Happy Raj X Review: ஜி.வி. பிரகாஷின் ‘ஹாப்பி ராஜ்’ ட்விட்டர் விமர்சனம்.. படம் தேறுச்சா? இல்லையா?

சென்னை: டார்லிங், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை என ஜி.வி. பிரகாஷ் நடித்த படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், அவர் தொடர்ந்து பல நல்ல திரைக்கதைகளையும் குறிப்பாக பல இளம் நடிகைகளையும் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் ஒவ்வொரு வாரம் ஒரு படம் ரிலீஸ் பண்றாருன்னு கலாய்க்கப்பட்டாலும் அவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. இசையமைப்பாளராக ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படம் எப்போது ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அப்படியொரு படமாக ஹாப்பி ராஜ் வந்துள்ளதாக நேற்று படத்தின் சிறப்பு ப்ரீமியர் காட்சியை பார்த்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Happy Raj X Review in Tamil  GV Prakash Kumar fun overloaded movie getting positive reviews
Photo Credit:

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் தனது முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் ஜி.வி. பிரகாஷை விட ஜார்ஜ் மரியன் தான் செம ஸ்கோர் செய்துள்ளார் என்று படத்தை பார்த்தவர்கள் பாராட்டியுள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

கலர்ஃபுல் காமெடி படம்: சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி எந்தளவுக்கு முக்கியம் என்பதை புரிந்துக் கொண்டு தொடர்ந்து அறிமுக இயக்குநர்கள் தங்கள் படங்களில் சொல்ல வரும் முக்கியமான கன்டென்ட்டை காமெடி கலந்து சொல்லி வருகின்றனர். ஆனால், அதை பிரபல இயக்குநர்கள் தவற விட்டது தான் நிறைய தோல்வி படங்கள் தமிழில் கடந்த ஆண்டு வெளியானது என்கின்றனர். இந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி, யூத் என அனைத்து படங்களிலும் காமெடி மற்றும் கடைசியாக சொல்லப்பட்ட மெசேஜ் நல்லாவே வொர்க்கவுட் ஆனது. அந்த வரிசையில், ஹாப்பி ராஜ் படத்திலும் ஒரு சூப்பரான மெசேஜ் காமெடியுடன் கலந்துக் கொடுக்கப்பட்டுள்ளது என படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜார்ஜ் மரியன் மாஸ்: ஜி.வி. பிரகாஷ் படத்தின் ஆரம்பத்தில் இருந்த லுக் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீகெளரி ப்ரியாவால் மாறுவது போல படமும் ஆரம்பத்தில் கொஞ்சம் தேக்க நிலையில் சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு ஜார்ஜ் மரியனின் நடிப்பால் படம் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. வழக்கம் போல ஸ்ரீகெளரி ப்ரியா தனது நடிப்பில் கலக்கியுள்ளார். டிராகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் ஜார்ஜ் மரியனுக்கு ஸ்ட்ராங்கான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது என சித்தார்த் ஸ்ரீனிவாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

படக்குழு ஹாப்பி: சத்யம் தியேட்டரில் நேற்று இரவு திரையிடப்பட்ட ஹாப்பி ராஜ் ஸ்பெஷல் ப்ரீமியர் நிகழ்ச்சியை பத்திரிகையாளர்களுடன் கண்டு ரசித்த ஹாப்பி ராஜ் படக்குழுவை சேர்ந்த ஜார்ஜ் மரியன், ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகெளரி ப்ரியா, மதுரை முத்து, சோபா பாய் ரசூல் மற்றும் படத்தின் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் உள்ளிட்டோருக்கு வாழ்த்து மழை பொழிய படக்குழுவே ஹாப்பி ஆகிவிட்டனர்.

உருவத்தை வைத்து எடை போடக்கூடாது: ஒருவரது உருவத்தை வைத்து எடை போடக்கூடாது மற்றும் இன்செக்யூரிட்டியால் அவதிபடக்கூடாது என்பதை தந்தை மகன் பாண்டிங் கதையாக வைத்து கொடுத்துள்ளனர். ரொம்ப நாளாச்சு தமிழில் இப்படியொரு ஃபீல் குட் படத்தை பார்த்து. ஜி.வி. பிரகாஷுக்கு கண்டிப்பாக இது பிளாக்பஸ்டர் படமாக அமையும். ஜார்ஜ் மரியன் சாருக்கு ஒரு பெரிய சல்யூட் என சாம் ஆண்டன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் மக்கள் பார்ப்பதற்காக இந்த படம் வெளியாகிறது. கடந்த வாரம் யூத் படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைத்தது போல கண்டிப்பாக இந்த வாரம் ஹாப்பி ராஜ் படம் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X