லிவிங் டுகெதர் பரிதாபங்கள்.. கோலிவுட்டின் விஜயதேவரகொண்டா ஜிவியின் பேச்சுலர் படம் எப்படி இருக்கு?
சென்னை: ரிலீசாகாமல் அரை டஜன் படங்கள் வெயிட்டிங்கில் இருக்க புதிதாக அரை டஜன் படங்களில் புக் ஆகி வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான பேச்சுலர் திரைப்படம் வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்களாக இந்த படம் எப்போ ரிலீசாகும் என எதிர்பார்த்து காத்திருந்த இளைஞர்களுக்கு தியேட்டரில் செம ட்ரீட் என்றே சொல்லலாம்.
செல்வராகவன் படங்கள், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களை பார்த்த இளைஞர்களுக்கு இந்த படமும் நிச்சயம் பிடிக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
பேச்சுலர் கதை
லிவிங் டுகெதர் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் பெருகி வரும் சூழலில் பியார் பிரேமா காதல் உள்ளிட்ட சில படங்கள் அது பற்றி பேசிய நிலையில், அதன் வலிகளை பெண்களுக்கு அதனால் நிகழும் உண்மையான பாதிப்புகளை எடுத்து கூறியிருக்கிறது இந்த பேச்சுலர் திரைப்படம்.
டார்லிங்
டார்லிங் படத்தில் நடித்த ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் டார்லிங் எனும் கதாபாத்திரமாகவே நடித்துள்ளார். கோவையை சேர்ந்த இளைஞர் பெங்களூரு ஐடி கம்பெனிக்கு வேலைக்கு செல்வதும் அங்கே ஹீரோயின் உடன் லிவிங் டுகெதரில் ஜாலி பண்ணுவதும் பிரச்சனை வந்த உடன் கேர்ஃப்ரீ ஆளாக மாறி நடிப்பில் அசால்ட் காட்டுகிறார்.
யாருடா இந்த பொண்ணு
சுப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை திவ்ய பாரதி யாருடா இந்த பொண்ணு என்னம்மா நடிக்கிறா என இளைஞர்களை வாய் பிளக்க வைத்துள்ளார். லிவிங் டுகெதர் உறவில் கர்ப்பமாகி விட ஜிவி பிரகாஷ் அபார்ஷன் செய்ய சொல்ல அதை மறுத்து தாய்மை உணர்வோடு வலியால் வாடும் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
சொதப்பல்
முதல் பாதி செம இன்ட்ரஸ்ட்டிங்காக அடல்ட் காதல் கதையாக நகர்ந்து செல்ல இரண்டாம் பாதிக்கு மேல் தரை தட்டிய கப்பலாக படம் தள்ளாடுகிறது. ஸ்லோ மோஷனில் படம் நீண்ட நேரம் செல்வதால் பலர் தூங்கி விழுந்து விட்டதாகவே கமெண்ட் அடித்துள்ளனர்.
சதீஷ் பாராட்டு
ஜிவி பிரகாஷின் பேச்சுலர் திரைப்படத்தை பார்த்து ஏகப்பட்ட பிரபலங்களே பாராட்டி ட்வீட் போட்டு வருகின்றனர். காமெடியன் டு ஹீரோவாக மாறியுள்ள சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பேச்சுலர் படம் பார்த்தேன். ஜிவி பிரகாஷின் நடிப்பு அபாரம். படம் கண்டிப்பா ஹிட் என பாராட்டி உள்ளார்.
அதுல்யா ரவி பாராட்டு
படம் ரொம்ப நேச்சுரலா இருக்கு.. ஜிவி பிரகாஷ் மற்றும் ஹீரோயின் திவ்ய பாரதியின் நடிப்பு அற்புதம். படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என நடிகை அதுல்யா ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பேச்சுலர் படத்தை பாராட்டி உள்ளார்.
Recommended Video
செல்வராகவன் ஸோன்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உறவை செல்வராகவன் ஸோனில் முதல் பாதியில் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் நல்லாவே செய்திருக்கிறார் என விமர்சகர்கள் பேச்சுலர் படத்தை பாராட்டி உள்ளனர். ஆனால், இரண்டாம் பாதியில் வரும் கோர்ட் டிராமா தான் படத்தின் கதையை தாங்கும் விஷயமாக இருந்தாலும் அது ரொம்பவே ஸ்லோவாக செல்வது படத்தை பாதிக்கிறது என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











