Kalvan Review: கள்வன் விமர்சனம்.. டைனோசரே ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடிச்சாலும் ரிசல்ட் இதுதான்!

Rating:
2.0/5

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
நேரம்: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
இயக்கம்: பி.வி. சங்கர்

சென்னை: கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையாக போரடிக்கும் படங்களாக கொடுத்து ரசிகர்களை கடுப்பேற்றிய வேலையை இந்த ஆண்டு கச்சிதமாக செய்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். அறிமுக இயக்குநர் பி.வி. சங்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கேபிஒய் தீனா, பாரதிராஜா மற்றும் லவ் டுடே இவானா உள்ளிட்ட பலர் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் படம் தான் கள்வன்.

ஏதோ யானை படம் போல புரமோஷன் செய்து வந்த நிலையில், கடைசியாக பாரதிராஜாவை அந்த குழந்தையே நீங்க தான் சார் என்பது போல இயக்குநர் கதை சொல்லியிருப்பார் போல தெரிகிறது. பாரதிராஜா குழந்தை போலவே இருக்கும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு ஆதவன் படத்தில் சூர்யா நடித்தது போல பாரதிராஜா முகத்தை குழந்தையாக வைத்து எடுத்து விட்டார்களா என பதற வைத்து விட்டனர்.

GV Prakash Kumar s Kalvan Review in Tamil

மலையாள நடிகை மமிதா பைஜுவும் ஜி.வி. பிரகாஷும் நடித்து சமீபத்தில் வெளியான ரெபல் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது போதாது என அடுத்த படத்தை வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

கள்வன் கதை: சத்யமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் திருடர்களாக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கேபிஒய் தீனா இருவரும் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் ஊரில் திருடவே இடமில்லை என்பதை அறிந்து பக்கத்து ஊரில் திருட செல்கின்றனர். வழக்கம்போல ஹீரோயின் இவானா வீட்டுக்கு சென்று திருட போகும் இடத்தில் சிக்கி கொள்கிறார் ஜி.வி. பிரகாஷ். அதன் பின்னர் ஹீரோயினுடன் காதல் மலர்கிறது. ஹீரோயினை ஊருக்கு திருமணம் செய்து கூட்டிட்டு வருவார் என பார்க்கும் போது அங்கே செம ட்விஸ்ட்டாக வயதான பாரதிராஜாவை வீட்டுக்கு அழைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். காட்டையும் காட்டு விலங்கான யானையை காப்பாற்ற வேண்டும் என ஆரம்பித்த கதை கடைசியில் முதியவர்களை தவிக்க விடக்கூடாது என முடித்துள்ளனர்.

பிளஸ்: ஜி.வி. பிரகாஷ் குமார் படத்துக்கு படம் தன்னை ஹீரோவாக மெருகேற்று மெனக்கெட்டு முயற்சி எடுத்து வருகிறார். அவரது இசையில் சில பாடல்கள் கை கொடுத்துள்ளன. கேபிஒய் தீனா இந்த படத்தில் காமெடியில் கொஞ்சம் ஸ்கோர் செய்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைப்பது பிளஸ் ஆக மாறியிருக்கிறது.

மைனஸ்: படத்தின் கதை மற்றும் திரைக்கதை சிறப்பாக இல்லாத நிலையில், படம் ரொம்பவே போர் அடிக்கிறது. பாரதிராஜாவை இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவானாவுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட ஸ்கோப் அதன் பின்னர் வழக்கம் போல ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமா செய்யும் துரோகம் போல காணாமல் போய் விடுகிறது. கள்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் போல்டாக ஒரு விஷயத்தை சொல்லியிருப்பார். யானை வச்சு எடுத்தாலும், டைனோசர் வச்சு எடுத்தாலும் கதை நல்லா இருந்தாதான் ஓடும் என அது 100 சதவீதம் உண்மை என்பது படத்தை பார்த்தால் புரியும். பேரரசு சொன்னது போல பிள்ளையார் போல யானை இருப்பதால் கள்வன் படம் கல்லா கட்டாது. அடுத்து ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள டியர் படம் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X