twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலைப் பிரிக்கும் மதமும் அரசியலும்தான், சென்சாரில் சிதைந்த ஜிப்ஸி!

    By
    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள் : ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ்
    இயக்கம்: ராஜுமுருகன்

    மதக்கலவரத்தால் பிரியும் நாடோடி இசைக் கலைஞனும் இஸ்லாமிய வஹிதாவும் இணைந்தார்களா என்பதுதான் ஜிப்ஸி!

    காஷ்மீரில் இந்து தந்தைக்கும், முஸ்லீம் தாய்க்கும் பிறக்கும் குழந்தையை, நாடோடி ஒருவர் ஜிப்ஸி (ஜீவா) என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஊர் ஊராகப் பயணம் செய்யும் நாடோடி இசைக் கலைஞன் ஜிப்ஸி, நாகூருக்கு வருகிறார். அங்கு, இஸ்லாமிய பெண் வஹிதாவுக்கு (நடாஷா சிங்) குதிரையை வைத்து வேடிக்கை காட்டும் ஜிப்ஸி மீது காதல்.

    Recommended Video

    மொத்தம் 50 சென்சார் cut | GYPSY AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

    காசியில், தங்கள் வாழ்க்கையை துவக்குகிறார்கள் இருவரும். அங்கு நடக்கும் மத கலவரம், நிறைமாத கர்ப்பிணியான வஹிதாவை நாகூருக்கும், ஜிப்ஸியை ஜெயிலுக்கும் தள்ளுகிறது. இருவரும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் பரபரக்கும் மீதிக் கதை.

    மத அரசியல்

    மத அரசியல்

    சென்சாரில் சிக்கி சின்னா பின்னமான பின், சுமார் ஒரு வருடத்துக்குப் பின் தியேட்டருக்கு வந்திருக்கும் படம். இந்தியாவில் மதத்தை அரசியலில் இருந்து பிரிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் இயக்குனர். ஜிப்ஸியாக அலையும் கேரக்டர் ஜீவாவுக்கு. நடை, உடை, பாவனையோடு, நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

    நடாஷா சிங்

    நடாஷா சிங்

    அதிகார வர்க்க கிண்டல், காதலில் விழுந்து உருகுவது, காதலியை பிரிந்து தவிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வஹிதாவாக, நடாஷா சிங் சிறப்பான அறிமுகம். இஸ்லாமிய பெண் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார். கலவரத்துக்குள் மாட்டிக் கொள்ளும் நிலையில் அந்தப் பதைபதைப்பை, உயிர் பயத்தை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்க வேண்டாமா?

    லால் ஜோஷ்

    லால் ஜோஷ்

    நடாஷாவின் அப்பாவாக வரும், மலையாள இயக்குனர் லால் ஜோஷ், கம்யூனிஸ்ட் தலைவரான சன்னி வேய்ன் (இவரும் மலையாள வரவுதான்), மத வெறியராக வரும் விக்ராந்த் சிங் உட்பட அனைவரும் சிறப்பான தேர்வு. செல்வகுமாரின் ஒளிப்பதிவு இந்தியா முழுவதும் அலைந்து திர்ந்து அழகாகச் சுற்றிக் காட்டுகிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம்.

    அழுத்தமில்லாமல்

    அழுத்தமில்லாமல்

    கட்டுப்பாடுள்ள குடும்பத்தை விட்டு நடாஷா வெளியேற வலுவான காரணம் இல்லை. பலவீனமான திரைக்கதை, காட்சி அமைப்புகளால் பெரும்பாலான காட்சிகள் அழுத்தமில்லாமல், கடக்கிறது. பிரசாரத் தொனியிலேயே சிலர் பேசும் வசனங்கள், சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. இருந்தாலும் இப்படியொரு கதை களத்தை துணிச்சலாக எடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

    English summary
    A nomadic musician fall in love with orthodox Muslim girl,their relationship becomes a big question following a communal riot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X