Guardian Review: கார்டியன் விமர்சனம்.. ஜோதிகாவுக்கு போட்டியா பேயா மாறிய ஹன்சிகா.. படம் எப்படி?
நடிகர்கள்: ஹன்சிகா, பிரதீப் ராயன்
இசை: சாம் சி.எஸ்
இயக்கம்: சபரி & குரு சரவணன்
சென்னை: இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மம்மூட்டியின் பேய் படமான பிரமயுகம் திரையரங்குகளில் ரசிகர்களை மிரட்டி 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் ஹாரர் படமாக உருவாகி உள்ள கார்டியன் படம் இன்று வெளியாகி இருக்கிறது.

கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இதற்கு முன் கூகுள் குட்டப்பா படத்தை குருநாதரை வைத்தே இயக்கி சொதப்பி விட்டனர். இந்நிலையில், ஹன்சிகாவை வைத்து இந்த இரட்டை இயக்குநர்கள் இயக்கிய கார்டியன் படம் மிரட்டலா? உருட்டலா என்பது குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
கார்டியன் கதை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தில் எப்படி ஹீரோ தனது உடம்பை பேய்க்கு வாடகை விட்டு கெட்டவர்களை அழிப்பார்களோ அதே போலத்தான் இந்த படத்தில் ஹன்சிகா அதே வேலையை பார்க்கிறார். யோகி பாபு நடிப்பில் வெளியான பேய் மாமா படத்தின் கதையும் இதே தான். சிறு வயதில் இருந்தே அதிர்ஷ்டமில்லாதவராக விளங்கும் ஹன்சிகாவுக்கு திடீரென நல்ல வேலை, சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் என புரியாமல் யோசிக்கும் அவருக்கு இதெல்லாம் ஒரு ஆவி தான் செய்கிறது என்பது தெரிய வருகிறது. அந்த ஆவி பழிவாங்க துடிக்கும் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்டோரை பழிவாங்க ஹன்சிகா எப்படி உதவுகிறார் என்பது தான் இந்த கார்டியன் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஹன்சிகா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்களே சரியாக போகவில்லை. ஆனாலும், அவரது அழகை ரசிக்க தனிக்கூட்டமே இருந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆக்ஷன் ஹீரோயினாக வேண்டும் என ஹாரர் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் தரமான பேய் படங்கள் பெரிதாக வராத நிலையில், பழைய கதையை பட்டி டிக்கெரிங் பார்த்து வெளியாகி இருக்கும் இந்த படத்தில் ஹன்சிகா முதல் பாதி வரை துரதிர்ஷ்டத்தால் வாடும் பெண்ணாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 2ம் பாதிக்கு மேல் பேய் அவதாரம் எடுக்கும் ஹன்சிகாவின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. ஹன்சிகாவுக்கு ஜோடி வேண்டுமே என்பதற்காக பிரதீப் ராயன் வந்து போகிறார். பிளாஷ்பேக் காட்சி மற்றும் வில்லன்கள் என யாருமே பலமாக இல்லை.
பிளஸ்: ஹன்சிகாவின் நடிப்பு மட்டும் தான் இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் என்று சொல்லலாம். சாம் சி.எஸ். இசை ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு, லைட்டிங் எல்லாம் பரவாயில்லை. கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்ளான சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ஹாரர் படத்தின் முதல் பாதி படத்துக்கு பலமாக உள்ளது.
மைனஸ்: ஹன்சிகாவுக்கு மிகப்பெரிய கம்பேக் கிடைக்குமா என ரசிகர்கள் நினைத்தால் அதற்கு பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். சிம்பு கேமியோ ரோலில் நடித்த மஹா படமும் சொதப்பியது. இந்த கார்டியன் படமும் பல இடங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.


Click it and Unblock the Notifications











