புஷ்பா 2 படம் எப்படி இருக்கு?.. வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன்.. ஆத்தாடி தொங்கவிட்டுட்டாரே

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புஷ்பா 2. படத்தின் முதல் பாகம் ஏற்கனவே மெகா ஹிட்டடித்ததன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்போடு நேற்று பான் இந்தியா அளவில் வெளியானது படம். ரசிகர்களும் ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றனர். இந்தச் சூழலில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் புஷ்பா 2 படத்துக்கு தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. ஏற்கனவே அல்லு அர்ஜுனும், சுகுமாரும் இணைந்த படங்கள் தெலுங்கு சினிமாவில் ஹிட்டடித்திருந்தன. எனவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை அல்லுவின் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அளவில் அந்தப் படம் வசூலை வாரி குவித்தது. மேலும் அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோருக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

pushpa 2  blue sattai maran                     2

புஷ்பா 2: சூழல் இப்படி இருக்க புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புஷ்பா 2 கடந்த சில வருடங்களாக உருவாகிவந்தது. அந்தத் தாமதத்துக்கு அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் பிரச்னைகள், படத்தை இரண்டு முறை ஷூட் செய்ததுதான் காரணம் என்று ஏகப்பட்ட தகவல்கள் பரவின. இருந்தாலும் படம் எப்படியாவது வெளியாகிவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் புஷ்பா 2வுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

நேற்று ரிலீஸ்: ஒருவழியாக படமானது பான் இந்தியா அளவில் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் மொத்தம் 3,000 திரையரங்குகளில் படம் ரிலீஸானது. ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றனர். முக்கியமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கண்டது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தனர். இருந்தாலும் ஈவ்னிங் ஷோவில் எல்லாம் படம் கலவையான விமர்சனத்தை சந்திக்க ஆரம்பித்தது.

அல்லு அர்ஜுன் ஷோ: முக்கியமாக வழக்கமான தெலுங்கு மசாலா படம்தான் என்றும்; அல்லு அர்ஜுன் மட்டும்தான் இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக தோளில் சுமந்திருக்கிறார். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு சீனும் பட்டையை கிளப்புகிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். அதேசமயம் முதல் பாகத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால் இதில் அப்படி இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது என்றும் தங்களது கருத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் முதல் நாளில் 175 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் புஷ்பா 2 படத்தின் விமர்சனத்தை கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “புஷ்பா படத்தின் முதல் பாகம் ஏன் ஓடியது என்பதே தெரியாத விஷயம். இதில் இரண்டாம் பாகத்தை வேறு எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி என்னமோ ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியெல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. படத்தின் முதல் சீனிலேயே ஜப்பான் காரன் தமிழில் பேசுகிறான், இங்கிருந்து அங்கு சென்றவன் ஜப்பானிய மொழியில் பேசுகிறான். இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

முதல் பாதியில் சில சீன்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு சீனையும் ஜவ்வாக இழுத்து வைத்திருக்கிறார்கள். அதேசமயம் டெக்னிக்கலாக படம் சூப்பராக இருக்கிறது. எல்லோரும் சொல்வார்கள் இந்தப் படத்தை ஹீரோ தனது தோளில் சுமந்திருக்கிறார் என்று. அப்படி சுமந்துதான் அல்லு அர்ஜுனின் தோள்பட்டை ஒருபக்கம் சைடு வாங்கிடுச்சு போல. முடிவாக இந்தப் படத்தை பார்க்க ஒரு மன தைரியம் வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X