Gurkha Review: யோகி பாபு பேசினாலே காமெடியா... 'கூர்கா' பாருங்க உண்மை புரியும்! விமர்சனம்

தீவிரவாதிகளிடம் இருந்து பிணையக் கைதிகளை காப்பாற்றும் ஒரு செக்யூரிட்டியின் கதையே கூர்கா.

Rating:
2.0/5
Star Cast: யோகி பாபு, ஆனந்தராஜ், லிவிங்க்ஸ்டன், எலிசா எர்ஹட், திவ்யதர்ஷினி
Director: சாம் ஆண்டன்

சென்னை: தீவிரவாதிகளிடம் இருந்து பிணையக் கைதிகளை காப்பாற்றும் யோகி பாபுவின் கதையே கூர்கா.

கூர்கா வம்சாவளியை சேர்ந்த பகதூர் பாபு (யோகி பாபு) காவல் துறையில் சேர தீவிர முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. காவலர் தேர்வு நடக்கும் இடத்தில் யோகி பாபுவை போலவே சொதப்பும் அண்டர்டேக்கர் எனும் நாயும் யோகிபாபுவுடன் சேர்ந்துகொள்கிறது.

Gurkha review: Its a no comedy movie

காவல் துறையில் வேலை நிராகரிக்கப்படும் யோகி பாபுவுக்கு செக்யூரிட்டி வேலை தருகிறார். மனோபாலா. யோகி பாபு பணியமர்த்தப்படும் அப்பார்ட்மெண்டுக்கு அருகில் அமெரிக்க தூதரக அதிகாரி எலிசாவின் வீடு இருக்கிறது. எலிசா மீது காதலில் விழும் யோகி பாபு, அவரை கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எலிசாவை நெருங்குவது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த நிலையில், எலிசா அடிக்கடி செல்லும் வணிக வளாகத்திற்கு யோகி பாபு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.

Gurkha review: Its a no comedy movie

ஒருநாள் இரவில் எலிசாவை குறிவைத்து தீவிரவாதிகள் அந்த வணிகவளாகத்தை ஹை-ஜாக் செய்கிறார்கள். அப்பாவி மக்களும் யோகி பாபுவின் அமெரிக்க காதலியும் பிணைய கைதிகளாக சிக்கிக்கொள்கிறார்கள். தீவிரவாதிகள் எலிசாவை ஏன் குறிவைக்க வேண்டும்? அவர்கள் நோக்கம் என்ன? யோகி பாபு தன் காதலியையும் மக்களையும் மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

Gurkha review: Its a no comedy movie

தர்ம பிரபு படத்தில் இளைய எமனாக கலக்கிய யோகி பாபுவுக்கு இது நாயகனாக இரண்டாவது படம். முதல் பாதியில் காமெடி என்ற பெயரில் அவர் செய்யும் அலப்பறைகள் கடுப்பை தான் வரவைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்ச நேரம் மட்டுமே சிரிக்க வைக்கிறார். பாமை எடுத்து செயல் இழக்க வைப்பதற்குள் ரவிமரியா, ஆனந்த்ராஜ் இருவருக்கும் யோகிபாபு தரும் அலப்பறைகள் காமெடி சரவெடி.

Gurkha review: Its a no comedy movie

ஹீரோயின் எலிசாவுக்கு கொஞ்ச நேரம் மட்டும் தான் வேலை. சார்லி மற்றும் யோகி பாபுவுடன் சேர்ந்து கொண்டு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். ராஜ் பரத் தீவிரவாத இயக்கத்துக்கு துணை போகிறவராக வந்து மிரட்டுகிறார். அவரது வில்லத்தனம் தான் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. ஆடுகளம் நரேன், ரவி மரியா, ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், மயில்சாமி என ஏனைய நடிகர்கள் அவ்வப்போது வந்து

Gurkha review: Its a no comedy movie
செல்கிறார்கள்.

ராஜ் ஆர்யனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் ஓரளவுக்கு படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு தனியாக பாராட்டும்படியாக இல்லை.

Gurkha review: Its a no comedy movie

படத்தில் லாஜிக் என்பது மருந்துக்குக்கூட இல்லை. காமெடி படத்துக்கு லாஜிக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நகைச்சுவையாவது தூக்கலாக இருக்க வேண்டாமா?. தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுவது கூர்கா மூலம் நன்றாக தெரிகிறது. யோகி பாபு பேசுவது அனைத்தையுமே காமெடியாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. படத்தில் நாயகியின் பெயர் மார்க்ரெட். அதை யோகி பாபு மார்க்கெட் என உச்சரிக்கிறார். இது தான் காமெடி என்றால் படம் எவ்வளவு மொக்கையாக இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.

Gurkha review: Its a no comedy movie

'காமெடிக்கு என தனியாக ஒரு எழுத்தாளரை வைத்து வசனங்களை எழுதி, காட்சிகளை அமைத்திருந்தால் முழு படமும் காமெடியாக இருந்திருக்கும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் கலாய்க்கப்பட்ட விஷயங்களை படத்தில் அதிகமாக பயன்படுத்தி இருப்பது சலிப்பை தான் ஏற்படுத்துகிறது.

Gurkha review: Its a no comedy movie

கடைசி 20 நிமிடங்களைப் போலவே, முழுப் படமும் காமெடியாக இருந்திருந்தால் இந்த 'கூர்கா'வுக்கு மெடல் குத்தி பாராட்டியிருக்கலாம்.

Gurkha review: Its a no comedy movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X