Guntur Kaaram First Review: அலா வைகுந்தபுரமுலோ படத்தை விட சூப்பர்.. குண்டூர் காரம் முதல் விமர்சனம்!

ஹைதராபாத்: இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியான அட்டாரண்டிகி தாரேதி மற்றும் அலா வைகுந்தபுரமுலோ படங்களை விட மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் படு மாஸாக வந்திருப்பதாக முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குண்டூர் காரம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

கோலிவுட்டில் அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், டோலிவுட்டில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆனால், மகேஷ் பாபுவின் மாஸ்க்கு முன்னால் ஹனுமான் படம் அதிக தியேட்டர்கள் கூட கிடைக்காமல் திண்டாடி வருவதாக கூறுகின்றனர்.

Guntur Kaaram First Review is here in Tamil: Mahesh Babu starrer will be a Sankaranti Winner

மாஸ் காட்டுவாரா மகேஷ் பாபு: கடைசியாக கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி உடன் இணைந்து மகேஷ் பாபு நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக எந்தவொரு புதிய படத்தையும் ரிலீஸ் செய்யாத மகேஷ் பாபு இந்த மகர சங்கராந்திக்கு குண்டூர் காரம் படத்தை நம்பி இறக்குகிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முதல் விமர்சனம்: மகேஷ் பாபுவுக்கு இந்த படத்தில் டோலிவுட்டின் இரு இளம் நடிகைகள் ஹீரோயினாக மாறி உள்ளனர். ஸ்ரீலீலா மற்றும் கோட் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி என இருவருமே போட்டிப் போட்டு நடித்து வரும் நிலையில், இந்த படத்துக்கான முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. படத்தை நிஜாம் ஏரியாவில் வாங்கி வெளியிடும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு நேற்று சிறப்பு காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டது. அதை பார்த்த அவர், "பிளாக்பஸ்டர்" என்றும் "அலா வைகுந்தபுரமுலோ படத்தை விட அருமை" என்றும் விமர்சனம் செய்துள்ளார். தணிக்கை செய்யும் போது படத்தை பார்த்தவர்களும் படத்தை பாராட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த முறை மகேஷ் பாபு வசூல் வேட்டை நடத்துவார் என தெரிகிறது.

சலார் வசூலை முந்துமா?: பிரபாஸின் சலார் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகி இதுவரை 700 கோடி வசூலை கடந்துள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் சலார் படத்தின் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X