறக்கும் போது, மருத்துவமனையை அட்டாக் செய்கிறார்கள். அதனால் குழந்தைக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் மிகவும் பயப்படுகிறார். அஜித்தை போலீசில் சரணடையச் சொல்கிறார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே வரும் அஜித், தனது மகனுக்கு இருக்கும் பிரச்னையை சரி செய்ய முயற்சிக்கிறார்.

இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இன்னொரு வெர்ஷன் என்று கூட கூறலாம். காரணம் தீனா, அமர்க்களம் போன்ற படங்களில் அஜித்தை நாம் எப்படி பார்த்தோமோ அதேபோல் இந்த படத்தில் கொண்டுவந்துள்ளார். படம் முழுக்க தல, தல, தல என கூறிக்கொண்டே உள்ளார்கள். விண்டேஜ் அஜித் குமார் நடித்த கதாபாத்திரங்களை ஒரே இடத்தில் குவிக்காமல், கதையோட்டத்தோடு கொண்டுபோய் சேர்த்ததுதான் பிளஸ்.

Good Bad Ugly Review in Tamil Cheyyaru Balu Appreciates Ajithkumar And Aadhik Ravichandran

ரெட்ரோ பாடல்கள்: அதேபோல் பாடல்கள், அதுவும் ரெட்ரோ பாடல்கள் தான் ஹைலைட். ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கும் தனி வரவேற்பு. இப்படியான பாடல்களை வைத்து தியேட்டரை அதிரி புதிரி ஆக்குகிறார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால், அஜித் ரசிகர்களுக்கு மனநிறைவுடன் வெளியே வரும் அளவுக்கு படத்தை கொடுத்துள்ளார். நாங்கள் இந்த அஜித்தைப் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறோம் என ரசிகர்கள் சொன்னதற்காகவே இந்த படத்தை எடுத்துள்ளார் அஜித்.

விஜய் - அஜித்: விஜய்யின் கோட் படத்தில் எப்படி அஜித்தின் ரெஃபரன்ஸ் இருந்ததோ, அதேபோல் குட் பேட் அக்லி இடைவேளை காட்சியில் விஜய்யின், 'ஐ எம் வைய்ட்டிங்' என்ற டயலாக் அஜித் சொல்லும்போது மொத்த திரையரங்கமும் அதிர்கிறது. படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். அஜித்துக்கு அர்ஜுன் தாஸ் வில்லன் எனக் கூறும் போது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அர்ஜுன் தாஸின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்து அவரை வில்லனாக்கி உள்ளார் ஆதிக். அதேபோல் சிம்ரன் வரும் காட்சிகளில் எல்லாம், அவர் வேற லெவலில் ஸ்கோர் செய்கிறார்.

Good Bad Ugly Review in Tamil Cheyyaru Balu Appreciates Ajithkumar And Aadhik Ravichandran

சொதப்பல் எங்கே?: அஜித்தின் வாலி, தீனா போன்ற படங்களில் இருந்து ரெஃபரன்ஸ் வைத்துள்ளது சிறப்பு. 17 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் சரியாக பயன்படுத்தியுள்ளார். பாடல்கள் தொடங்கி, தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசைக்கு கலக்கி உள்ளார். படத்தில் குறையே இல்லையா என்றால், படத்தின் முதல் பாதி கொஞ்சம் சொதப்பல் தான். இந்த கதையை அப்படித்தான் நகர்த்தியாகவேண்டும். ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு இருப்பதால் காமெடி நன்றாக உள்ளதா என்றால், அஜித்தே மிகவும் சைலண்டாக காமெடி செய்துவிடுகிறார்.

Good Bad Ugly Review in Tamil Cheyyaru Balu Appreciates Ajithkumar And Aadhik Ravichandran
தியேட்டரிக்கல்: படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம். ஆனால் இந்த படம் தியேட்டரிக்கல் படம். தியேட்டரில் பார்க்க தரமான படம். தர லோக்கல் அஜித் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுக்காகவே எடுத்துள்ள படம் இது" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X