Good Bad Ugly X Review: ஓவர் பில்டப்பா?.. பிளாக்பஸ்டர் படமா?.. குட் பேட் அக்லி ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் அமெர்க்காவில் வெளியான நிலையில், அதன் ட்விட்டர் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. இந்தியாவில் பெங்களூரில் காலை 8 மணிக்கே குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் காட்சிகள் வெளியாகின்றன.
த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சிம்ரன், பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் வசூலில் மண்ணைக் கவ்விய நிலையில், குட் பேட் அக்லி பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், குட் பேட் அக்லி படம் வொர்த்தா? இல்லையா? என்பது குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை காணலாம் வாங்க..
குட் ஃபார் ஃபேன்ஸ்: ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தின் மூலம் தரமான சம்பவத்தை செய்துள்ளார் என்றும் படம் முழுக்கவே ஒரே பில்டப் தான். கதையோ, எமோஷனலோ இல்லை என கிறிஸ்டோபர் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், குட் ஃபார் ஃபேன்ஸ், பேட் ஃபார் நியூட்ரல்ஸ் அண்ட் அக்லி ஃபார் ஹேட்டர்ஸ் என குட் பேட் அக்லி படத்துக்கு கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
கதையும் இல்லை எமோஷனல் கனெக்ட்டும் இல்லை: ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே ஒரு படத்தை அஜித்துக்காக ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்திருக்கிறார். முதல் பாதி நன்றாக சென்றாலும், இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக் போர்ஷன் மட்டும் அதற்கு பின்னர் கிளைமேக்ஸ் வரை இழுத்துக் கொண்டே சென்று முடித்த விதம் படுமொக்கை. இந்த படத்தில் கதையும் இல்லை, எமோஷனல் கனெக்ட்டும் இல்லை என வெங்கி தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். குட் பேட் அக்லி சூப்பரான படமாக இல்லை என்றாலும், அஜித் நடிப்பில் சமீப காலமாக வந்த படங்களில் இந்த படம் சிறப்பாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.
எண்ட் கார்டு மிஸ் பண்ணிடாதீங்க: குட் பேட் அக்லி படத்தில் நடிக்கும் போது அஜித் குமார் எந்தளவுக்கு என்ஜாய் பண்ணார் என்கிற ப்ளூப்பர்ஸ் வீடியோ எண்ட் கார்டில் வருகிறது. அதை அஜித் ரசிகர்கள் மிஸ் பண்ணிடாதீங்க என இந்த ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித் பட ரெஃபரன்ஸ்கள்: ஏகேவுக்கு மற்ற படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகள் தேவையில்லை. அவரே ஒரு ரெஃபரன்ஸ் டிப்போ தான். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து இன்னும் 3 படங்கள் கூட இப்படி சரவெடியாக கொடுக்கலாம். ரசிகர்களுக்கு அஜித் குமாரை இப்படி மெசேஜ் சொல்லாமல், மாஸாக பார்க்கத்தான் ஆசை என இன்னொரு நபர் விமர்சித்துள்ளார்.
கிரிஞ்சு மூவி: அடுத்த படத்துல பார்த்துக்கலாம் தல. இந்த வருஷம் அஜித்துக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அவ்வளவுதான். குட் பேட் அக்லி பக்கா கிரிஞ்சு மூவி. ஆதிக் ரவிச்சந்திரன் வச்சு செஞ்சுட்டான் என நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











