Dear Review: குட் நைட் படத்தை விட பெட்டரா இருக்கா? ஜி.வி. பிரகாஷின் ’டியர்’ ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'டியர்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. வார வாரம் ஜி.வி. பிரகாஷ் படங்கள் வெளியாகி ரசிகர்களை சோதித்து வரும் நிலையில், இந்த படத்தின் டீசரே ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது.
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மணிகண்டன் நடித்த குட் நைட் படத்தின் அட்டுக் காப்பி படமாக இருக்கே என டீசரை பார்த்தே ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர்.

இருந்தாலும் ஆனந்த் ரவிச்சந்திரன் ட்ரீட்மென்ட் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்ற ஒரு சில ரசிகர்களும் கடுப்பாகி விட்டதாக சோஷியல் மீடியாவில் பொங்கி உள்ளனர்.
டியர் திரைப்படம்: டி இயர் என்பதை குறிக்கும் விதமாக 'டியர்' என்கிற தலைப்பை டார்லிங் ஜி.வி. பிரகாஷுக்காக யோசித்து வைத்துள்ளார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். குட் நைட் படத்தில் மணிகண்டன் குறட்டை விடுவதற்கு பதிலாக இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் நபராக நடித்துள்ளார். கணவன் டார்ச்சர் தாங்கமுடியாமல் மீதா ரகுநாத் கஷ்டப்பட்டதை போல இங்கே மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் ஜி.வி. பிரகாஷ் கஷ்டப்படுகிறார்.
குட் நைட் மாதிரி இல்லை: மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படத்துக்கும் இந்த படத்துக்கு குறட்டை என்பதை தவிர வேறு எந்தவொரு ஒற்றுமையும் இல்லை. சிறப்பான படைப்பாகவே இந்த குட் நைட் படம் வந்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பிரம்மாதம். செத்தும் ஆயிரம் பொன் படத்தை இயக்கிய இயக்குநர் இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றவில்லை என இந்த நெட்டிசன் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ஒரே ஜவ்வா இழுக்குறாங்க: டியர் படம் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பியே தியேட்டருக்குப் போய் படம் பார்த்தோம். முதல் பாதி சுமாராக இருந்தது. இரண்டாம் பாதி எல்லாம் ஒரே ஜவ்வாக இழுத்து கருத்து சொல்கிறேன் என கதற விடுகின்றனர். ரம்ஜான் விடுமுறை தினத்துக்கு கூட கூட்டமே இல்லை. ரொம்பவே சுமாரான படம் என இந்த ரசிகர் படத்தை பார்த்து விட்டு சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வாரமும் தலைவலி: ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து போர் அடிக்கும் படங்களை கொடுத்து வருகிறார். தலைவலி பாடல் எல்லாம் வைத்திருக்கும் இந்த டியர் படமும் படு போராக உள்ளது. இந்த வாரமும் தியேட்டரில் தலைவலி தான். புரமோஷனை தவிர்த்து படம் பெரிதாக ஒன்றுமே இல்லை என ரசிகர்கள் டியர் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











